சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்!

சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்

ஸ்பெட்ரம் வழக்கில் மும்பை தொழிலதிபர் கைது: நாட்டையே உலுக்கியுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாகி சாஹித் உஸ்மான் பல்வாவை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி.8,2011) கைது செய்தனர். இதற்கு முன்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந் நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்[1]. இந்த ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்த்து சாஹித் உஸ்மானையும் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை மும்பை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தி பின்னர் தில்லிக்கு அழைத்துச் செல்ல சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஸ்வான் டெலிகாம், எடிசலாட் தொடர்புகள்: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை விற்கப்பட்டது. இந்த நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய சில மாதங்களில் 45 சதவீத அலைக்கற்றையை ஐக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4500 கோடிக்கு விற்று லாபம் பார்த்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராசா நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதி செய்யும் ஆதாரங்கள் இப்போது சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது[2].

குறைந்த காலத்தில் பெரிய பணக்காரராகிய சாஹித் உஸ்மான் பல்வா[3]: கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த சாஹித் உஸ்மான் பல்வா இன்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகிகையின்படி 1-பில்லியன்$ அதிபதியாக உள்ளார். மும்பையில் பல கட்டுமானங்களை முடித்து கோடிக்கணக்கில் வியாபாரம் செய்த, இவர், குறைந்த காலத்தில் பெரிய பணக்காரர் ஆனார் என்பதும் குறிப்பிடத் தக்கது[4]. இவரது மற்றும் இதர கம்பெனிகள் 22,000 கோடிகள் இழப்பிற்குக் காரணம் என்று சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது[5].

எடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.

கலைஞர் டிவிக்கும், சாஹித் உஸ்மான் பல்வாவிற்கும் உள்ள தொடர்பு[6]:  கலைஞர் டிவி நிதிநிலை அறிக்கையில் சினியுக் மீடியா என்ற நிறுவனத்திலிருந்து, ரூ 214 கோடி கடன் பெற்றதாக காட்டியிருந்தது. அது குசிகாவ் பழம் மற்றும் காய்கறி நிறுவனத்திலிருந்து கடன்பெற்றதாக உள்ளது. இதை வைத்துக் கொண்டு, கருணாநிதியையும், இந்த வழக்கில் சேர்க்கக் கோரி, சுப்ரமணியம் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்[7]. அந்த நிறுவனத்தின் அதிபர் தான் இந்த சாஹித் உஸ்மான் பல்வா[8]. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏன் சைனா போன்ற நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீரத்திலும் ஒரு ஹோட்டலை வாங்கியுள்ளார்.

யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது: ஸ்வான் நிறுவன அதிபர் கைதை தொடர்ந்து யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. யுனிடெக் நிறுவனம் ரூ.1,661 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று, தனது 60 சதவீத பங்கை டெலினார் என்ற நார்வே நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடிக்கு விற்றது. அதாவது வாங்கிய ஸ்பெக்ட்ரத்தில் 60 சதவீதத்தை மட்டுமே 4 மடங்கு விலை வைத்து விற்றது. எனவே இதிலும் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது[9]. இந்த யுனிநார் நிறுவனம் இந்தியாவில் செல்போன் சேவையை தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[10]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[11]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[12].


[6] Stock market reports say that the CBI is looking into DB Realty’s transfer of funds ~ about Rs 214 crore ~ to Kalaignar TV, which is run by a majority stakeholders belonging to Tamil Nadu chief minister Mr M Karunanidhi’s clan.

[10] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s  restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.

http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40

குறிச்சொற்கள்: , , ,

7 பதில்கள் to “சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்!”

 1. vedaprakash Says:

  கலைஞர் டி.விக்கு ஸ்பெக்ட்ரம் பணம்-உறுதிப்படுத்த முடியாமல் திணறும் சிபிஐ
  வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 11, 2011
  http://thatstamil.oneindia.in/news/2011/02/11/spectrum-cbi-finds-kalaignar-tv-money-trail-aid0090.html

  டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான ஸ்வான் இயக்குனர் ஷாகித் உஸ்மான் பல்வா கலைஞர் டி.வியில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இதை இன்னும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த சிபிஐ உறுதிப்படுத்தவில்லை.

  இது குறித்து சிபிஐ கூடுதல் எஸ்பி விவேக் பிரியதர்ஷினி தனது அறிக்கையை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரிடம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

  2009ம் ஆண்டில் பல்வாவுக்குச் சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

  பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள டி.பி. ரியாலிட்டி குழுமத்தின் துணை நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி பெறப்பட்டு கலைஞர் டி.விக்கு தரப்பட்டுள்ளது.

  இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு
  2ஜி ஸ்பெக்ட்ரத்தை அப்போதைய அமைச்சர் ராசா ஒதுக்கினார். இதில் 45 சதவீதத்தை யுஏஇயைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு ஸ்வான் விற்று லாபம் ஈட்டியது.

  இந் நிலையில் ஸ்வானின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டி ரூ. 214 கோடியை கலைஞர் டிவிக்கு முதலீடாகத் தந்தது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

  ஆனால், இந்தப் பணத்தை 8 சதவீத வட்டிக் கடனாகவே வாங்கியதாகவும், பின்னர் சில பிரச்சனைகள் வந்ததால் அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியுள்ளது. இதை ஆவணங்கள் மூலம் உறுதியும்படுத்தியுள்ளது.

  ஆனால், இந்தப் பணத்தை முதலில் வேறு வகையில் தந்துவிட்டு பின்னர் ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடித்தவுடன் அதை கடனாக மாற்றிவிட்டதாகக் கூறும் சிபிஐ, தனது இந்தக் கூற்றை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது.

  இந் நிலையில் ராசா, பல்வா ஆகியோர் தரும் தகவலை வைத்து கலைஞர் டி.வியின் நிர்வாகி சரத் குமாரிடமும் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றுபம் கூறப்படுகிறது. மேலும் ராசாவுக்கு டி.பி. நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் பங்குகளையும் செல்போன் நிறுவன பங்குகளையும் தந்திருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

  சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறுகையில், இந்த வழக்குக்கு இணையான வழக்கு எதுவும் இல்லை.

  இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முனைய வேண்டும்.

  தாங்களே சட்டம் என நம் நாட்டில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தின் வலிமையைப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் பட்டியலில் இருந்தாலும் சரி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படவில்லை என இந்த வழக்கை தொடுத்த பொதுநல வழக்குக்கான மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் சுட்டிக் காட்டியுள்ளார். ஆதாயம் பெற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படாதது வியப்பாக உள்ளது.

  இந்த வழக்கில் 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஆதாயம் பெற்றவர்களின் நிலை என்ன?. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

  இதையடுத்து
  சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்த முறைகேட்டில் ஆதாயம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளியுங்கள். ராசா பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை மார்ச் 31க்குள் தாக்கல் செய்யப்படும் என்றார்.

  இதைத் தொடர்ந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை கே.கே.வேணுகோபால் படித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாகப் பரிசீலிக்காமலே வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன?. தொலைத் தொடர்புத் துறைக்கு தொடர்பே இல்லாத ஒரு நிறுவனம் கூட வங்கிக் கடன் பெற்றுள்ளது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.

 2. vedaprakash Says:

  2ஜி அலை‌க்க‌ற்றை‌யி‌ல் எந்த தொடர்பும் இல்லை: கலைஞர் டி.வி. விளக்கம்
  சென்னை, வெள்ளி, 11 பிப்ரவரி 2011
  http://thatstamil.oneindia.in/news/2011/02/11/kalaignar-tv-clarifies-on-2g-spectrum-scam-aid0136.html

  “2ஜி அலை‌க்க‌ற்றை விவகாரத்திற்கும், கலைஞ‌ர் தொலை‌‌க்கா‌ட்‌சி ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌ம் எந்தவித தொடர்பும் இல்லை” என்று அ‌ந்த தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் தெரிவித்துள்ளது.

  இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், 2007-08 ஆம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும் 2009ஆம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி, சினியூக் நிறுவனம் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

  கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 2009ஆம் ஆண்டு சினியூக் என்ற நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்திருந்தது. ஆனால் 2 நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2009ஆம் ஆகஸ்டு வரை பெறப்பட்ட ரூ.200 கோடியை கடனாக பாவித்து மொத்த பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பி தரப்பட்டது.

  அந்த தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிவர்த்தனையும் சட்டத்திற்கு உட்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே ஆகும்

 3. vedaprakash Says:

  DMK’s Kalaignar TV denies link to 2G money trail

  Headlines Today Bureau | Chennai, February 11, 2011 | Updated 11:09 IST
  http://indiatoday.intoday.in/site/Story/129392/india/dmks-kalaignar-tv-denies-link-to-2g-money-trail.html

  Kalaignar TV has Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s wife M.K. Dayalu and daughter Kanimozhi as the majority shareholders.
  Days after it was reported that 2G spectrum allocation scam money was invested in the DMK-backed Kalaignar TV, the channel has denied the allegation.

  Kalaignar TV managing director Sharad Kumar issued a statement on Friday clarifying that the channel had nothing to do with 2G money.

  In his clarification, Kumar said: “There is no connection between the spectrum allocation made in year 2007-2008 by the Department of Telecom and the loan given by the Cineyug Communications to Kalaignar TV in 2009.”

  “Cineyug gave Rs 200 crore as an advance to Kalaignar TV for the shares. But due to differences in the share values, Kalaingar TV assumed it as a loan till August 2009. And Kalaignar TV returned the money.”

  “Rs 31 crore was given as an interest. The same was informed to the I-T department. And tax has been paid for this. Everything was done within the legal framework. It is an open book,” the statement said.

  Headlines Today had on February 4 reported how the channel, owned by the DMK first family, was lent Rs 214 crore, allegedly given out by one of the beneficiaries of the scam. Documents accessed by Headlines Today established the money transfer from Dynamix Realty, a subsidiary of DB Reality to the channel through a three-step deal, which allegedly involved DB Group’s directors Asif Balwa and Shahid Balwa.

  DB Reality had also denied that it ever gave any loan to Kalaignar TV.

  Kalaignar TV has Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s wife M.K. Dayalu and daughter Kanimozhi as the majority shareholders.

 4. தேவப்ரியாஜி Says:

  Swan Telicom has many Fathers

  ECCI- Most Preferred builder for M.Karunanithi for last 40 years getting Thousands of Crores of order every now and then.
  http://www.ecciltd.com/beta/(S(mcks2n205dq4uf55erkip3jm))/home/group-companies.html

  The same group has ETA Star which got Kalaignar Kappidu Insurance orders.

  They are also one of the largest importers of coal and oil with a company called Coal and Oil company
  http://www.coalandoil.com/html/about_company.inc.php?head=about_company

  This company is already building 5000 Crore Project in the name of Coastal Energen in Tuticorin 1200 MW Coal Power Plant.

  This company 2nd phase is 2000 MW worth Rs.15,000 Crore.

 5. சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் Says:

  […] [1] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், https://corruptioninindia.wordpress.com/2011/02/10/shahid-usman-balwa-raja-karunanidhi-nexus/ […]

 6. கனிமொழி, ராஜாத்தி முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது! « ஊழல் Says:

  […] [7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், https://corruptioninindia.wordpress.com/2011/02/10/shahid-usman-balwa-raja-karunanidhi-nexus/ […]

 7. சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு! « ஊழல் Says:

  […] [6] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்,https://corruptioninindia.wordpress.com/2011/02/10/shahid-usman-balwa-raja-karunanidhi-nexus/ […]

சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு! « ஊழல் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: