சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்!

சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்!

கோடிகளில் பணம் – முன்னேறும் தமிழகம்! தமிழகத்தில், லட்சக்கணக்காக ருபாய் நோட்டுக் கட்டுகள் பிபடுவது போய், இப்பொழுது, கோடிகளில் பிடிக்கப்படுவது ஆச்சரியமே! இந்த விஷயத்தில் தமிழகம் முன்னேறிவிட்டது எனலாம். கே.என். நேருவின் நண்பருக்கு / உறவினருக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து, ரூ. 5.11 கோடி ரூபாய் திருச்சியில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அவர் அதை – அதாவது அந்த பணம் தமது உறவினர்களுடையது என்று, சில ஊடகங்களில் வெளிவந்துள்ளதை – மறுத்துள்ளார்[1]. இதற்குள் வருமான வரித்துறையினர் உதயகுமார் என்ற அந்த நபரின் இல்லத்திலும் சோதனை நடத்தினர்[2]. இப்படி கட்டுக்கட்டா ரூபாய் நோட்டுகள், கோடிக்கணக்கில் வைத்திரிந்தால், சாதாரண மக்கள் என்ன செய்வது?

சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்: திமுக அமைச்சர் தம்பியின் நெருங்கிய நண்பருக்கு / அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார்[3] என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் இருந்து வாக்காளர்களுக்கு பட்டு வாடா செய்யப்படுவதற்காக வைக்கப் பட்டிருந்ததாக கூறப்படும் ரூ.5.11 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்[4]. நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற எம்.ஜே.டி என்ற தனியார் ஆம்னி பேருந்து திருச்சி பொன்னகரில் நிறுத்தப் பட்டிருந்தது. இது கே.என்.நேருவின் உறவினர் உதயகுமரன் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தது[5]. நேற்று நள்ளிரவில் இந்தப் பேருந்தில் பணம் கடத்தப்படுவதாக வந்த செய்தியை அடுத்து, திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான சங்கீதா, போலீஸார் துணையுடன் சோதனை மேற்கொண்டார்.

தகவலின் பேரில் சோதனை – பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக திருச்சி பொன்நகர் பகுதியில் ஆம்னி பஸ் ஒன்றில் பணம் கட்டுக்கட்டாக இருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.   அத்தகவலின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமை யிலான பறக்கும் படையினர் இன்று அதிகாலை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு ஆம்னி பஸ் ஒற்றின் மேல் பகுதியில் 5 பைகளில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த 5 பைகளிலும் மொத்தம் ரூ.5.11 கோடி மதிப்புள்ள பணக்கட்டுக்கள் இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.  கைப்பற்றப்பட்ட பணத்தினை மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது[6]. அந்தப் பணம் முழுவதும் வங்கி ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டு வங்கி முத்திரையுடன் இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வருமான வரித்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆம்னி பஸ் அதன் உரிமையாளர் வீட்டின் எதிரிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது:. தேர்தல் அதிகாரிகள் இன்று  சோதனை மேற்கொண்ட ஆம்னி பஸ் அதன் உரிமையாளர் வீட்டின் எதிரிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. பணப் பறிமுதல் தொடர்பாக உரிமையாளர் உதயகுமார் வீட்டிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  இவர் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இன்று பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் 10 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது[7]. ஆம்னி பஸ்சில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது திருச்சி பொன்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேதபிரகாஷ்,

05-04-2011


குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

ஒரு பதில் to “சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்!”

 1. vedaprakash Says:

  5 கோடி ரூபாயை துணிச்சலாக மடக்கிப் பிடித்தார் பெண் அதிகாரி: பஸ்சில் கடத்தியது யார்?
  பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2011,23:18 IST
  மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 05,2011,23:59 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=219270

  திருச்சி : ஷெட்டில் நின்றிருந்த தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5.11 கோடி ரூபாயை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, தனி ஆளாக சென்று பறிமுதல் செய்து, சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர் உள்ளிட்ட மூவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய, இந்த பணத்தை திருச்சிக்கு கடத்தி வந்த பிரமுகர் யார் என்பது இன்னமும் புதிராக உள்ளது.

  போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமான, “எம்.ஜே.டி., ஆம்னி’ பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.உடனடியாக விரைந்து செயல்பட்டார் ஆர்.டி.ஓ., சங்கீதா. நள்ளிரவு என்றும் பாராமல், அவரது டிரைவர் துரை மற்றும் உதவியாளர் ஒருவர் என மூன்று பேர் மட்டும், நள்ளிரவு, 2.30 மணியளவில் புறப்பட்டனர். பொன்னகரில் உள்ள எம்.ஜே.டி., ஆம்னி பஸ் நிறுவனத்தின் ஷெட்டுக்கு அவர்கள் சென்றனர். அங்கு நின்றிருந்த பஸ்சின் மேற்கூரையில் ஏறி சோதனை செய்தனர். பஸ் அருகில் நின்றிருந்த டிரைவர், அப்போது அங்கிருந்து நைசாக நழுவிச் சென்றுவிட்டார்.

  பஸ் மேற்கூரையில் மூடப்பட்டிருந்த தார்பாயை விலக்கி பார்த்தபோது, ஐந்து டிராவல் பேக்குகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது, சங்கீதா அதிர்ச்சியடைந்தார். அவற்றில், கட்டுக்கட்டாக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.உடனடியாக, மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ராஜகோபால், தேவதாசன் மற்றும் போலீசாருக்கு ஆர்.டி.ஓ., சங்கீதா தகவல் தெரிவித்தார். அந்த ஆம்னி பஸ்சை மாற்று டிரைவர் மூலம், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, வருமான வரித்துறை உதவி கமிஷனர் ஆல்பர்ட் மனோகரனுக்கும் தெரிவிக்கப்பட்டு, அவரும் திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வந்தார். பணத்தை எண்ணிப் பார்த்த போது, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் இருந்தது.

  அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பவ இடத்தில் நின்றிருந்த ஆம்னி பஸ் உரிமையாளரின் இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பின், போலீசாரும், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ் உரிமையாளரான உதயகுமாரனின், பொன்னகர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் உதயகுமாரனின் மனைவி உமா மகேஸ்வரி மட்டுமே இருந்தார்.அவருடைய அனுமதியுடன் தேர்தல் பார்வையாளர்களும், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தினர்; வீட்டையும் சோதனையிட்டனர். வீட்டில், 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கிடைத்தது. ஆம்னி பஸ் மேலாளர் பாலுவிடம் விசாரணை நடத்தி, அவருடைய வீட்டையும் சோதனையிட்டனர்; அப்போது சில ஆவணங்கள் சிக்கின. அவற்றையும் தேர்தல் பார்வையாளர்கள் வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

  பின், ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமாரன், அவரது மகன் அருண் பாலாஜி மற்றும் ஆம்னி பஸ் நிறுவன மேலாளர் பாலு ஆகியோரை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். காலை முதல் மாலை வரை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அனுமதியின்றி கணக்கில் வராத பணத்தை எடுத்துச் செல்லும் பலரும், லட்சக்கணக்கான ரூபாயுடன், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில், ஒரே நேரத்தில், 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் பிடிபட்டுள்ளது, தேர்தல் கமிஷனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  மந்திரி நேரு மறுப்பு : வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ள ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமாரன், போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவுக்கும், அவரது தம்பி ராமஜெயத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். அவர்கள் அனைவரும், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமைச்சர் நேருவின் பணம் தான், உறவினர் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது’ என்ற தகவல், திருச்சி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.இதையறிந்த அமைச்சர் நேரு, “எனக்கும், பிடிபட்ட பணத்துக்கும், என் உறவினர்களுக்கும், எவ்வித தொடர்பும் இல்லை’ என, அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: