Archive for the ‘அழகிரி’ Category

தமிழகத்தில் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள் அல்லது காசுக்கு ஓட்டுப் போடுகிறார்கள்! விக்கிலீக்கின் மாபெரும் கண்டுபிடிப்பு!!

மார்ச் 16, 2011

தமிழகத்தில் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள் அல்லது காசுக்கு ஓட்டுப் போடுகிறார்கள்! விக்கிலீக்கின் மாபெரும் கண்டுபிடிப்பு!!

இந்தியர்களின் மாற்றமுடியாத கூலி-அடிமை மனப்பாங்கு: இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் எதையும் வெளிநாட்டுக்காரன் சொல்ல வேண்டும், அதிலும் வெள்ளைக்காரன் சொல்லவேண்டும் அப்பொழுது தான் ஒப்புக் கொள்வார்கள் என்ற எண்ணம் அவ்வப்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகள் பணம் கொடுக்கிறார்கள் என்பது, ஊரறிந்த, உலகறிந்த விஷயம் தான். தமிழ் நாளிதழ்கள்[1] பல புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும் விக்கிலீக் கண்டு பிடித்து சொல்லும்போதுதான், “தி ஹிந்து” போன்ற பத்திரிக்கைகளுக்கு துணிவு வருகின்றது[2]. இந்தியா டுடேவிலும் எதே விஷயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்[3].

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுப்பதும் கட்சிகளுக்கு ஆதாயமாக சீடுக் கொடுப்பதும் ஒன்றுதான்: பணம் கொடுப்பதைப் பற்றி பேசுகிறார்கள் சரி, தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் சண்டைப் போட்டுக் கொள்கிறார்களே, அது எதில் சேர்த்தி? தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியாவில் சாதாரண விஷயம் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் விக்கிலிகீஸ் தகவல் கூறுகிறது[4]. அழகிரியைப் பொறுத்த வரைக்கும் இது தெரிந்த விஷயம் தான்[5]. ஏனெனில் அப்பொழுது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. இதைப்பற்றிய வீடியோவை இங்கே பார்க்கலாம்[6].
விக்கிலீக்ஸின் கண்டுபிடிப்பு: உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியா தொடர்பான விவரங்களை விக்கிலீக்ஸ், “த ஹிந்து” நாளிதழுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இதுவரை விக்கிலீக்ஸ் வெளியிடாத இந்தத் தகவல்களை நேற்று முதல் ஹிந்து வெளியிட்டு வருகிறது. மற்ற நாளிதழ்களிலும் வந்துள்ளன[7]. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுத்தாக ஆந்திரா மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், அவர்கள் உதவியாளர்களும் ஒப்புக் கொண்டதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரடரிக் கப்லான் அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக குழுவிடம் கார்த்தி சிதம்பரம், ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் நம்பிக்கைக்குரிய முன்னாள் மதுரை மேயர் எம். பட்டுராஜன், ஆந்திராவைச் சேர்ந்த மஜ்லிஸ் இ இத்தன்ஹதுல் முஸ்லிமீனைச் சேர்ந்த எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்களும், தங்கள் உதவியாளர்களும் வாக்களர்களுக்கு எவ்வாறு பண பட்டுவாடா செய்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி பேசியுள்ளனர்[8].

தென் இந்தியாவில் சாதாரணமான ஒன்று: 13-5-2009 அன்று அனுப்பப்பட்டுள்ள கேபிளில் கப்லான் தேர்தல் பணிகளை பண பலம் எவ்வாறு ஆட்டி படைக்கிறது என்று இந்த துறையில் உள்ள பலரிடம் சேகரித்த தகவல்களை அனுப்பியுள்ளார்.  வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம், பொருள் முதலியவை கொடுப்பது என்பது தென் இந்தியாவில் சாதாரணமான ஒன்று. ஏழை வாக்காளர்கள் வேட்பாளர்கள் ஏதாவது கொடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.  அவர்களும் வாக்களர்களின் எதிர்பார்ப்புகளை எப்படியாவது பூர்த்தி செய்கின்றனர். கிணறு வெட்ட பணம் கொடுப்பதில் இருந்து, காலையில் செய்தித்தாள் கொடுக்கும்போது அதற்குள் பணத்தை வைத்து கொடுத்து வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பது வரை செய்தவற்றை எல்லாம் அரசியல்வாதிகளும், அவர்கள் ஆட்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். தென்னிந்தியாவில் சாதாரணமான விஷயம் என்று ஏதோ தனிமைப் படுத்துவது போல செய்திகளை வெளியிட்டுள்ளனர். உண்மையில், இந்த விஷயத்தில் காங்கிரஸை யாரும் வெல்ல முடியாது.

மக்களின் மனங்கள் மாறாதா? இதற்கான பணம் கட்சி நிதி திரட்டுவதன் மூலம் கிடைக்கிறது. இவ்வாறு பணம் கொடுப்பதால் வாக்காளர்களின் மனம் மாறுகிறதா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், சில நேரங்களில் நிச்சயம் மனம் மாறத்தான் செய்கிறது. கப்லானும், அவரது சக ஊழியர்களும் சென்ற இடங்களில் எல்லாம் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் லஞ்சம் என்பது தேர்தல் நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றே கூறினர். இந்த குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சேரிப் பகுதிகளுக்கு சென்றபோது தேர்தல் நேரத்தில் அங்குள்ள மக்கள் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்ப்பதை தெரிந்து கொண்டனர்.

லஞ்சத்தில் ஊறிய கட்சிகள் பணம் கொடுப்பதில் ஒன்ரும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை: அரசியல் வல்லுநர் ஒருவர் அவர்களிடம் கூறுகையில், பிரச்சாரத்திற்கு சேரிப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. அங்குள்ள மக்கள் தொகையும், அவர்கள் வறுமையும் லஞ்சம் மூலம் அவர்களை சுலபமாக வாங்கிவிடச் செய்கிறது என்றார்.  சென்னையில் உள்ள ஒரு என்ஜிஓ அமைப்பு கூறுகையில், தமிழகத்தில் வாக்காளர்களைக் கவர அவர்களுக்கு திமுகவும், அதிமுகவும் எப்பொழுதுமே லஞ்சம் கொடுக்கும். அவர்கள் பணப் பட்டுவாடாவுக்கென்று தனி முறை வைத்துள்ளனர்.  தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் அரிசி மூட்டையில் பணத்தை கொண்டு வருவார்கள். அவர்களிடம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்வர். ஏஜென்டகள் வழக்கமாக தேர்தல் ஆணையம் தூங்கும்போது நடுராத்திரியில் குறிப்பாக 2 முதல் 4 மணிக்குள் தான் வருவார்கள்.

அரசியலில் பணப்புழக்கத்தை விட்டவர் அழகிரி: இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா?: இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு அரசியலில் பணப்புழக்கத்தை விட்டவர் அழகிரி என்பது கப்லானின் கருத்து. அழகிரியின் நம்பிக்ககைக்கு பாத்திரமான பட்டுராஜன் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்களை இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஒப்புக் கொண்டார். இது ஒன்றும் பெரிய ரகசியம் எல்லாம் கிடையாது. அழகிரி திருமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 5 ஆயிரம் கொடுத்தார் என்று பட்டுராஜன் கேபிளில் கூறியுள்ளார். “இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா?” என்ற தலைப்பில் கப்லான் எழுதிய கட்டுரையில் திருமங்கலத்தில் திமுக எவ்வாறு பணப்பட்டுவாடா செய்தது என்று விளக்கமாக கூறியுள்ளார்.

திருமங்கலத்தில் அளவிற்கு அதிகமாக வரைமுறைகள் மீறப்பட்டன: வழக்கமாக நடுராத்திரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக திருமங்களத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு செய்தித்தாள்களில் ஒரு கவரில் பணம் வைத்து கொடுக்கப்பட்டது. அந்த செய்தித்தாள்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக வாக்காளர் சீட்டு வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அனைவரும் லஞ்சம் வாங்க வற்புறுத்தப்பட்டுள்ளனர். செய்தித்தாள்களில் வைத்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை பட்டுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.  மதுரையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி எஸ். கண்ணன் தூதரக ஊழியர்களிடம் கூறுகையில், திருமங்கலத்தில் தலைக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது அனைத்தையுமே மாற்றிவிட்டது. இது முன்பு கொடுக்கப்பட்ட தொகையை விட ரூ. 500 அதிகம் என்றார். 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திருமங்கலத்தில் செய்ததுபோல் பணம் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏனென்றால் சட்டசபை தொகுதியை விட மக்களவை தொகுதி 7 மடங்கு பெரியது. இருப்பினும் செய்தித்தாள் முறை மூலம் பணம் கொடுக்கத்தான் அழகிரி திட்டமிட்டுள்ளார்.
நிதியமைச்சரின் மகன் மணத்தை வாரியிரைத்தது-கார்த்தி சிதம்பரம்[9]:: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தான் கவனித்துக் கொண்டார். கார்த்தி சிதம்பரம் ஓட்டுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அவ்வாறு செய்வது தவறு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சிவகங்கை தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது சாத்தியம் இல்லை என்று தான்.  கேபிளில் பெயர் குறிப்பிடாத தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சென்னையில் உள்ள தூதரக குழுவிடம் கூறுகையில், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் சிறப்பாக செய்லபடுகிறார். அவர் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது தந்தை அவ்வாறு செய்யமாட்டார் என்றார். தனது தந்தையை ஆதரிக்கும் சில கிராமவாசிகளுக்கு பணம் கொடுத்ததை கார்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். பெரும்பாலான கிராமங்கள் உள்ளூர் கோயில்களுக்கும், சத்திரங்களுக்கும் நன்கொடை கேட்டன என்றார்.

மஜ்லிஸ் ஒவைசி பற்றி கேட்கவே முடியாது. ஹைதராபாத்தின் தாதா போல இருப்பதால், யாரும்ம் ஒன்றும் செய்யமுடியாது: இது தவிர ஒவைசி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். நான் கிணறு வெட்ட பணம் கேட்டவர்களுக்கு கட்சியினர் மூலம் ரூ. 2 ஆயிரம் கொடுத்து அவர்கள் கிணறு தான் வெட்டுகிறார்களா என்று கண்காணிக்குமாறு கூறினேன். நான் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கவில்லை, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தேன். நான் ஒரு அனாதைப் பெண்ணின் திருமணத்திற்கு ரூ. 35 ஆயிரம் கொடுத்தேன். இவ்வாறு பணம் கொடுப்பது சட்டவிரோதமில்லையா என்று கேட்டதற்கு ஆமாம், ஆனால் இது தான் ஜனநாயகம் என்று பதில் அளித்துள்ளார்[10].

காசுக்காக ஓட்டு – காங்கிரஸ்காரர்களின் செய்முறை: காங்கிரஸ்-அதாவது ராஜிவ் மற்றும் சோனியா கீழ் உள்ள காங்கிரஸ்காரகளின் பணப்பட்டுவாடாவை யாரும் மிஞ்சமுடியாது[11]. அங்கு மேலா/விழாக்களை நடத்தி விருந்து கொடுத்து, பணத்தைக் கொடுத்து அனுப்புவார்கள். ஊர்களில் சர்பஞ்சுகள் மக்களை கவனித்துக் கொள்வார்கள். ரகுல் காந்தி சுற்ரி வருவதே அந்த வேலைக்காகத்தான். இளைஞ்சர் காங்கிரஸ் என்று அவர்களும் கவனித்துக் கொள்வார்கள். ஏனெனில் அவர்களது ஆதிக்கம் அந்த அளவிற்கு உள்ளது. 40 ஆண்டுகளாக மாறி-மாறி ஆட்சியில் இருந்து வந்ததால், விசுவாசிகளான அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முதலியோரை பயன்படுத்து அவர்கள் அந்த வேலையை செய்து வருகிறார்கள். சோனியா வந்த பிறகு, மிகவும் ஜாக்கிரதையாக, விஞ்ஞான ரீதியில் “கார்பொரேட் ஸ்டைலில்” செய்து வருகிறர்கள்.

காங்கிரஸின் ஃபார்முலா- மொத்தமாக வாங்குவதில் சிறிது கொடுப்பது, சிறிது கொடுத்து அதிகமாக பெறுவது: காங்கிரஸ்காரர்கள் பணம் வாங்காமல் ஓட்டு போடவே மாட்டார்கள்[12]. நரசிம்ம ராவ் கோடிகளில் லஞ்சமமகக் கொடுத்துள்ளார்[13]. வீரப்ப மொய்லி அன்றைக்கு லஞ்சங்களில் பணம் கொடுத்துள்ளார். “மொய்லி டேப்” என்று அவ்விவகாரம் பேசப்பட்டது[14]. இன்றோ அவர் சட்ட அமைச்சராக வேறு இருக்கின்றார்! முன்பு சாலினி தாய் என்பவர் மூலம் சூட்கேஸுகளில் கோடிக்கணக்கான பணம் கர்நாடகாவிற்கு அனுப்பப் பட்டதை மக்கள் மறந்து விட்டார்கள் போலும். ஊடகங்களையும் ஆட்டிப் படைப்பதால், காங்கிரஸைப் பற்ரிய செய்திகள் வரவிடாமல் தடுக்கப் படுகின்றன. உதாரணத்திற்கு ராஜ்தீப் சர்தேஸாய் என்ற டிவிக்காரர் காங்கிரஸுக்கு சாதகமாக வேலைசெய்துள்ளார்[15]. இவரைப் போன்று மற்ற செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்களும் இருக்கின்றார்கள். சமீபத்தில் நீரா ராடியா டேப்புகளில் இவர்களது பவுஷு எல்லாம் அப்பட்டமாக வெளிவந்தன.

வேதபிரகாஷ்

16-03-2011


[1] குறிப்பாக தினமலரில் பல செய்திகள், புகைப் படங்களுடன் வந்துள்ளன.

[2] Sarah Hiddleston, Cash for votes a way of political life in South India, The Hindu, Wednesday, Mar 16, 2011; http://www.hindu.com/2011/03/16/stories/2011031661990100.htm

[7]

[8] In conversations with a visiting consulate team, Karti Chidambaram of the Congress, M. Patturajan, confidant of Union Minister for Chemicals and Fertilizers M.K. Alagiri and former Mayor of Madurai, and Member of Parliament Assaduddin Owaisi of the Majlis-e-Ittenhadul Muslimeen spoke without inhibition about how they, their principals, or their parties made payments to voters during the election campaign.

[9]சமீபத்தில் சிதம்பரத்தின் பிறந்த நாளின் போது சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில், நடைபாதைகளை ஆக்கிரமித்து பெரிய அள்வுகளில் கட்-அவுட் வைத்து, நிறைய செலவு செய்தபோது, பொது மக்கள் எப்படி இந்த ஆளுக்கு இவ்வளவு பணம் வந்தது என்று கேட்கத்தான் செய்தார்கள். அதாவது, ஒவ்வொரு வருடமும் அவ்வாறு கொண்டாடினால், பணத்தை வாரியிரைத்தால், யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், திடீரென்று பணத்தின் ஆபாசத்தை, அசிங்கத்தை செலவில் காட்டும்போது, மக்கள் அதை புரிந்து கொள்வார்கள்.

http://www.deccanchronicle.com/channels/cities/chennai/karti%E2%80%99s-game-dravidian-politics-461

[10] Surprised by such candid responses, the U.S. Consulate-General officials asked Mr. Owaisi if donations like wells or marriage fees were not illegal. “Of, course,” came the reply, “but that’s the great thing about democracy.”

[12] http://www.mid-day.com/news/2010/aug/090810-sadaf-aboli-youth-congress-cash-for-vote-scandal.htm

இது அமெரிக்காவிற்கு என்ரு நினைக்க வேண்டாம், இந்தியாவிலும் அப்படித்தான்! http://totalbuzz.ocregister.com/2010/12/27/congress-members-take-cash-then-vote/46192/

[14] The ‘Moily tape’ case was In 1984, the then Leader of Opposition M Veerappa Moily allegedly tried to lure  Independent MLA C Byregowda by offering Rs 2 lakh. His reported intention was to topple Ramakrishna Hegde-led Janata Party government. Then the matter was referred to Justice N D Venkatesh Commission. The Commission exonerated Moily on the grounds that authenticity of the tapes could not be established.

http://www.deccanherald.com/content/106759/seedy-history-cds-state-politics.html