Archive for the ‘அரசு ஆஸ்பத்திரி’ Category

ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (1)

நவம்பர் 1, 2017

ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (1)

Sardar Patel Corruption free India

ஊழல் எதிர்ப்பும், தமிழகமும்: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதையொட்டி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் நிகழாண்டு ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆணையம் விடுத்துள்ள அழைப்பில், “ஊழல் ஒழிப்பிலும், ஒருமைப்பாட்டிலும் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல்’ என்ற தலைப்பில் கொண்டாடவும், மேலும் ஒருமைப்பாட்டு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மத்திய அரசு, ஊழல் ஒழிப்பு வாரமும் கொண்டாடி வருகிறது. அந்நிலையில் தமிழகத்தை நினைத்துப் பார்த்தால், எவ்வாறு அனைவரும் போலித்தனமாக செயல்பட்டு கொண்டு வருகிறார்கள் என்பதை கவனிக்கும் போது திடுக்கிட வைப்பதாக உள்ளது. லஞ்சம் கொடுக்காதவனே தமிழகத்திலில்லை என்ற நிலைதான் உள்ளது. லஞ்சம் கொடுக்காதே, வாங்காதே என்று எந்த திராவிடத் தலைவனையாவது முன்னிலைப் படுத்தி விளம்பரம் கொடுக்க முடியுமா? ஜாதி வாரியாக, மதரீதியில், குறிப்பிட்டத் தலைவர்களை மையப்படுத்தி, அரசு செலவில் லட்சங்களை செலவழித்து விளம்பரங்கள் கொடுத்து சாதிப்பது என்னவென்று தெரியவில்லை.  நேர்மறையான விளம்பரம், கொள்கை பரப்பு மற்றும் பிரச்சாரம் முதலியவை இல்லாதது தான், தமிழகத்தை ஊழல் சீரழித்து விட்ட நிலையாக இருக்கிறது. இனி இப்பிரச்சினைப் பற்றி சில உதாரணங்களுடன் அலசப்படுகிறது. தமிழகத்து மக்கள் சிறப்படைய வேண்டுமானால், நிச்சயமாக அரசு அலுவலக ஊழல் ஒழிக்கப் பட வேண்டும்.

Corruption free TN- Dravidian polity

திராவிடத்துடன் கலந்து விட்ட ஊழலின் தாக்கம்: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஊழல் என்பது எல்லா துறைகளிலும் புறையோடி, அரித்து வருகிறது. ஆரம்பத்தில் கோதுமை ஊழல், அரிசி ஊழல் என்றெல்லாம் இருந்து, பிறகு ஊழலை விஞ்ஞான ரீதியில் செய்யும் கலை அறிந்த தலைமைப் பெற்று அதிசயிக்கத் தக்க முறையில் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர் முதல் அமைச்சர் வரை “காசு / லஞ்சம் கொடுக்க, காசு / லஞ்சம் வாங்கு” என்பது சித்தாந்தமாகி விட்டது. இதைப் பற்றியெல்லாம் யாரும் வெட்கப்படுவதில்லை. எவ்வளவு கிடைக்கிறது, பிரித்துக் கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் பேசுவதும் சகஜமாகி விட்டது. பிறப்பிலிருந்து, இறப்பு வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால் அது உண்மையாகவே இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் காசு வாங்குவது, அதிலும் செய்ய வேண்டிய வேலைக்கு காசு கேட்பது-வாங்குவது-கொடுப்பது என்பதை இவர்கள் வழக்கமாக்கி விட்டனர். மேலும் காசு கொடுக்கவில்லை என்றால் கால தாமதம் செய்வது, வரும்போது ஆள் இல்லாமல் சென்று விடுவது, ஏதோ ரொம்ப பிசியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வது, அலைக்கழிப்பது, கொடுத்த விண்ணப்பங்கள் காணவில்லை என்பது, என்ற யுக்திகளில் ஈடுபடுவதும் அவர்களுக்கு கை வந்த கலையாகி விட்டது. கூட்டாக கொள்ளையடித்து பிழைத்துக் கொண்இருப்பதால், சக ஊழியர், உயர் அதிகாரி, தாசில்தார் என்ற எல்லா நிலைகளிலும், இத்தகைய போக்கு காணப்படுகிறது.

Corruption -Three women arrested, Vellore

போலி ஜாதி சான்றிதழ் விற்பனை நவம்பர் 2017: வேலூரில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் அருகே பாலமதியைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற பானுமதி தனது 10 வயது மகளின் ஜாதி சான்றிதழை பள்ளியில் அண்மையில் சமர்ப்பித்தார். இதன்[1] மீது சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர், அதை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆய்வு செய்ததில் அது போலி என தெரியவந்தது[2]. இதையடுத்து, பச்சையம்மாளிடம், வட்டாட்சியர் பாலாஜி நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் மகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்காக அலுவலகம் வந்த போது, பெண் ஒருவர் சான்றிதழ் பெற்றுத் தர உதவுவதாகக் கூறி பணம் பெற்று, சான்றிதழ் கொடுத்ததாகத் தெரிவித்தார். வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் நடத்திய விசாரணையில்,

  1. சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி (58),
  2. சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுமதி (36),
  3. சூரியகுளத்தைச் சேர்ந்த மேரி (32),
  4. வெட்டுவாணத்தைச் சேர்ந்த கவிதா,
  5. ஓல்டு டவுனைச் சேர்ந்த சரவணன் (45)

ஆகியோர் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சாந்தி, சுமதி, மேரி ஆகியோரை ஊழியர்கள் பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதாவது அவர்கள் அங்கு ரொம்பவே பிரபலமானவர்கள் என்று தெரிகிறது, புரோக்கர் என்றும் சொல்லலாம். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, போலிச் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்தனர். தலைமறைவான கவிதா, சரவணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Corruption -Dhanush parentage row

தனுஷ் வழக்கில் போலி சான்றிதழ் – அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. புகார்[3]: தனது மகன் என உரிமை கோரி கதிரேசன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரியும், தங்களுக்கு மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிடக் கோரியும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல கட்ட விசாரணைக்குப் பிறகு பராமரிப்பு செலவு கோரிய மனுவை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இந்நிலையில், கதிரேசன், உயர் நீதிமன்ற கிளை பதிவாளரிடம் மனு அளித்தார். அதில், ‘மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம், உயர் நீதிமன்றத்தில் தனுஷ் சார்பில் தாக்கலான வக்காலத்தில் தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. தனுஷ் தரப்பில் தாக்கலான பிறப்பு, பள்ளி மாற்று மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ்கள், அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. தெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்பது திகைப்படைய செய்வதாக இருக்கிறது. இவற்றின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க’ கோரியுள்ளார்[4]. இது ஏன் குறிப்பிடப்படுகிறது என்றால், படித்தவன் – படிக்காதவன்; ஏழை – பணக்காரன்; அதிகாரம் உள்ளவன் – இல்லாதவன் என்ற நிலைளில் இப்பிரச்சினை தீவிரமாக, பொது மக்களின் வாழ்க்கையினை பல்வேறு வகைகளில் பாதித்து வருவதாலும், ஊழலை மேன்மேலும் பெருக்கி வளர்த்து வருவதாலும், இதனை உடனடியாகக் கட்டுப் படுத்தி, ஒழிக்க வேண்டிய அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்..

Corruption -Chennai duo issued -fake certicates

போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை பிப்ரவரி 2017: போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மாம்பலம் வட்டாட்சியராகப் பணிபுரிபவர் ஆனந்த் மகாராஜன். இவரிடம் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க ஒரு இறப்புச் சான்றிதழ் அசோக்நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சில நாள்களுக்கு முன்பு வந்தது. அந்த இறப்புச் சான்றிதழ் குறித்து ஆனந்த் மகாராஜன் ஆய்வு செய்ததில், அது போலியானது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்[5]. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தது –

  1. சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (42),
  2. ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் (52)

ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்[6]. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: சுப்பிரமணி ஈக்காட்டுதாங்கலில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்[7]. அங்கேயே அவரும் ஆனந்தும் சேர்ந்து போலி சான்றிதழ்களை தயாரித்து இருக்கின்றனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நகர் அருகே உள்ள பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஒருவர், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு ஆனந்தை அணுகியுள்ளார். அவரிடம், ஆனந்த் ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இறப்புச் சான்றிதழை பெற்றது போன்று, தாங்கள் தயாரித்த போலி இறப்புச் சான்றிதழை அவரிடம் கொடுத்திருக்கிறார். அந்தச் சான்றிதழை, அசோக் நகர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் பாகப்பிரிவினைக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதில், அந்த இறப்புச் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அலுவலக ஊழியர்கள், மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதை அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்கும் கும்பல் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. கைது செய்யப்பட்ட இருவரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்றுள்ளனர். இந்தக் கும்பலிடமிருந்து போலீஸார், சுமார் 100 போலி முத்திரைகள், 33 போலி சான்றிதழ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்[8].

© வேதபிரகாஷ்

31-10-2017

Corruption -Dhanush parentage row-fake birth certicate

[1] தினமணி, போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை: 3 பெண்கள் கைது, By DIN  |   Published on : 01st November 2017 12:31 AM  |

[2] http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/nov/01/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2799193.html

[3] தி.இந்து, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது நீதிமன்றத்தில் புகார், பதிவு செய்த நாள். செப்டம்பர்…04, 2017. 10.48; மாற்றம் செய்தது. செப்டப்மர். 04, 2017, 09. 11  IST;

[4] http://tamil.thehindu.com/tamilnadu/article19618717.ece

[5] தி.இந்து, போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி.23, 2017. 10.48; மாற்றம் செய்தது. ஜூன். 16, 2017. 12.50;

[6] தினமணி, போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் விற்பனை: இருவர் கைது, By DIN  |   Published on : 23rd February 2017 01:56 AM

[7] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9556722.ece

[8]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/23/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2654421.html

நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்!

நவம்பர் 5, 2009
நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்
நவம்பர் 05,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13820

வத்திராயிருப்பு: நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர் மீது, நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்ப விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் உத்தரவிட்டனர். தலைவர் குத்தாலம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினர். வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும், பிரசவம், பொதுநல வார்டுகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர்.

பெண் நோயாளிகளிடம் டாக்டர்கள் வருகை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டனர். அறுவை சிகிச்சை அரங்குக்கு வந்த குழுவினர் அங்கிருந்த ஏழு “ஆட்டோ கிளேவ்’ இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல் இருப்பதை கண்டித்தனர். பின், மாத்திரை வழங்கும் பிரிவிலிருந்து வெளியேறிய நோயாளியிடம் மாத்திரைகளை வாங்கி ஆய்வு செய்தனர். மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விவரங்களுடன் எழுதிய கவரை வழங்காததால் மருந்தாளுனர்களை எச்சரிக்கை செய்தனர். வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளிடம் பதிவுச் சீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிப்பதாக அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஊனமுற்றவர்கள், ஏழைகளுக்கான நலநிதிக்கு உண்டியல் வசூல் மட்டுமே செய்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனாலும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அனுப்ப மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் உத்தரவிட்டார்.