சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)

குடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா? 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத்  தெரியவில்லை.

தற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா? “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.
1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.

2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.

4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.

மதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:

இந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.

சி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”,  என்று கூறியுள்ளார்.

செல்போன் விவரங்கள் என்ன? நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில்  சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும்? அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா? சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா? விசாரிப்பவர்கள் தாம் சொல்லவேண்டும்.

வேதபிரகாஷ்

18-03-2011

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)”

 1. vedaprakash Says:

  சாதிக் பாட்சா காணாமல் போன விவகாரம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழும்பி நிற்கும் நிலையில், அவரது உடலை(!) சாதிக் பாட்சா மரணத்தில் விடுபடாத மர்மங்கள்
  பதிவு செய்த நாள் : மார்ச் 22,2011,23:20 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=210872

  அடையாளம் காண்பித்த ராசாவின் முன்னாள் உதவியாளரும், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் காப்பீடு ஏஜன்டுமாகிய விவேகானந்தன் அளித்துள்ள தகவல்கள், சாதிக் தற்கொலை(?) சம்பந்தமான சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.

  கடந்த 16ம் தேதி பிற்பகல், 1.30 மணி அளவில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் சாதிக். அடுத்த 10 நிமிடங்களில், பிற்பகல், 1.40 மணிக்கு அவர் இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், மருத்துவமனையில் இருந்து சரியாக அடுத்த 30 நிமிடங்கள் கழித்து, அதாவது, 2.10க்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த, 5 முதல், 10 நிமிடங்களுக்குள் போலீசார் அங்கு வந்துள்ளனர். பொதுவாக, மருத்துவமனைக்குள் உடலில் காயங்களுடனோ, தற்கொலைக்கு முயன்றோ உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டால், மருத்துவமனையில் உள்ள விபத்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சேர்க்கப்பட்டவர் ஒரு வேளை இறந்துவிட்டால், உடனடியாக மருத்துவமனை அமைந்துள்ள சரக போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பது விதி. சாதிக் விவகாரத்தில், அப்போலோ மருத்துவமனையில் இருந்து, 30 நிமிடம் கழித்து, நிர்வாக மேல் மட்டத்தில் இருக்கும் ஒருவர், உளவுத் துறை போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான குறிப்பிட்ட காரணம் என்ன என்பது புதிராக உள்ளது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து, 2.50க்கு முழுக்க துணி சுற்றப்பட்ட நிலையில், சாதிக்கின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சூழலில், சாதிக்கின் முகத்தை போலீசுக்கு அடையாளம் காட்டிய ஒருவர், விவேகானந்தன் மட்டுமே.

  அப்போலோ மருத்துவமனையில் சாதிக்கின் உடல் இருந்த, பரபரப்பான 80 நிமிடங்களில், சாதிக்கின் உடலை(!) அடையாளம் காட்டிய விவேகானந்தனுக்குரிய நிமிடங்கள் எவ்வளவு என்பது தான் தற்போதைய மர்மம். இந்த மர்மத்திற்கு, நிருபர் ஒருவரிடம் விவேகானந்தன் விடையளித்துள்ளார். சம்பவத்தன்று, நாங்கள் வரும்போதே விவேகானந்தன் மருத்துவமனையில் இருந்தார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இவரோ, தான் மருத்துவமனைக்கு வரும்போது, கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்(சாதிக்கின் கட்டுமான நிறுவனம்) ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், போலீசார் என 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது சந்தேகத்திற்கான விதை தூவிய அவரது முதல் தகவல். சாதிக் பாட்சாவை நன்கு அறிந்தவர் யாராவது உடலை அடையாளம் காட்ட வருமாறு, நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, “நான் காட்டுகிறேன்’ என முந்திச்சென்ற விவேகானந்தன், உதவி கமிஷனருடன் சென்று அடையாளம் காட்டியுள்ளார். ஆனால், இவரே, “சாதிக்கின் சகோதரருக்கு பாலிசி பெற்றுத் தந்த வகையில் மட்டுமே அவரை தெரியும்’ என, இப்போது கூறியுள்ளார். விவேகானந்தன், மருத்துவமனைக்கு வரும் போது, கிரீன் ஹவுஸ் புராமோட்டர்ஸ் நிறுவன ஊழியர்கள் அங்கிருந்ததாக அவரே கூறியுள்ளார். அவர்கள் இருக்கும்போது, உடலை அடையாளம் காட்ட இவர் முந்த வேண்டிய கட்டாயம் என்ன? ஆனால், போலீஸ் வரும் போது அங்கு விவேகானந்தனை தவிர வேறு யாரும் இல்லை என கூறப்படுகிறது.

  போலீசார் அங்கு வரும்போதே, சாதிக்கின் உடலில் இருந்த கறுப்பு நிற பேன்ட், நீலத்தில் கறுப்புக் கோடு போட்ட சட்டை கழற்றப்பட்டு, வெள்ளை துணியால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு விட்டதாக, போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, “நான் முகத்தை பார்த்து அடையாளம் காட்டினேன். வேறு எதுவும் தெரியாது என விவேகானந்தன் தெரிவித்துள்ளார். சாதிக்கை, அவரது சகோதரரின் பாலிசி ஏஜன்ட் என்ற அளவில் மட்டும் தெரிந்த இவர், இந்த அளவிற்கு அவசரப்பட்டதன் அவசியம் என்ன என்பது, தெரியவில்லை. சாதிக் இறந்துவிட்டதாக, அன்று பிற்பகல் 1:40 மணிக்கு தகவல் வெளியாகியுள்ளது. இது, சாதிக்கின் டிரைவர், மனைவி, மாமியார் இவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், பாட்சா இறந்ததாக தகவல் கேள்விப்பட்ட நேரத்தில், தான் திருவல்லிக்கேணியில் இருந்ததாகவும், அங்கிருந்து ஆட்டோவில் அரை மணி நேரம் பயணித்து மருத்துவமனை வந்து சேர்ந்ததாகவும் விவேகானந்தன் சொல்கிறார். போலீசார் தரப்பு தகவல் படி, அவர்கள் வரும் போது விவேகானந்தன் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அப்படியென்றால், 1.45 மணிக்கு அவர் ஆட்டோவில் கிளம்பி இருக்க வேண்டும். அதாவது, பாட்சா இறந்ததாக அறிவிக்கப்பட்ட அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் புறப்பட்டிருக்க வேண்டும்.

  சென்னையில் ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசவேண்டியிருக்கும் சூழலில், மரண தகவலை எதிர்பார்த்து, கிளம்புவதற்கு தயாராக, ஆட்டோவில் அமர்ந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்! ஏதோ ஒரு வகையில் இது சாத்தியம் என்றாலும், சாதிக் பாட்சா மரணச்செய்தியை போலீசுக்கு தெரிவிப்பதற்கு முன், இவருக்கு சொல்லியது யார்? சாதிக்கின் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி இருந்த அவரை மீட்ட மனைவியும், டிரைவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் இருக்கும் அவசரத்தில் வேறுயாருக்கும் தகவல் தெரிவித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. அப்படியிருக்கும் போது, “கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் ஊழியர்கள் மூலம் அறிந்து கொண்டேன்’ என்கிறார் விவேகானந்தன். அப்படியெனில், ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் சொன்னது யார்? மரணம் சம்பவித்த மறுநொடியில் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல், காவல்துறைக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டது ஏன்? பாலிசி என்ற பெயரில் அடிக்கடி சாதிக்கின் அலுவலகத்திற்கு இவர் சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியிருக்கும் போது, சாதிக்கின் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், இவருக்கு முதலில் தகவலை சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

  உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாட்சாவை, கார் டிரைவர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்த மனைவி, அவரது மரணச்செய்தி கேட்டவுடன் கிளம்பி விட்டார் என்கிறது போலீஸ் தரப்பு. கணவனின் மரணத்திற்கு கண்ணீர் சிந்தக்கூட வழியில்லாமல், உடனடியாக மனைவி கிளம்பியது ஏன்? அவர் கிளம்பியதாக சொல்லப்படுவது உண்மைதானா? ஆம் எனில், அந்த கட்டாயத்திற்கு அவரை தள்ளியது யார்? காவல்துறையின் தகவலுக்கும், விவேகானந்தனின் கூற்றுக்கும் நிறைய முரண்பாடுகள். இது ஏன்? பாட்சாவின் வீட்டில், மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி நடந்தது என்ன? தன்னிடம் பாலிசி எடுத்த நண்பரின் தம்பி எனும் நெருங்கிய (!) சொந்தம் கொண்ட விவேகானந்தன் தானாக சென்று அடையாளம் காட்டியது ஏன்? விவேகானந்தனுக்கும் பாட்சாவுக்கும் உள்ள நெருக்கம் எப்படி? பாட்சாவின் மரணச்செய்தியை விவேகானந்தன் அறிந்து கொண்டது எப்போது? அவருக்கு சொன்னது யார்? பாட்சாவின் கடைசி கட்ட தொலைபேசி பதிவுகளில் விவேகானந்தன் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? இவையனைத்திற்கும் விடை தெரிந்தால், சாதிக்கின் “இருப்பை’ நெருங்கி விடலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: