ராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்!

ராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்!

கருணாநிதியின் நேரிடையான அரசிய பேரம்: சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே, உருட்டி மிரட்டி ஆட்சி செய்து வரும் மகாராஜா கருணாநிதியும், உள்ளே உட்கார்ந்து கொண்டே எல்லோரையும் ஆட்டி வைக்கும் ஊழல் மகாராணி சோனியாவும் போடும் நாடகம் ந்ன்றாகவே அரங்கேறியுள்ளது. “தலித்” என்றெல்லாம் சொல்லி, வேடம் போட்ட கருணாநிதி, ராஜாவை கைது செய்தாலும் பரவாயில்லை, தங்களது கௌரவம் உயர சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்தவுடன், சோனியாவுடன் பேசி, அப்படியே காரியத்தைச் செய்து விட்டனர். இனி, ராஜா பெரிய தியாகி போல சித்தரிக்கப் படலாம். காங்கிரஸோ, பார் நாங்கள் ஊழல் என்றதும், என்னமாய் வேலை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அபிஷேக் மனு சிங்வி, ஏற்கெனவே அந்த பாட்டை பாட ஆரம்பித்தாகி விட்டது[1].

காங்கிரசின் ஊள்ளூர் குட்ரோச்சியாகிறார், ராஜா: வெளியூர்காரன் ஊழல் பெரிதா, உள்ளூர்காரன் ஊழல் பெரிதா, என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால், குட்ரோச்சியை வெல்லும் வகையில், ராஜா உயர்ந்து வருகிறார். ஏற்கெனெவே டில்லி ஊடகங்கள், திமுகவில் பிளவா என்று கதையை ஆரம்பித்துள்ளது. அது எடுபடாமல் இருந்தாலும், அடிக்கடி சொல்லி வருகிறது. முன்பு, அழகிரி ராஜினாமா என்றது, இப்பொழுது, ராஜாவை முற்றிலுமாக, திமுகவிலிருந்து வெளியேற்ற அழகிரி சொல்லியிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒருவேளை அப்படி, திமுக ராஜாவை கைகழுவி விட்டால், காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் ஊழலைப் பற்றிக் கவலையே இல்லை!

ராகுலின் அதிரடி திட்டம்: அந்த ராகுல் காந்தி, சென்னைக்கு வந்தால், கருவைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற மாதிரி நடித்து நடித்து மக்களை ஏமாற்றி வந்தார். ஆனால் கூட்டு விஷயத்தில், ராகுல் திட்டம் தான் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதா, விஜய காந்த், விஜய் போன்ற எல்லோரிடத்திலும் பேசிய பேரம் எடுபடாமல் போகவே, காங்கிரஸ்-திமுக கூட்டுத் தொட்ர தீர்மானிக்கப் பட்டது. அதற்காக, ராகுல், பலமுறை தமிழ்நாடடிற்கு வந்து சென்றாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தாம், பிரிவினை கோஷ்டிகள் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் என்று நன்றாகவே தெரிந்து கொண்டார். ஆகையால், அவர்களை வைத்தே, திமுகவினரை சோதனை செய்துள்ளார். கருணாநிதியே, அசரும் அளவிற்கு, ராகுல் சதி செய்திருப்பதை திமுகவினர் பிறகு உணர்ந்தனர்.

கொதித்துப் போன கருணாநிதியின் நேரடி சந்திப்பு: ராடியா-ராஜா டேப் விஷயத்தில் கருணாநிதி அதிகமாகவே கொதித்துள்ளார் என்று சோனியா நன்றாகவே அறிவார். ராஜாத்தியின் பேரத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடமே சொல்லாமல், அவ்வாறு அப்பெண்ணிடம் பேசியதை அறிந்து நொந்து விட்டார். நிச்சயமாக காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய பேரம் நடந்திருக்காது என்று உணர்ந்தார். மேலும், அது சோனியாவின் சதிவேலை என்று பேசப்பட்டபோது, உஷாராகி விட்டார். ஆகையால், இதை முடுவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது தெரிகிறது. இந்நிலையில், கருணாநிதி, நேரிடையாக சந்திக்க வந்ததும், சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தீர பேசி, பிறகே சந்திக்க முடிவு செய்தார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 31-01-2011 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது[2].

கனிமொழி வரக்கூடாது என்று சொன்ன ராகுல் காந்தி: காங்கிரஸ் தனது ஊழல் இமேஜை ஓரளவிற்கு மாற்றிக் கொள்ள முயல்வதால், ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தப் பட்டுள்ளவரும் எவரும் கருணாநிதியிடம் வரவேண்டாம் என்று சொல்லப்பட்டது. மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ். நேற்று காலை மன்மோகன் சிங்கை சந்தித்தார் கருணாநிதி. மன்மோஹனிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது. கருணாநிதி வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அவர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து மனம் குளிர வைத்தார். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் கருணாநிதி காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.

“ஹாட் அண்ட் கோல்ட் சிகிச்சை கொடுத்த ராகுல்: மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சி.பி.ஐ. ராஜாவை துளைத்தெடுக்கும் செய்திகளும் வந்து விட்டன. ஆனால் ஒரு நிலையில் கருணாநிதி அமைதாயாக இருந்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முணுமுணுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் கருணாநிதி முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார். அதாவது முடிவுகள் அவருக்குத் தெரிந்தே இருந்தன போலும்! காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டனர்.

ராகுலின் தோரணை கருணாநிதியை அசரவைத்தது! அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம்.  ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த கருணாநிதி, நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட கருணாநிதி அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது?: கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம். மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம். இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.
140 தொகுதிகளில் திமுக: திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது.  இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்  கருணாநிதி இருக்கிறாராம். ஆனால், இவையெல்லாமே, ஒரு அரசியல் நாடகம் என்பது சீகிரத்தில் தெரியப் போகிறது!.

© வேதபிரகாஷ்

02-02-2011


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: