மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்!

மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்!

அசோக்ராஜ் வீட்டில் சிபிஐ ரெய்டு தினமலர் 12-04-2016

போலீஸார் சொல்வது: சிபிஐயின் விசாரணையின் போது, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அதிகாரிகள் கேட்கவில்லை. பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் மறைந்துள்ளதாக கூறுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் இருவர் கலால் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், மற்ற காணாமல் தப்பியோடியவர்களைப் பற்றி விசாரித்துத் தேடி வருவதாக கூறினர். அசோக் ராஜ் வீட்டிற்கு சென்று, அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அசோக் ராஜ் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை[1]. பொதுவாக சிபிஐ தனது விசாரணை, புலன் விசாரணை, தகவல் திரட்டல் முதலியவற்றை ரகசியமாகவே வைத்திருக்கும். மேலும், அரசு அதிகாரிகளுடன் மேற்கொள்ளும் விசாரணையில் அத்தகைய வன்முறைகள் இதுவரை ஏற்பட்டதில்லை. ஏனெனில், “அரசு ஊழியர்” என்ற ரீதியில் அவர்கள் கட்டுப்பட்டே நடந்து கொள்வர். பிறகு சட்டப்படி எதிர்த்து நீதிமன்றத்தில் வக்கீலை வைத்து போராடுவர். ஆனால், வேலை செய்யும் போதே இவ்வாறு தாக்கப்பட்டதில்லை. இது ஒரு கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

The Changing faces of R Raja Climaxசி.பி.., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்?[2]: தினமலர் இதைப் பற்றிய சில விவரங்களைக் கொடுக்கிறது. சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி, அசோக்ராஜை, கும்பல் வேனில் கடத்தி சென்றது. இதுகுறித்த விசாரணையில், அசோக்ராஜை கடத்தியவர்கள், மத்திய சுங்கம், கலால் துறை அதிகாரிகள் சங்கம் நடத்தும், பள்ளியைச் சேர்ந்தவர்களும், அவர்களது கூட்டாளிகளும் என, தெரியவந்தது. மேலும், அந்த சங்க நிர்வாகிகளில் ஒருவரான அசோக்ராஜ், சி.பி.ஐ., அதிகாரிகள், தன்னை கைது செய்வர் எனக் கருதி, சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து, அதிகாரிகளை தாக்கிவிட்டு, வேனில் சென்றது தெரியவந்தது. பொதுவாக சிபிஐ விசாரணையின் போது செல்போன்கள் முதலியவற்றை எடுத்துக் கொள்வார்கள், வரும் அழைப்புகளை அவர்களே கேட்டு பதில் சொல்வார்கள். அந்நிலையில் அசோக்ராஜ் சங்க நிர்வாகிகளுக்கு எப்படி தகவல் கொடுத்தார் என்பது தெரியவில்லை. அசோக் ராஜ் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது[3]. இவ்வாறு அரசு அதிகாரிகள் நடத்தும் பள்ளி நிர்வாகம், சங்கம், ஓய்வு பெற்ற அதிகாரி என்று எல்லோரும் இத்தகைய சட்டமீறல்களில் ஈடுப்பட்டிருப்பது பற்பல கேள்விகளை எழுப்புகிறது.

Raja Climax -left- and ashok Raj -right- together in a function

பிடிபட்ட அதிகாரிகள் மறைவது, மறைந்து வாழ்வது சரியில்லை: முன்னமே குறிப்பிட்டது போல, இந்நிகழ்ச்சிகள் ஒரு கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது, உண்டாக்கியுள்ளது. இது அரசுதுறை அதிகாரிகளுக்கு இடையே சுமூகமான உறவுகளை பாதிக்கும். தேவையற்ற சந்தேகங்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் முறையில், சேற்றை வாரியிரைக்கும் போக்கிற்கும் வழி வகுக்கும். ஏற்கெனவே, பொது மக்களிடையே, சட்டம், நீதி, ஒழுங்குமுறை, நீதிமன்றம், முதலிவற்றைச் சேர்ந்தவர்கள் ஒழுங்காக செயல்படுவதில்லை, மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றன, அல்லது காலதாமதங்களினால் அத்தன்மையே சீரழிகிறது அல்லது சட்டத்தன்மை-பலன் முதலியவை பயனற்றதாகி விடுகின்றன போன்ற எண்ணங்கள் உருவாகியுள்ளன. அந்நிலையில் சட்டதிட்டங்களை அமூல் படுத்தும் அரசு அதிகாரிகள் முறையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் வரும்-ஏற்படும் விதத்தில் செயல்படக்கூடாது, நிகழ்வுகளும் நடக்கக் கூடாது. அதனால், நீதி வெற்றிப்பெற வேண்டும், வெற்றிப் பெற்றது போன்று காட்டப்பட வேண்டும் [Not only justice should be done, but also appears to have been done] என்று கூறியுள்ளார்கள்.

Raja Climax -right- and ashok Raj -left- together in a function

பள்ளி நிர்வாகத்துக்குத் தொடர்பு[4]: பிடிபட்ட அசோக்ராஜ் சுங்கவரித் துறை அலுவலர்கள் சங்கம் நடத்தும் பள்ளியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளாராம், அப்பள்ளியின் முக்கிய நிர்வாகி தலைமையில், பள்ளி வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தாக்குதலின் போது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.  அதாவது, அவர்கள் எல்லோருமே அந்த அலுவகத்திற்கு சாதாரணமாக வந்து போகின்றவர்கள் மற்றும் எல்லா விசயங்களையும் நன்கு அறிந்தவர்கள் என்று தெரிகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் படி[5], ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் கலல்துறை சூப்பிரென்டென்ட், இப்பொழுது சென்ட்ரெல் எக்சைஸ் சங்கம் நடத்தும் பள்ளியின் தாளாரராக உள்ள “கிளைமாக்ஸ் ராஜா” என்பரால் இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக சிபிஐ அதிகாரி கூறுகிறார். போலீஸ் விசாரணையில், அப்பள்ளியைச் சேர்ந்த ஒரு அலுவலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்[6]. அசோக் ராஜ் மற்றும் கிளைமாக்ஸ் ராஜ் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உண்மையில் மேலே குறிப்பிட்டபடி, இருவருமே, அப்பள்ளி நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்கள். ஆனால், இவ்விசயத்தில் எப்படி சம்பந்தப்பட்டார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மேலும், வேலியே பயிரை மேய்ந்த நிலை உருவாகி, பள்ளி நிர்வாகத்தினரே இத்தகையே சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால், மாணவி-மாணவர்கள், பெற்றோர், மற்றோர் எல்லோருமே இனிமேல் யோசிக்க ஆரம்பிப்பர். இச்செயல்களினால், பள்ளிக்குள்ள பெயரும் கெடக்கூடிய நிலை உருவாகியுள்ளது[7].

M Raja Climaxயார் இந்தராஜா கிளைமாக்ஸ்”?: உண்மையில் இவரது பெயர் எம். ராஜா கிளைமாக்ஸ் [M. Raja Climax] என்று தெரிய வருகிறது. மதுரை சுங்கம் மற்றும் கலால் வரிதுறையில் ஆய்வாளர் மற்றும் மேலதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். 2013ல் ரூ.2.23 கோடி வரியேப்பு செய்ததை கண்டுபிடித்தவர் என்றும் செய்தியுள்ளது[8]. அக்காலத்தில் சென்ட்ரல் எக்சைஸ் என்சிகியூட்டிவ் அசோசியன் [Central Excise Executive Officers Association] என்ற சங்கத்தில் தீவிரமாக் இருந்து, அதன் சார்பில் ஒரு பள்ளியைத் துவக்கியதில் பங்கு வகித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு சில மாற்றங்கள் தெரிகின்றன. அப்பள்ளி இணைதளத்தில் காணப்படும் புகைப்படங்களிலிருந்து அவரது முகம் மாறியிருக்கிறது. புகழுக்காக ஆசைப்படுவது தெரிகிறது. பாராட்டு விழா முதலியவை நடந்துள்ளன. அந்நிலையில் இத்தகைய செயலில் ஏன் சம்பந்தப் பாட்டர், ஈடுபட்டார் என்பது புதிராக இருக்கிறது. அதிகாரம் மனிதனைக் கெடுக்கிறது, அதிகமான / அளவற்ற அதிகாரமோ அவனை அவ்வாறே எல்லைகள் இல்லாத அளவுக்கு கெடுக்கிறது [Power corrupts, abosolute power corrupts absolutely] என்பது போல இத்தலைய செயல்கள் நடப்பது தெரிகிறது.

ராஜா கிளைமாக்ஸ், அசோக் ராஜுடன்சுங்க இலாகா அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பறிமுதல் (11-04-2016): தல்லாகுளம் போலீசார் கலால் துறை, குறிப்பிட்ட பள்ளி முதலியோரிடம் 30 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 10 பேர் மீது மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்[9].
அசோக் ராஜ் எங்கு போனார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், மதுரை கூடல்புதூர் ஏஞ்சல் நகரில் உள்ள அசோக்ராஜ் மற்றும் நாகனாகுளம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் குழு நேற்று அதிரடி சோதனை நடத்தினர்[10]. அசோக்ராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது[11]. அசோக் ராஜ் வீட்டில் ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணன், குடும்பத்துடன் தலைமறைவானார்[12]. அவரது வீட்டில் நடந்த ரெய்டு பற்றிய விவரங்களு தெரியவில்லை. இவ்வாறு பிடிபட்ட அதிகாரிகள் தப்பித்து தலைமறைவானது மேலும் சட்டப் பிரச்சினை மற்றும் பலவித சதேகங்களை எழுப்பியுள்ளன.  அதிகாரிகள் வழக்கைச் சிக்கலாக்கப் பார்க்கின்றனர் என்றும் தோன்றுகிறது. விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வழக்கை முடித்துக் கொள்வது அனைவருக்க்ம் நலம்.

© வேதபிரகாஷ்

12-04-2016

[1] Absconding – The police said that a key management person of the school was absconding.

The city police said that the Central investigation team had not sought police security during the “trap”. The accused include two employees of Central Excise Department.

The Hindu, 9 booked for attack on CBI sleuths, Madurai, April 10, 2016; Updated: April 10, 2016 05:45 IST

[2] தினமலர், சி.பி.., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்?, ஏப்ரல் 9. 2016.23.36.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1498056

[4]http://www.dinamani.com/edition_madurai/madurai/2016/04/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/article3372288.ece

[5] “They also tried to destroy the evidence collected against the official, but we were able to secure some of it. We believe that the attackers could have links with ‘Climax’ Raja, a retired Central Excise officer who is associated with the Central Excise Officers Association,” alleged a CBI official. According to CBI personnel, the attack seems to have been orchestrated by a former Central Excise official, now correspondent of a private school in Madurai, for whom the bribe was being paid. The local police, which are looking into the incident, believe that a private school is linked to the case as CBI officials have apprehended one of the school management-level officials. A total of 15 members have been picked up for interrogation, said police sources.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Thugs-Attack-CBI-Men-to-Save-Tainted-Babu/2016/04/10/article3372496.ece

[6] The New Indian Express, Thugs Attack CBI Men to Save Tainted Babu, By Express News Service, Published: 10th April 2016 03:08 AM, Last Updated: 10th April 2016 03:20.

[7] http://ceoaepapers.blogspot.in/2014/02/photos.html

[8] http://www.thehindu.com/news/cities/Madurai/rs263crore-tax-evasion-detected-in-tuticorin-fertilizer-company/article5320103.ece

[9] தீக்கதிர், சுங்க இலாகா அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பறிமுதல், ஏப்ரல்.11, 2016.

[10]  தினகரன், மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு மற்றொரு அதிகாரி தலைமறைவு, ஏப்ரல் 12, செவ்வாய்கிழமை,01.51.25.

[11] http://theekkathir.in/2016/04/11/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=209402

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக