அண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்!

அண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்!

அண்ணதுரை என்றால், தமிழர்களுக்கு, திராவிடர்களுக்குத் தெரியும் ஆனால், அண்ணா ஹஸாரே என்றால், எப்படித் தெரியும்? ஊழலில் அண்ணனின் தம்பிகள் மாற்றுப்பாதையில் தான் சென்றுள்ளனர். அண்ணன் – அண்ணாதுரை காந்தியை விடுத்து மாற்றுப்பாதையில் சென்றிருக்கலாம். ஆனால், இந்த அண்ணா ஹஸாரே காந்தியாரைத்தான் பின்பற்றியுள்ளார். இன்று ஊழலை எதிர்த்து போரரட்டம் நடத்துகிறார். நல்லவேலை, தில்லியில்தான் போராட்டம் நடத்துகிறார். உண்ணாவிரதம் என்று நேற்றுமுதல் (05-04-2011) ஆரம்பித்துள்ளார். இதே சென்னையில் என்றால் திராவிடத் தம்பிகள் அவர் எதிரில் பந்தல் போட்டு, உண்ணும் விரதம் நடத்தியிருப்பார்கள்! அதே நாளில், சொல்லிவைத்தது மாதிரி சோனியா தம்பிகளுடன் கூட்டம் நடத்துகிறார் சென்னையில்! போதாகுறைக்கு, இன்றைய தம்பியின் மகளே அந்த ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறாள். இன்றைய ஊழலுக்கு பிரதம மந்திரி மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்திதான் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இதைப் பொறுக்காத, சோனியா கங்கிரஸ் தலைவர் ஒருவர்,  அண்ண ஹஸாரே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று சொல்லியிருக்கிறார்[1].

மன்மோஹன் சிங் தாமதம் செய்வதால், உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அண்ணா ஹஸாரே: லோக்பால் அமைக்கக்கோரி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 05-04-2011 அன்று துவக்கினார்[2]. உயர்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும், “ஜன லோக்பால்’ அமைக்கக்கோரி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். இது குறித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஹசாரேவை அழைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். பிரதமர் உட்பட பெரிய பதவிகளில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்க வழி செய்வது லோக்பால் அமைப்பு. மக்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை ஜனலோக்பால் என்று ஹசாரே அழைக்கிறார். பிரதமர் இதுநாள் வரை லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அன்னா ஹசாரே நேற்று தன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.

சமூகசேவகருக்கு பலர் ஆதரவு: இந்நிலையில் பலரும் இவருக்கு ஆதரவாக போராட கிளம்பியிருக்கின்றனர். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, மகசசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, காந்தி சமாதிக்கு சென்ற அன்னா ஹசாரே, அங்கு மலரஞ்சலி செலுத்திய பின், “இந்தியா கேட்’ பகுதிக்கு ஜீப்பில் சென்றார். அங்கு ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். அதன் பின் அவர் ஜந்தர் மந்தர் பகுதியில் தன் உண்ணாவிரதத்தை துவக்கினார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
லோக்பால் அமைப்பு என்று போராடும் அண்ணா ஹஸாரே: இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸôரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸôரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸôரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது[3]. முன்னதாக ஹசாரே குறிப்பிடுகையில், “என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். பின்னர் ஏன் லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குகிறார்? ஜன லோக்பால் அமைக்கும் வரை என் போராட்டம் தொடரும்’ என்றார். உண்ணாவிரத போராட்ட துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்யாதவ் குறிப்பிடுகையில், “சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போன்றவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது போல், ஊழலை ஒழிக்க சக்தி வாய்ந்த லோக்பால் அமைப்பு இந்த தருணத்தில் தேவை’ என்றார். அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்[4]. மேலும், ஹசாரே கோரிக்கைக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெருக்களில் நோட்டீஸ் வினியோகித்தனர்.

.

வேதபிரகாஷ்,

06-04-2011


Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: