கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது!

கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது!

மார்ச் 31ம் தேதிக்கு முன்பு கனிமொழியை விசாரிப்பது என்பது நடந்தே தீரும்: நேற்று வரை கனிமொழியை விசாரிப்பது என்பது என்ற பிரச்சினை மறுபடியும் எழும்பியிருந்தது. மார்ச் 31ம் தேதிக்கு முன்பு கனிமொழியை விசாரிப்பது என்பது நடந்தே தீரும் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் கூறிவந்தன[1]. ஆனால், இன்று காலை 10.30-11 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கனிமொழி, ராஜாத்தி அம்மாள் முதலியோரை விசாரிக்க அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்து விட்டனர்[2]. வாசலில் திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் இருந்த நேரத்தில், இவர்கள் யாருக்கும் தெரியாத வண்ணம் அமைதியாக உள்ளே சென்று விட்டனர்[3]. சொல்லி வைத்தால் போல, கனிமொழியியும், ராஜாத்த்தியும் காரில் / கார்களில் வந்து, பின் பக்கமாக கலைஞர் டிவி அலுவலகத்தில் வந்து விட்டனராம்[4]. விசாரணையும் ஆரம்பித்து விட்டதாம்!

2008ல் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளின் விவரங்களை சி.பி.ஐ சேகரித்துள்ளது. டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் ஆவணங்கள் அலசப்பட்டுள்ளன. குறிப்பாக, யுனிடெக்கின் எட்டு கம்பெனிகள் ஒன்றாக இணைந்து, மூன்று வருடங்களில் ஷேர்களை விற்க்கக்கூடாது என்ற சரத்தை எப்படி ஏய்த்தது என்று ஆய்ந்து வருகின்றனர்[5]. டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் இடையேயான வர்த்தகத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியாவையும் சிபிஐ போலீஸார் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் டி.பி. ரியால்டியின் 214 கோடி முதலீடு வருகின்றது. கலைஞர் டிவியில் பங்கீடு செய்து, திரும்பப் பெற்றுவிட்டாலும், அதனை விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிந்த விஷயமே.

கனிமொழி, நீரா ராடியா தொடர்புகள்: கலைஞர் டி.வி.,யின் 20 சதவீத பங்குகள் கனிமொழி வசம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரபல அரசியல் தரகர் நிரா ராடியா மற்றும் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தலாம் என, பி.டி.ஐ ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுபோல், கடந்த 2007ல் “2ஜி’ லைசென்ஸ் பெற மனு செய்த யுனிடெக் நிறுவனத்திற்கு, நில விவகாரம் தொடர்பாக, டாடா ரியல் எஸ்டேட் வழங்கியதாக கூறப்படும் 1,600 கோடி ரூபாய் குறித்தும், 2008ல், முறைகேடாக லைசென்ஸ் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் விசாரணையை துவக்கவுள்ளனர்[6].

ராஜாத்தி அம்மாளின் நிலை: நீராவின் டேப்புகளில் கனிமொழி-ராஜாத்தி பேச்சுகள் அளவுக்கு அதிகமாகவே அரசியல்-வியாபாரம் என பல விஷயங்கள் பேசப்பட்டது அம்பலமானது. டாடாவின் சொத்து ஒன்று அனுகூலமாக ராஜாத்திற்கு / கனிமொழிக்கு மாற்றியதாக / குறைவான விலைக்குக் கொடுத்ததாகவும் பேச்சு இருந்தது. ஆக, பண்பரிமாற்றம் அல்லது பலன்கள் எவ்வாறாக அந்த கம்பெனிகள் இந்த அரசியல்வாதிகளுக்கு அளித்தன என்பதனை ஆராய வேண்டிய நிலையில், தேர்தல் மற்றும் இதர விவகாரங்கள் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. அத்ற்கேற்றார்போல, அரசுதுறைகள் மற்ரும் சட்டத்தை நிறைவேற்றக்கூடிய நிருவனங்கள் / அமைப்புகள் அவ்வாரு செய்வதில் பிரஷ்கின்ரனவா என்ர சந்தேகமும் எழுகின்றது. துஷ்பிரயோகப்படுத்தப் படுகின்றன என்ற தோற்றமும், எண்னமும் ஏற்படுகின்றது.

மார்ச் 15, மார்ச் 31 ஆக மாறியது ஏன்? மார்ச் 15ம் தேதி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப் படும் என்று பரவலாகப் பேசப் பட்டது. அந்நிலையில் தான் திமுக-காங்கிரஸ் சீட்டு இழுபரி படலம் நடந்டேறியது. அதில் குறிப்பாக கனிமொழிக்கு சம்மன் அனுப்பக் கூடாது, சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது என்ற கண்டிஷன்களை திமுக போட்டது என்று பரவலாகப் பேசப் பட்டது. அழகிரியே சோனியாவை நேரில் பார்த்து பேசியதும் வியப்பாக இருந்தது. ஆக, விசாரணை தேதிதான் தள்ளிப் போட்டுள்ளதாக தெரிகிறது.

சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[7] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!

ஸ்வான் டெலிகாம், எடிசலாட் தொடர்புகள்: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை விற்கப்பட்டது. இந்த நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய சில மாதங்களில் 45 சதவீத அலைக்கற்றையை ஐக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4500 கோடிக்கு விற்று லாபம் பார்த்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராசா நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதி செய்யும் ஆதாரங்கள் இப்போது சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது[8].

குறைந்த காலத்தில் பெரிய பணக்காரராகிய சாஹித் உஸ்மான் பல்வா[9]: கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த சாஹித் உஸ்மான் பல்வா இன்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகிகையின்படி 1-பில்லியன்$ அதிபதியாக உள்ளார். மும்பையில் பல கட்டுமானங்களை முடித்து கோடிக்கணக்கில் வியாபாரம் செய்த, இவர், குறைந்த காலத்தில் பெரிய பணக்காரர் ஆனார் என்பதும் குறிப்பிடத் தக்கது[10]. இவரது மற்றும் இதர கம்பெனிகள் 22,000 கோடிகள் இழப்பிற்குக் காரணம் என்று சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது[11].

எடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.

கலைஞர் டிவிக்கும், சாஹித் உஸ்மான் பல்வாவிற்கும் உள்ள தொடர்பு[12]:  கலைஞர் டிவி நிதிநிலை அறிக்கையில் சினியுக் மீடியா என்ற நிறுவனத்திலிருந்து, ரூ 214 கோடி கடன் பெற்றதாக காட்டியிருந்தது. அது குசிகாவ் பழம் மற்றும் காய்கறி நிறுவனத்திலிருந்து கடன்பெற்றதாக உள்ளது. இதை வைத்துக் கொண்டு, கருணாநிதியையும், இந்த வழக்கில் சேர்க்கக் கோரி, சுப்ரமணியம் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்[13]. அந்த நிறுவனத்தின் அதிபர் தான் இந்த சாஹித் உஸ்மான் பல்வா[14]. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏன் சைனா போன்ற நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீரத்திலும் ஒரு ஹோட்டலை வாங்கியுள்ளார்.

யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது: ஸ்வான் நிறுவன அதிபர் கைதை தொடர்ந்து யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. யுனிடெக் நிறுவனம் ரூ.1,661 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று, தனது 60 சதவீத பங்கை டெலினார் என்ற நார்வே நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடிக்கு விற்றது. அதாவது வாங்கிய ஸ்பெக்ட்ரத்தில் 60 சதவீதத்தை மட்டுமே 4 மடங்கு விலை வைத்து விற்றது. எனவே இதிலும் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது[15]. இந்த யுனிநார் நிறுவனம் இந்தியாவில் செல்போன் சேவையை தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[16]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[17]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[18].

வேதபிரகாஷ்

11-03-2011


[4] Kanimozhi arrived at the party headquarters a little past 10.30 this morning. Dayaluammal, mother of Union Minister M K Alagiri and deputy Chief Minister M K Stalin, arrived a little later along with Karunanidhi’s nephew and one of the directors of the TV channel, P Amirtham, and entered through the rear entrance almost unnoticed.

[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், https://corruptioninindia.wordpress.com/2011/02/10/shahid-usman-balwa-raja-karunanidhi-nexus/

[12] Stock market reports say that the CBI is looking into DB Realty’s transfer of funds ~ about Rs 214 crore ~ to Kalaignar TV, which is run by a majority stakeholders belonging to Tamil Nadu chief minister Mr M Karunanidhi’s clan.

[16] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s  restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.

http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது!”

 1. vedaprakash Says:

  ஸ்பெக்ட்ரம்: கனிமொழி-தயாளு அம்மாளிடம் சிபிஐ விசாரணை, ராசாத்தி அம்மாளுக்கும் சம்மன்?
  வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 2011, 11:41[IST]
  https://corruptioninindia.wordpress.com/2011/03/11/cbi-grills-kanimozhi-rajathi-march-2011/

  சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்தியது.

  அதே போல கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் விசாரணை நடைபெற்றது.

  திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு கனிமொழி இன்று காலை வந்தார். அங்குள்ள கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் வைத்து அவரிடம் அங்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் தயாளு அம்மாளும் அறிவாலயம் வந்தார். அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி ரூ. 214 கோடியைப் பெற்றது.

  இந்தத் தொகை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக லஞ்சமாக ஸ்வான் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்குத் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

  ஆனால், இதை தாங்கள் கடனாகத்தான் பெற்றதாகவும், பின்னர் வட்டியுடன் அதைத் திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி நிர்வாகமும் கூறி வருகிறது. இதை சிபிஐ நம்பவில்லை.

  இந் நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. அதன் நிர்வாகியான சரத்குமாரிடமும் விசாரணை நடத்தியது.

  இந் நிலையில் அதன் உரிமையாளர்கள் என்ற வகையில் கனிமொழியிடமும் தயாளு அம்மாளிடமும் இன்று சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

  இந்த இருவரும் பங்குதாரர்கள் மட்டுமே என்றும், கலைஞர் தொலைக்காட்சியின் நிதி்ப் பரிவர்த்தனைகளில் இருவருமே தலையிட்டது இல்லை என்றும் அந்தத் தொலைக்காட்சி முன்பு விளக்கம் தந்ததும் குறிப்பிடத்தக்கது.

  இருப்பினும் வரும் 31ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விசாரணை தொடர்பாக விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தாக வேண்டு்ம் என்ற நிலையில் கனிமொழி, தயாளு அம்மாளிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

  டெல்லியிருந்து வந்த ஒரு பெண் அதிகாரி உள்பட 4 சிபிஐ அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்தினர்.
  Read: In English
  தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக திமுக-காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சிபிஐ விசாரணை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந் நிலையில் நிரா ராடியா டேப்புகளில் உள்ள விவரங்களின் அடிப்படையில் முதல்வரின் துணைவியார் ராசாத்தி அம்மாளுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
  English summary

 2. vedaprakash Says:

  CBI questions Karunanidhi’s wife Dayalu, daughter Kanimozhi
  Press Trust Of India
  Chennai, March 11, 2011
  First Published: 10:59 IST(11/3/2011)
  Last Updated: 16:12 IST(11/3/2011)
  http://www.hindustantimes.com/CBI-questions-Karunanidhi-s-wife-Dayalu-daughter-Kanimozhi/Article1-672009.aspx
  DMK MP and Tamil Nadhu Chief Minister Karunanidhi’s daughter Kanimozhi and his wife Dayalu Ammal were on Friday questioned by CBI at the party headquarters in Chennai in connection with the 2G spectrum allocation scam and her stake in Kalaignar TV channel. The CBI team, which reached here early this morning, also questioned Managing Director of the TV channel Sharad Kumar at the channel’s office which is housed in the DMK Headquarters, official sources said.
  The investigators questioned the trio regarding their stake in the TV channel which has allegedly received Rs 214 crore from Shahid Balwa promoted company which was a beneficiary of the spectrum allocation made by former Union Minister A Raja, official sources said.

  Both Dayalu Ammal and Kanimozhi collectively have nearly 80 per cent stake in the channel, they said.

  A team of CBI officials reached, Anna Arivalayam, the DMK headquarters where both were questioned about their stake. Kanimozhi was also questioned about her telephonic conversation with corporate lobbyist Niira Radia which were tapped by Income Tax department, they said.

  The CBI had told a court recently, “It has also come to light that there was a transaction of Rs 214 crore from M/s Cineyug Films private limited to Kalaignar TV in 2009.

  “The funds were arranged by M/s Cineyug Films from DB Group companies wherein the family members of Balwa are the directors or shareholders,” CBI had said in its application filed before the court.

  Kalaignar TV’s denial earlier had followed CBI’s allegations that there was a connection between scam accused Balwa-promoted Swan Telecom and the channel.

  Managing Director of Kalaignar TV, Sharad Kumar had denied receiving pay-offs from DB realty, whose former chief Balwa is in CBI net along with Raja.

  Kumar, who was also questioned last month, had also said the sum received from Cineyug Films was an “advance for transaction of shares”, and was returned with interest when the two parties differed over the price evaluation of shares.

  He had said that the money from Cineyug was received as loan which had been repaid with interest and the Income Tax department was aware of the transaction.

 3. vedaprakash Says:

  CBI questions Kanimozhi, Karunanidhi’s wife in 2G scam
  Economics times, 11 MAR, 2011, 05.03PM IST,IANS
  http://economictimes.indiatimes.com/news/politics/nation/cbi-questions-kanimozhi-karunanidhis-wife-in-2g-scam/articleshow/7679931.cms

  CHENNAI: Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s daughter Kanimozhi and his second wife Dayalu Ammal were Friday questioned by the Central Bureau of Investigation (CBI) in connection with the 2G scam .

  A four-member CBI team from New Delhi quizzed the two at Kalaignar TV office located on the top floor of the DMK headquarters here.

  Informed sources say the CBI team started its questioning of Kanimozhi and Dayalu Ammal around 11 a.m. and ended its session around 2 p.m.

  The CBI officials and Kanimozhi rushed out of the venue without speaking to the media.

  Karunandhi’s family members are believed to have majority state in Kalaignar TV Pvt Ltd, which received Rs.200 crore from Cineyug Films, connected to Swan Telecom’s Shahid Usman Balwa, who is under arrest in connection with the spectrum scam.

  Kanimozhi and Dayalu Ammal came to Kalaignar TV office around 10.30 a.m. and soon after that the CBI team arrived.

  P. Amrathan, a director of Kalaignar TV who is close to the family, also came to the office.

  CBI officials here were quiet, saying a team from New Delhi was doing the job of questioning.

  Karunanidhi’s family members reportedly have a majority stake in the regional TV channel. While Kanimozhi is said to have 20 per cent stake in the TV channel, Dayalu Ammal has 60 per cent stake.

  The balance 20 per cent is with Kalaignar TV managing director Sharad Kumar, the sources say.

  Balwa is one of the accused in the scam. His Swan Telecom was allegedly favoured by former communications minister and DMK MP A. Raja in the allocation of second generation (2G) spectrum licences to telecom firms.

  The CBI is probing if there was any quid pro quo under which Balwa transferred funds to the TV channel and in return got 2G spectrum licences at throwaway prices, the sources said.

  Balwa and Raja are among the four people in jail in connection with the corruption scandal that is said to have caused the exchequer massive losses.

  The CBI is visiting the television channel office for the second time in a month. On Feb 18, it raided the Kalaignar TV office early in the morning and questioned senior officials including Sharad Kumar.

  On Feb 16, Kalaignar TV welcomed investigative agencies to verify its books and documents.

  “The CBI or Income Tax Department (IT) can inspect our books and documents any time they want. We do not have any objection,” Sharad Kumar said in a statement.

  Two days later, CBI officials from New Delhi knocked at the channel’s doors at around midnight and completed the questioning of officials before dawn.

  Kumar said Kalaignar TV had no connection with the 2G spectrum allocation made in 2007-08 and the loan transaction with Cineyug Films Pvt Ltd in 2009.

  “Despite the clarification, the CBI has mentioned about the loan transaction in the court,” he said.

  According to Kumar, Cineyug gave some money as advance towards the acquisition of stakes in Kalaignar TV in 2009.

  Kanimozhi had earlier told IANS that she is not even a director in Kalaignar TV and the day to day operations of the channel are carried out by Kumar.

  CBI’s questioning of Kanimozhi and Dayalu comes at a time when the DMK is in the process of interviewing aspiring candidates for the April 13 assembly polls.

  DMK is also involved in discussions with its allies – Congress, PMK and others – in finalising the constituencies from which each one of them would fight the elections.

 4. சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு! « ஊழல் Says:

  […] [12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது!, https://corruptioninindia.wordpress.com/2011/03/11/cbi-grills-kanimozhi-dayalu-amma-march-2011/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: