சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – தொடரும் மர்மங்கள் – ரூ ஆறு கோடியுடன் சலீம் தலைமறைவாம்!

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – தொடரும் மர்மங்கள் – ரூ ஆறு கோடியுடன் சலீம் தலைமறைவாம்!

விசுவாசமான சலீம் ரூ ஆறு கோடி பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்று விட்டானாம்! ஆகஸ்ட் 2010ல் சாதிக் பாட்சாவின் டிரைவர் சலீம் என்பவன், ஆறு கோடி ரூபாய்களை ஏமாற்றி எடுத்துச் சென்று விட்டான் என்று ரெஹனா பேகம் கூறியுள்ளார். முதலில் சலீம் விசுவாசமாகத்தான் இருந்திருக்கிறான். பாட்சா தான் வியாபார நிமித்தம் போகும்போதெல்லாம், அவனைத்தான் அழைத்துச் சென்றுள்ளான். அதாவது, சலீம் தான், வண்டியை ஓட்டிச் சென்றுள்ளான். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில், ஒருதடவை சூட்கேஸில் ரூ ஆறு கோடி வைத்து விட்டுச் சென்றபோது, சலீம் அதனை எடுத்துக் கொண்டு விட்டான், திரும்பத்தரவேயில்லை, என்று ரெஹனா பானு விவரிக்கிறார். தங்களது ஊரைச் சேர்ந்தவன் – பெரம்பலுருக்கு அருகில் உள்ள லெப்பைக்குடிக்காடு – என்பதால் போலீஸாரிடம் புகார் கூறவில்லையாம்[1]. இந்த ஆறு கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது?

பாட்சா சுப்புடு என்ற சுப்ரமணியம் கூட பேசியது என்ன?: தற்கொலை செய்து கொண்ட நாளுக்கு முன்பு, சுமார் 40 தடவை சுப்புடு என்கின்ற சுப்ரமணியம் என்ற நபருடன் பேசியுள்ளதாகத் தெரிகிறது[2]. அதாவது மார்ச் 14 மற்றும் 15 அன்று 34 தடவை போன் செய்து அவருடன் பேசுயுள்ளதாகத் தெரிகிறது. பாட்சாவின் செல்போனை சோதனை செய்தபோது, அழைப்புகள் பெற்றது மற்றும் பேசியது முதலியவற்றை சோதனை செய்த போது இவ்விவரங்கள் வெளிவருகின்றன. சுப்ரமணியம், பெரம்பலூரில் உள்ள ரியல் எஸ்டேட்டின் பார்ட்னர் ஆவார்[3]. இவரும் பாட்சாவும் சேர்ந்து தான், பெரம்பலூரில், ஏலம்பரம் ரோட்டில் தங்களது ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஆரம்பித்தனர். சி.பி.ஐ.யினர், பெரம்பலூருக்கு வந்தபோது, இவரையும் விசாரித்துள்ளனர்.

உடையில் படிந்துள்ள கரை என்ன? அவர் தற்கொலை செய்தகொண்டபோது, அணிந்திருந்த உடையில் பிரௌன் / மரக்கலரில் கரைகள் பட்டிருப்பதாக தெரிகிறது. இதனை பரிசோதிக்க ரசாயன கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது[4]. முதலில், பாட்சாவின் உடைகள் எங்கே என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், வெள்ளை துணியில் சுற்றிக் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சாதிக்கின் உடலில் இருந்த கறுப்பு நிற பேன்ட், நீலத்தில் கறுப்புக் கோடு போட்ட சட்டை கழற்றப்பட்டு, வெள்ளை துணியால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு விட்டதாக, போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன[5]. நாளிதழ்களில்கூட அத்தகைய புகைப்படம் வெளியானது. பாட்சா உடலிலிருந்த ஆடைகளை யார் அப்புறப்படுத்தியது, வெள்லைத்துணியைச் சுற்றியது. பிறகு அந்த உடைகளை போலீஸாரிடம் ஒப்படைத்தது?

பாட்சா வீட்டிற்கு வந்தவர்கள் யார்-யார்? மார்ச் 10ம் தேதிக்கு பிறகு, யார் யாரெல்லாம், பாட்சாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்று விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். மார்ச் 12 மற்றும் 16 தேதிகளுக்கு இடையில் வந்துள்ள சிலரை விசாரித்ததில், பாட்சா மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். மார்ச் 16 அன்று, ஏதோ ஒரு கார் மர்மமாக வந்து சென்றதாகச் சொல்லப் படுகிறது. அந்த காரில் யார் வந்தது என்று தெரியவில்லை.

மஞசள் நிறத்தின் மகிமை என்ன? சாதிக் பாட்சா, நான் உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரன் ஆவேன், என்னுடைய மகன் முகேஷ் அம்பானி போன்று பெரிய பணக்காரன் ஆவான், என்றெல்லாம் ஏ.4 அளவில் மஞ்சள் நிற பேப்பரில் அச்செடுத்து, தனது படுக்கையறை மற்றும் குளியலறை கண்ணாடிகள் அனைத்திலும் ஒட்டி வைத்திருந்தானாம்! அவயெல்லாமே தமிழில் இருந்தன. காலையில் எழுந்ததும், இவற்றைப் பார்த்துதான் வேலையைத் துவக்குவானாம்! உற்சாகம் மூட்டவே அவ்வாறு ஒட்டி வைத்திருந்ததாகத் தெரிகிறது[6]. அப்படியென்ன மஞ்சள் நிறத்தின் மீது மோகம்?

வேதபிரகாஷ்

24-03-2011


குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: