சிபிஐ ஒரு கூண்டுக்கிளி – அது எடுப்பார் கைப்பிள்ளை, தலையாட்டும் பொம்மை, பலபேருக்கு பதில் சொல்லும் அடிமை!

சிபிஐ ஒரு கூண்டுக்கிளி – அது எடுப்பார் கைப்பிள்ளை, தலையாட்டும் பொம்மை, பலபேருக்கு பதில் சொல்லும் அடிமை!

 

சிபிஐசிபிஐதான்: சிபிஐ என்பதற்கு “சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்” என்பதற்கு பதிலாக “காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்” என்று கிண்டலாகச் சொல்லிவந்தது உண்மையாகி விட்டது. சிபிஐ ஒரு கூண்டுக்கிளி – அது எடுப்பார் கைப்பிள்ளை, தலையாட்டும் பொம்மை, பலபேருக்கு பதில் சொல்லும் அடிமை, என்பது போல, உச்சநீதி மன்றம் வெளுத்து வாங்கியுள்ளது. ஆனால், காங்கிரஸ் அதற்குக் கவலைப் படுவதாக இல்லை.

 

கரிவிஷயத்தில் கரி பூசிக்கொண்டாலும், முகம் அழகாகத்தான் இருக்கிறது: சிபிஐ “கோல்கேட்” என்று அழைக்கப்பட்ட, நிலக்கரி பங்கீட்டு ஊழல் விஷயமான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, அது வெளியிட்டுள்ள விஷயங்கள் காங்கிரஸின் ஊழல் முகமூடியைக் கிழித்தெறிஎதுள்ளது[1]. நிலக்கரி அமைச்சர் அறிக்கையைக் கேட்க முடியாது, மற்றும் அதன் செயல்பாடுகளில் தலையிட முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது[2]. சிபிஐ தன்னுடைய தன்-விளக்க மனுவை சட்ட அமைச்சகத்தின் செயலர், மற்றும் பி.எம்.ஓ. அலுவகத்தினருக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை[3]. உச்சநீதி மன்றம் இப்படியெல்லாம் மத்திய அரசை வெளுத்து வாங்கியுள்ளது:

 

“The CBI has become a caged parrot speaking in its master’s voice. It’s a sordid saga that there are many masters and giving unbridled power to the CBI is not possible. The CBI has become the police force and is in the administrative control of the Central government. CBI investigations have to be independent,” the SC said in its observations[4]. சிபிஐ ஒரு கூண்டுக்கிளியாகி விட்டது. அது எஜமானனுடைய குரலில்தான் பேசிகிறது. நிறைய அத்தகைய எஜமானர்கள் இருப்பதால், சுதந்திரமான செயல்படு அதிகாரம் அதற்கு இல்லை. ஒரு போலீஸ் சக்தி போல, மத்திய அரசின் நிர்வாகத்தில் கட்டுண்டுக் கிடக்கிறது. சிபிஐ விசாரணைகள் சுதந்திரனமாக இருக்க வேண்டும்.

பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக இணைச்செயலர்கள் எப்படி சிபிஐ கூட்டத்தில் பங்குக் கொள்ள முடியும், மற்றும் அதன் அறிக்கையில் மாற்றம் செய்ய சொல்ல முடியும்? அத்தகைய அதிகாரம் எப்படி அவர்களுக்கு வருகிறது? சிபிஐயின் நம்பகத்தன்மையை பாதிக்கக் கூடிய அளவில் உள்ள அத்தகைய காரியங்கள், மிகுந்த வேதனையை அளிக்கின்றது, சிபிஐயின் வேலை புலன் விசாரணையேயன்றி, அரசாங்கத்துடன் சேர்ந்து அளவாவிக்கொண்டிருத்தல் அல்ல, என்றெல்லாம் உச்சநீதி மன்றம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது[5]. தன்-விளக்க மனு / அறிக்கையில் நான்கு மாறுதல்கள் / திருத்தல்களை சட்ட அமைச்சகம் மற்றும் பி.எம்.ஓ. தூண்டுதல்கள் மேல் செய்துள்ளது[6]. ஆக, கரி, நிலக்கரி, நிலக்கரி பங்கீடு விஷயத்தில் கரி பூசிக்கொண்டாலும், முகம் அழகாகத்தான் இருக்கிறது என்று மமதையுடன், கர்நாடக வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

 

அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது.  விசாரணை தகவல்களை சிபிஐ ஒரு அறிக்கையாகத் தொகுத்தது. அந்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சமீபத்தில் இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.  அப்போது சிபிஐயின் விசாரணை அறிக்கையை பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள், சட்ட மந்திரி, நிலக்கரி துறை மந்திரி மற்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் பார்வையிட்டு பல்வேறு திருத்தங்கள் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு கேட்டபோது, அரசு தரப்பில் எந்த திருத்தமும் செய்யவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி கூறினார். ஆனால் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா, மார்ச் 7-ந்தேதி நான் சட்ட மந்திரியிடம் அறிக்கையை காட்டினேன். அதில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்று உண்மையை சொல்லி விட்டார்[7]. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிபிஐக்கும், மத்திய அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், நிலக்கரி ஊழல் விசாரணை பற்றி புதிய அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர். அதோடு அறிக்கையில் திருத்தங்கள் செய்தவர்கள் யார், யார் என்பதை கூறவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சிபிஐயின் விளக்கம் அரசின் உள்தலையீடு மற்றும்  சட்டத்தை உதாசீனப் படுத்தும் போக்கையே காட்டுகிறது: அதை ஏற்று சிபிஐ 06-05-2013 அன்று 9 பக்க புதிய அறிக்கை ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் பிரதமர் அலுவலக அதிகாரி, சட்டமந்திரி திருத்தங்கள் செய்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 9 பக்கம் கொண்ட பிராமண பத்திரத்தில் விளக்கம் அளித்துள்ள சி.பி.ஐ., ‘வரைவு அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் மூல அறிக்கையில் விசாரணை தொடர்பான விவரங்கள், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பெயர்கள் தொடர்பாக எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் என்னால் ஏற்பட்ட திருத்தம் மற்றும் நீக்கம் ஆகியவற்றிற்கு சுப்ரீம் கோர்ட்டிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான சி.பி.ஐ.யின் விசாரணை சுதந்திரமாக நடைபெறும் என்ற உறுதியையும் அளிக்கிறேன்’ என்று ரஞ்சித் சின்கா உறுதி அளித்துள்ளார்[8]. அறிக்கை இவ்வாறு பலருக்குக் காட்டப்பட்டதை, நீதிமன்றம் கண்டித்துள்ளது[9].

 

ஊழலில் சிக்கியுள்ள மந்திரியே சிபிஐயின் அறிக்கையைப் பார்த்தது: சிபிஐயின் அறிக்கையில் 5 பாராக்களை நீக்க சட்ட மந்திரி அஸ்வினிகுமார் உத்தரவிட்டதாகவும், அந்த பாராக்களில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றிருந்தன என்பதும் சிபிஐ புதிய தகவலில் இடம் பெற்றுள்ளன. மேலும் சிபிஐ அறிக்கையில் செய்யப்பட்ட 4 முக்கிய திருத்தங்களில் 2 திருத்தங்கள் / மாற்றங்கள் சட்டமந்திரி அஸ்வினி குமாரால் செய்யப்பட்டதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது[10]. அந்த 2 முக்கிய திருத்தங்களை அஸ்வினிகுமார் தன் கைப்பட எழுதி இருப்பதாகவும் சிபிஐ கூறியுள்ளது[11]. சிபிஐயின் இந்த தகவல்கள் மத்திய அரசுக்கும், சட்ட மந்திரி அஸ்வினிகுமாருக்கும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

 

ஊழலில் உழலும் மந்திரிகள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பவனி வருகிறார்கள்: அஸ்வினிகுமார் தவறு செய்து இருப்பது உறுதியாகி விட்டதால், உடனே அவரை மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அஸ்வினிகுமாரை நீக்கினால், அடுத்தக்கட்டமாக அது பிரதமருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் சோனியா மவுனமாக உள்ளார். அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்று அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சிபிஐ அறிக்கை மீது இன்று (புதன் கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றபோது மந்திரி அஸ்வினிகுமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

© வேதபிரகாஷ்

08-05-2013


[5] “How on earth could the Joint Secretaries of the PMO and the Coal Ministry attend the meeting, see the report and suggest changes to it,” the SC asked. “It pains us to see the credibility of the CBI getting affected. The CBI is doing a collaborative probe. The job of the CBI is to interrogare and not interact with government,” the court added

[6] “These changes made by the law minister, PMO and coal ministry officials were accepted by the CBI as they pertained to its tentative findings,” Sinha stated in his affidavit.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Coalgate-probe-SC-slams-Vahanvati-calls-CBI-a-caged-parrot/Article1-1056838.aspx

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: