Archive for the ‘அங்காள பரமேஸ்வரி’ Category

கபில் சிபலை பரிந்துரைத்தது கருணநிதியா, கனிமொழியா, சோனியாவா?

நவம்பர் 16, 2010

கபில் சிபலை பரிந்துரைத்தது கருணநிதியா, கனிமொழியா, சோனியாவா?

புதிய அமைச்சரை கருணாநிதி முடிவுசெய்வார்: கனிமொழி[1]: ராசா ராஜிநாமாவைத் தொடர்ந்து கனிமொழி அல்லது டி.ஆர்.பாலு இருவரில் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கனிமொழி மேற்கண்டவாறு தெரிவித்தார்[2]. ராஜாவுக்கு பதிலாக யார் அந்த மந்திரி என்பதை திமுகத் தலைமை, கருணாநிதி தீர்மானிப்பார், என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா தவறுசெய்யவில்லை. நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க வேண்டும் என திமுக விரும்பியதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார் என கனிமொழி கூறினார்.

ராசாவுக்கு பதில் யார்?: எனக்குத் தெரியாதுகனிமொழி: ஆ. ராசா பதவி விலகியதை அடுத்து நீங்கள்தான் புதிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினரும் முதல்வர் கருணாநிதி மகளுமான கனிமொழியிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாது என்று பதில் கூறினார்[3]. அடுத்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் யார் என்பதை கட்சித் தலைமை தீர்மானிக்கும் என்றார் அவர்.  கருணாநிதி யாரோ, கனிமொழி யாரோ? கருணாநிதி தீர்மானிப்பார், ஆனால், கனிமொழிக்குத் தெரியாது. பிறகு கனிமொழி ஏன் பிரணாப்பை சந்திக்க வேண்டும்? ராஜவின் பதவி பறிக்கப்படக்கூடாது என்று ஆதரித்து பேசவேண்டும், மிரட்ட வேண்டும்? அப்பொழுது மட்டும் கனிமொழி பேசியதை கருணாநிதி தந்தை என்ற முறையிலேயோ, திமுக தலைவர் என்ற ரீதியேலேயோ அறிவாரா?

. ராசா குற்றமற்றவர் என்று கனிமொழி தெரிவித்தார்: தில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை பேட்டியளித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ராசா எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் குற்றமற்றவர். நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக அவர் பதவி விலகினார் என்றார் கனிமொழி.  எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்பட வேண்டும் என்று திமுக விரும்பியது. அதன் பொருட்டே ராசா பதவி விலகினார்.   அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக பதவி விலகவில்லை என்றார் கனிமொழி. கனிமொழி இந்த அளவிற்கு ஆதரவாக பேசி வருவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பரமேஸ்வரியே[4] அமைதியாக இருக்கும் போது, கனிமொழி இவ்வளவு போராடுவது வியப்பாகத்தான் இருக்கிறது! அங்காள பரமேஸ்வரி[5]த்தான் காக்க வேண்டும்.

நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக அவர் பதவி விலகினார்: சீத்தாராம் யச்சூரி அதைத்தான் கேட்கிறார், முன்னமே ராஜினாமா செய்திருந்தால், இந்த பிரச்சினையை தவிர்த்திருக்கலாமே? பிறகு, ஏன் இந்த நாடகம்? ராஜாவை ஜாதியின் மூலமாக, ஊழலை விடுத்து புகழ்ந்து, தியாகப்பாட்டுப் பாடி ஆதரிப்பது ஏன்? நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்பட வேண்டும் என்று திமுக விரும்பியது என்றால், கோடிகளில் ஊழல் நடந்துள்ளதைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை?

ராஜா போய் ராணி வந்த கதையாகிவிடும்[6]: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜா விலகியுள்ளது குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ராஜா பதவி விலகிய பிறகு அவர் வகித்த பதவியை மீண்டும் திமுக அமைச்சருக்கே கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது ராஜா போய் ராணி வந்தது மாதிரி ஆகி விடும் என்றார் இளங்கோவன். ராஜா வகித்து வந்த தொலைத் தொடர்புத்துறைக்கு கனிமொழி அமைச்சராக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது[7]. இதை மனதில் வைத்தே இளங்கோவன் இவ்வாறு பேசியுள்ளதாக கருதப்படுகிறது. திமுகவுடனான கூட்டணி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு இளங்கோவன் பதிலளிக்கையில், இந்த நிமிடம் வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கிறது. ஆனால் அடுத்த நிமிடம்; நாளை என்னவாகுமோ என்று தெரியவில்லை என்றார்.

கருணாநிதி யாரோ, கனிமொழி யாரோ?  கருணநிதியின் மகள் தான் கனிமொழி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆ. ராசா பதவி விலகியதை அடுத்து நீங்கள்தான் புதிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினரும் முதல்வர் கருணாநிதி மகளுமான கனிமொழியிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாது என்று பதில் கூறினார்[8]. அடுத்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் யார் என்பதை கட்சித் தலைமை தீர்மானிக்கும் என்றார் அவர்.  அப்படியென்றால், முதலில் மன்மோஹனே வைத்துக் கொண்டு அடுத்த நாளில், கருணாநிதிதான் கொடுக்கச் சொன்னாரா?

ராஜாவை ஏன் ராஜாத்தி ஆதரிக்க வேண்டும்? கருணாநிதி எப்பொழுதுமே ராஜாவை ஆதரித்து வருபவர்[9]. ராஜாத்தி கனிமொழியின் தாயார், மகள் இருவரும் என்றுமே ஆதரவாளர்கள் தாம். பிரச்சினைகள் வரும்போதெல்லாம், கனிமொழிதான் ராஜாவிற்கு ஆதரவாக, மனதார உதவி வருகிறார். ஆக, தாய்-தந்தை-மகள் இவர்களுக்கு ராஜாவின் மீது அத்தகைய பிணைப்பு-பந்தம்-பாசம் முதலியவை இருக்கின்றது. இது இன்னொரு மகனான அழகிரிக்கு என்றுமே பிடிக்கவில்லை. தனக்காக, நீரா ராடியாவிடம் பேரம் பேசி வங்கிக் கொடுத்தது, அழகிரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. என்ன செய்வது? கனிமொழிக்கு இந்தி, ஆங்கிலம் தெரியும், கலாநிதி மாறனுக்குத் தெரியும், ஆனால் அழகிரிக்குத் தெரியாதே?

14-11-2010 அன்று சென்னை ஹொட்டலில் மாறன் சகோதர்களால் நடத்தப்பட்ட குடும்பப் பார்ட்டி: தந்தை-மகள் இப்படி ஜாஜாவிற்காக போராடி வரும் நிலையில், சென்னையில் 14-11-2010 அன்று மாறன் சகோதர்கள், ஒரு பிரம்மாண்டமான குடும்ப பார்ட்டி (இரவு விருந்து – டின்னர்) ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஸ்டாலின், அழகிரி முதலியோர் கலந்து கொண்டனர். ஸ்டாலின் கோயம்புத்தூரிலிருந்தும், அழகிரி மதுரையிலிருந்தும் பறந்து வந்தனர். இந்த நேரத்தில் கனிமொழி தில்லியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது[10]. கருணாநிதி ஏன் கலந்து கொள்ளவில்லை? இது ராஜாவின் வெளியேற்றத்திற்காகவா, அல்லது கலாநிதி “ஸ்பைஸ் ஜெட்டி”ற்கு தலைவராக[11] நியமனிக்கப்பட்டதற்காகவா[12]? கடந்த ஜூன் மாதம் இந்நிறுவனத்தில் 37.7 சதவீத பங்குகளை ரூ. 750 கோடி மதிப்பில் வாங்கினார் கலாநிதி மாறன்[13]. இப்போது கலாநிதி மாறன் வசம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 38.66 சதவீதப் பங்குகள் உள்ளன. எது எப்படியாகிலும், இந்த மச்சான்கள் இப்படி கூடி பேசிய விவரங்கள், கடவுளான கருணாநிதிக்கும் தெரியாது போலும்!

வேதபிரகாஷ்

© 16-11-2010


[1] புதிய அமைச்சரை கருணாநிதி முடிவுசெய்வார்: கனிமொழி, First Published : 15 Nov 2010 02:08:43 PM IST; Last Updated : 15 Nov 2010 09:18:26 PM IST; http://www.dinamani.com/edition/story.aspx?Title=…….ID=164&SEO=&SectionName=Latest

[2] The Hindu, Karunanidhi will decide new cabinet nominee: Kanimozhi, Nov.15, 2010, http://www.thehindu.com/news/national/article887769.ece

The DMK MP said it was for the party leadership to decide on Raja’s successor. “That is for the party leaders to decide. They will make a decision,” she said when asked whether the next Telecom Minister would be from the DMK. “I do not know about it,” was her reply to a query on whether she would be the next Telecom Minister.

[3] ராசாவுக்கு பதில் யார்?: எனக்குத் தெரியாது – கனிமொழி, First Published : 16 Nov 2010 01:51:10 AM IST

Last Updated : http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName……….B4%E0%AE%BF

[4] ஏ. எம். பரமேஸ்வரி, ஆ. ராஜாவின் மனைவி, கிரீன் ஹவுஸ் பமோடர்ஸ் பிரைவேட் லிமிடெட் ( Green House Promoters Pvt Ltd. ) என்ற கம்பெனியின் இயக்குனராக இருந்தவர்.

[5] அங்காள பரமேஸ்வரி கருணநிதி குடும்பாரத்தாரின் குலதெய்வம். கோவில் குவலையில் உள்ளது. வருடத்தில் ஒருமுறையாவது கருணாநிதி அங்கு சென்று சாமி கும்பிடுவது உண்டு.

[6] ராஜா இலாக்காவை வேறு திமுக அமைச்சருக்குக் கொடுக்கக்கூடாது ,http://thatstamil.oneindia.in/news/2010/11/15/telecom-raja-elangovan.html

[7] ராஜாவுக்குப் பதில் கனிமொழியை அமைச்சராக்கத் திட்டம்? – கருணாநிதியுடன் நாளை பிரதமர் ஆலோசனை, http://thatstamil.oneindia.in/news/2010/11/12/spectrum-scandal-raja-kanimozhi.html

[8] ராசாவுக்கு பதில் யார்?: எனக்குத் தெரியாது – கனிமொழி, First Published : 16 Nov 2010 01:51:10 AM IST

Last Updated :http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName……….B4%E0%AE%BF

[9] Patriarch Karunanidhi is said to be Raja’s strongest backer. Also, persistent efforts of Kanimozhi and her mother, Rajathi Ammal, ensured a Cabinet berth to Raja. Kanimozhi has backed Raja through the crisis and even provided him moral support. Read more: Karunanidhi’s sons, Maran brothers dined lavishly as Raja got boot – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Karunanidhis-sons-Maran-brothers-dined-lavishly-as-Raja-got-boot/articleshow/6932615.cms#ixzz15PMgyy92

[10] As a combative A Raja was booted out of the Cabinet over the 2G spectrum scandal late on Sunday, the Maran brothers and their uncles, M K Stalin and M K Alagiri, gathered over dinner at a city star hotel. Sources close to the family described the occasion as a normal “family get-together” but the sideshow at the ritzy hotel seemed to have a lot to do with Raja getting the sack and a tense Kanimozhi fielding queries from reporters in Delhi. Read more: Karunanidhi’s sons, Maran brothers dined lavishly as Raja got boot – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Karunanidhis-sons-Maran-brothers-dined-lavishly-as-Raja-got-boot/articleshow/6932615.cms#ixzz15PSD9qH1

[11] ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்புள்ள அறிக்கையில் இந்த விவரத்தை தெரியப்படுத்தியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி மாறன், உடனடியாக அதன் நிர்வாக அமைப்பிற்கு புதிதாக ஐந்து இயக்குனர்களை நியமித்துள்ளார். எஸ. ஸ்ரீதரன், ஜே.இரவீந்திரன், நிக்கலாஸ் மார்ட்டின் பால், எம்.கே.ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குனர்களாகவும், தனது மனைவி காவேரியை முடிவெடுக்கும் அதிகாரமற்ற இயக்குனராகவும் நியமித்துள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/finance/news/1011/15/1101115055_1.htm

[13] அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் வில்புர் ரோஸிடமிருந்து இந்த பங்குகள் வாங்கப்பட்டன.