ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை?

ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை?

ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: தம்மிடம் நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ திங்கட்கிழமை 20-12-2010 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1]. சம்மனின்படி, அதிகாரிகளுக்கு முன் ராஜா வந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பிறகு அவரிடமிருந்து அத்தகைய கேள்வி-பதில் கொண்ட வாக்குமூலம் ஒன்று பெறப்படும்[2]. சி.ஆர்.பி.சி பிரிவு 160ன்படி இந்த நடவடிக்கை கடைப்பிடிக்கப்படும்[3].

ராஜாவின் காரசாரமான பதில்கள்: சி.பி.ஐ., முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அவரது அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜா அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ராஜா, நேற்று காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். ஆனால் அவர் உடல் பரிசோதனைக்காக வந்து சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, சி.பி.ஐ., அனுப்பிய சம்மன் குறித்து கேட்டனர்.

அப்போது அவர் பதிலளித்ததாவது[4]:சி.பி.ஐ.,யை கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப்பவன். நான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளேன்.ரெய்டு நடத்திய பின், சம்மன் அனுப்பி, விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களை அவர்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டப்படவில்லை; அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்ய மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய ராஜா காத்திருந்த நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் பேசியவிதத்திலிருந்தே ஊடகங்களின்மீது கோபத்துடன் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.

கோபத்துடன் ராஜா கேட்டது – எங்கே அந்த டைம்ஸ் டிவி? ராஜா குறிப்பாக, “எங்கப்பா? எங்கே அந்த டைம்ஸ் டிவி, வந்திருக்கிறாங்களா?” என்று கேட்டு விசாரித்தது, அவர் அந்த செனலை உன்னிப்பாகப் பார்க்கிறார் என்ரு தெரிகிறது. இருப்பினும், “என்ன மடத்தனமாக கேட்கிறீர்கள்………………………முட்டாள்தனமான கேள்வி கேட்கிறீர்கள்……………….எனக்கு ஆஸ்பத்திரி செல்வதற்கு உரிமையிலையா………………….என்றெல்லாம் பொரிந்து தள்ளியபோது, அவரது கோபத்தின் உச்சம் நன்றாக தெரிந்தது. முன்பு திமிராக, அலட்சியமாக, எடுத்தெரிந்து பேசும் போன்ற முகபாவத்தைக் கொண்ட ராஜாவின் முகம் இப்பொழுது நிச்சயமாக சுருங்கிவிட்டது. மனதில் கவலை வந்துவிட்டதால், ஒரு சோகக்கலையும் படர்ந்துள்ளது தெரிகிறது.

நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.., கண்டு பயப்பட தேவையில்லை: சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதில் அளித்ததாவது[5]: நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறினார, “.நான் குற்றவாளி அல்ல முன்ஜாமீன் கேட்டு மனு செய்வது என்ற கேள்வியே இல்லை. சி.பி.., கண்டு நான் பயப்படவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரதணக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், அதனால் முன்ஜாமீன் கோரப் போவதில்லை[6]. நீரா ராடியா மற்றும் டிராய் அதிகாரி பைஜாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராக வேண்டிய நாள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை இல்லை. அதே நேரத்தில் – செவ்வாய் கிழமை அன்று ஆஜராகலாம் என தெரிகிறது.

வழக்கமானது தான் சி.பிஐ., நோட்டீஸ்., கருணாநிதி பேட்டி : இதற்கிடையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி ராஜா விவகாரம் குறித்து கூறுகையில்; ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்; காங்., தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. யாராலும் முறித்து விட முடியாது.சி.பி.ஐ., நோட்டீஸ் வழங்கியது குறித்து கேட்டபோது ஒரு விவகாரம் என்றால் அவர்கள் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமானதுதான், ராஜா உரிய பதில் அளிப்பார் என்றார்.

கருணாநிதியின் பேட்டி, ராஜா அவருடன் சந்தித்து இதைப் பற்றி கலந்தாலோசிப்பது தெரிகிறது[7].

சி.பி.., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே? இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே…
இந்த சோதனையை தி.மு..,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா? அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
ராஜாவிற்கு, சி.பி.., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே? 

அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ்தி.மு.., உறவு எப்படி உள்ளது? உங்களால் வெட்ட முடியாது[8].
ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி? 

இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே? அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.

ராஜாவைத் தவிர, சென்ற புதன்கிழமையன்று ரெய்ட் / சோதனைக்குட்பட்ட நபர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்புவதாகத் தெரிகிறது.

நேற்று (19-12-2010) அருண் ஷோரி, முந்தைய டெலிகாம் அமைச்சர் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில், தான் சி.பி.ஐ முன்பு தோன்ற தயாராக இருப்பதாக கூறினார்.  தான் மற்ற அமைச்சர்களைக் கலந்தாலோசித்து தான் தீர்மானம் எடுத்துள்ளதாகவும்,ஆதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் ராஜ்சா தான் முறையை மாற்றினார். 2001லிருந்தான விசாரணை மேற்கொள்ள தாமதிக்கக் கூடாது, மன்மோஹனுக்கு தெரிந்தே இந்த ஊழல் நடந்துள்ளது, ராஜா அப்ரூவராக மாறி[9] தனக்குத் தெரிந்த விவரங்களை ரஎல்லாம் சொல்லவேண்டும், என்று கூறியுள்ளார்[10]..


[5] தினமலர், சி.பி..,முன்பு ராஜா நாளை ஆஜராகிறார், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010,16:06 IST

மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 20,2010,16:26 IST;  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149695

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை?”

  1. vedaprakash Says:

    ராடியா புதிய டேப் வெளியானது: ராசா- ரத்தன் டாடா ரகசிய பேரம் அம்பலம்

    First Published : 19 Dec 2010 03:31:22 AM IST
    http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=348601&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

    சென்னை, டிச. 18: தொழிலதிபர் ரத்தன் டாடா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா இடையே நடைபெற்ற ரகசிய பேரத்தை அம்பலப்படுத்தும் நீரா ராடியாவின் புதிய டேப் வெளியாகி உள்ளது.

    புதிய டேப் விவரங்களை “அவுட்லுக்’ இதழ் சனிக்கிழமை வெளியிட்டது.

    டாடா- ராடியா: நீதிபதி ரகுபதியை நிர்பந்தித்த விவகாரத்தில் ஆ. ராசாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என்பது குறித்து ரத்தன் டாடாவும், நீரா ராடியாவும் தொலைபேசியில் பேசியது டேப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ராசா சர்ச்சையில் சிக்கியிருப்பது குறித்து ரத்தன் டாடா, நீரா ராடியாவிடம் கேள்வி எழுப்புகிறார்.

    இதற்குப் பதிலளிக்கும் நீரா ராடியா, நீதிபதியிடம் ராசா பேசவில்லை, பார் கவுன்சில் தலைவர்தான் அவரது பெயரைப் பயன்படுத்தியுள்ளார், அதனை நீதிபதி ஏற்கவில்லை, இதனால் ராசாவின் பதவிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதாக உறுதியளிக்கிறார்.

    ஆர்.கே.சண்டோலியா- ராடியா: ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியாவிடம், நீரா ராடியா பேசியது மற்றொரு டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரில் டாடா நிறுவன உதவியுடன் | 9 கோடி செலவில் மருத்துவமனை அமைப்பது குறித்து அந்த உரையாடலில் பேசப்படுகிறது.

    ஆர்.கே.சண்டோலியாவிடம் பேசும் நீரா ராடியா, பெரம்பலூரில் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக டாடா சன்ஸ் நிறுவன இயக்குநர் கிருஷ்ணகுமாரிடம் பேசி விட்டேன், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார் என்று கூறுகிறார்.

    ராடியாவின் தொலைபேசி அழைப்பை ராசா எதிர்பார்த்து காத்திருப்பதாக ஆர்.கே. சண்டோலியா தெரிவிக்கிறார்.

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் டாடா டெலிகாம் நிறுவனத்துக்கு சாதகமாகச் செயல்பட நீரா ராடியா இரு தரப்பிலும் பேரம் பேசியிருப்பது புதிய டேப் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  2. P. Ganesa Gurunathan Says:

    The drama initiated by Sonia has been going on well.

    As the Sonia Congress meeting going on, the things also move accordingly.

    Thus, the Indian government works as per the wishes of Sonia.

    Irony that Indian has to be ruled by the whites always.

  3. P. Ganesa Gurunathan Says:

    What about Karunanidhi talking with Tata?

    He claims now that Tata would not bribe and so also himself (Karunanidhi), as if he if Clean no.2, only next to sonia!

    The nexus between the corrupt politicians and more-corrupt industrialists is clearly exposed in the Spectrum scams.

    Therefore, the sonia-congress execelled all scams, frauds and corruption cases

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: