கபில் சிபல், கனிமொழி, கருணாநிதி: உழலை மறைக்கும் சதி ஆரம்பித்துவிட்டதா?

கபில் சிபல், கனிமொழி, கருணாநிதி: உழலை மறைக்கும் சதி ஆரம்பித்துவிட்டதா?

போஃபோர்ஸ் ஊழலை[1] மறைத்து ஏப்பம் விட்ட சோனியா காங்கிரஸுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்கும் விதம் தெரியாமலா போய்விடும்? அச்சதி ஆரம்பித்துவிட்டது எனலாம். ஏனெனில் காங்கிரஸ் அதில் கைவந்த நிபுண வல்லுனக் கட்சியென்பது தெரிந்த விஷயமே. காங்கிரஸும், திமுகவும் கூட்டாக செயல்பட்டால் அவ்வளவுதான், எவரையும் மிஞ்சும் வகையில் பொய்களை அள்ளிக் கொட்டி, நாடகம் ஆடி, ஊழலுகே ஊழல் கொடுத்துவிடிவர். அதுதான் இப்பொழுது தொடக்கியுள்ளது. முன்பு கனிமொழி முரண்பாடாக பேசியதைச் சுட்டிக் காட்டியிருந்தேன்[2]. அந்த நாடகத்தின் விளைவு கபில் சிபல்[3] அமைச்சரானார், அப்பொழுது கேட்டபோது, தனக்கு ஒன்றும் தெரியாது என்றது அக்குழந்தை! ஆனால் அக்குழந்தைதான் இப்பொழுது மூன்று துறைகளுக்கும் அமைச்சராக இருகிக்கிறது. நிறையவே சாக்கிலேட்-பிஸ்கெட்-பால் என்ரு குடித்து வருகிறது!

புதிய அமைச்சரை கருணாநிதி முடிவுசெய்வார்: கனிமொழி[4]: ராஜா ராஜிநாமாவைத் தொடர்ந்து கனிமொழி அல்லது டி.ஆர்.பாலு –இருவரில் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்தன. அந்நிலையில் கனிமொழி மேற்கண்டவாறு தெரிவித்தார்[5]. “ராஜாவுக்கு பதிலாக யார் அந்த மந்திரி என்பதை திமுகத் தலைமை, கருணாநிதி தீர்மானிப்பார்”, என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா தவறுசெய்யவில்லை. நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க வேண்டும் என திமுக விரும்பியதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார் என கனிமொழி என்றும் விளக்கமும் அளித்தார். ஆனால், கபில் சிபல் தான் அமைச்சரானார்!

ராசாவுக்கு பதில் யார்?: எனக்குத் தெரியாதுகனிமொழி: ஆ. ராசா பதவி விலகியதை அடுத்து நீங்கள்தான் புதிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரா என்று கருணாநிதி மகளான கனிமொழியிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாது என்று பதில் கூறினார்[6]. அடுத்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் யார் என்பதை கட்சித் தலைமை தீர்மானிக்கும் என்றார் அவர்.  கருணாநிதி யாரோ, கனிமொழி யாரோ? கருணாநிதி தீர்மானிப்பார், ஆனால், கனிமொழிக்குத் தெரியாது. பிறகு கனிமொழி ஏன் பிரணாப்பை சந்திக்க வேண்டும்? ராஜவின் பதவி பறிக்கப்படக்கூடாது என்று ஆதரித்து பேசவேண்டும், மிரட்ட வேண்டும்? அப்பொழுது மட்டும் கனிமொழி பேசியதை கருணாநிதி தந்தை என்ற முறையிலேயோ, திமுக தலைவர் என்ற ரீதியேலேயோ அறிவாரா?

 

கருணாநிதி யாரோ, கனிமொழி யாரோ?  கருணநிதியின் மகள் தான் கனிமொழி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆ. ராசா பதவி விலகியதை அடுத்து நீங்கள்தான் புதிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரா என்று கனிமொழியிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாது என்று பதில் கூறினார்[7]. அடுத்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் யார் என்பதை கட்சித் தலைமை தீர்மானிக்கும் என்றார் அவர்.  அப்படியென்றால், முதலில் மன்மோஹனே வைத்துக் கொண்டு அடுத்த நாளில், கருணாநிதிதான் கொடுக்கச் சொன்னாரா?

ஊழலை மறைக்க இறங்கியுள்ள கபில் சிபல்: 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பாக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை தேவையற்றது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்[8]. மேலும் அவர் அரசை அகற்றும் அதிகாரம் எதிர்கட்சிகளுக்கு உண்டு. அவர்களால் அது முடியாவிட்டால் அரசை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றார்.  2ஜி முறைகேடு தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை முற்றிலும் அரசியல் நோக்கம்  என்றும், முறைகேடாக லைசென்ஸ் பெற்ற 82 நிறுவனங்களுக்கு எதிராக தனது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்[9].  2008ல் கொடுத்து இரண்டு வருடங்கள் மேலாக கோடிகளை அள்ளியபிறகு, ரத்து செய்தால் பணம் கிடைத்துவிடுமா[10]? சரி, ராஜா சென்ன சொல்கிறார்?

தொலைதொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளேன்சொல்வது ராஜா[11]: ஊட்டி அருகேயுள்ள மஞ்சனக்கொரை ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா கூறியதாவது: “நான் பொதுவாழ்வுக்கு வந்து, 20 ஆண்டுகள் ஆகின்றன. நான் அமைச்சர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீலகிரி மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவி போய்விட்டால் முடங்கி போய்விட மாட்டேன். லோக்சபா தேர்தலில் என்னை அதிகப்படியான ஓட்டுகள் வித்தியாசத்தில் நீலகிரி மக்கள் வெற்றி பெற செய்தனர். அதன் மூலம் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் பதவி கிடைத்தது[12]. அந்தத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினேன். ஏழை தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பாமர மக்களுக்கும் தொலைதொடர்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற சபதத்தை நிறைவேற்றியே பதவியை துறந்தேன்.

ராஜாவே சொல்லும் புது கணக்கு: “என் முயற்சியில் நிமிடத்துக்கு 1.60 என்றிருந்த கட்டணம், 10 பைசாவாக குறைக்கப்பட்டது. 30 கோடியாக இருந்த தொலைபேசி இணைப்புகள் தற்போது 73 கோடியை எட்டியுள்ளது. என் மீது விமர்சனங்கள் வரலாம். நீதிமன்றத்தில் இந்த விவகாரம் இருப்பதால் நான் அதிகம் பேச மாட்டேன்”. அதாவது 43 கோடி புதிய இணைப்புகளிலிருந்து, லைசென்ஸ் பெற்ற புதிய கம்பெனிகள் கோடிகளை அள்ளியுள்ளன, அள்ளுகின்றன. விற்கும் விலையைக் குறைத்து, வாங்கும் வாடிக்கையாளர்களை இரண்டிற்கும் மேலாக உயர்த்தும் போது, லாபமும் பன்மடங்கு பெருகும் என்பது அறிந்த விஷயம் தான். ஆக 43 கோடி புதிய இணைப்புகளிலிருந்து வந்த வருமானம் கோடி-கோடிகள். இதில் 1,76,000 கோடிகள் என்பது ஒன்றும் இல்லை, எஎனெனில், அக்கம்பெனிகள் அள்ளுவது கோடி-கோடிகள். ஆனால், இதற்கேற்றபடி மக்களுக்கு பலன் கிடைத்தது என்பதைவிட, அரசாங்கத்திற்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

2008ல் உரிமம் கொடுத்து, 2010 முடியும் போது ரத்து செய்தால் பணம் கிடைத்துவிடுமா? கொடுத்த லைசென்ஸுகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று இவர் நோட்டீஸ் கொடுப்பார், அவர்கள் பக்கம்-பக்கமாக பதில் கொடுப்பார்கள்; “ஹியரிங்” என்று வருவார்கள், இவர் மகனே அவர்களுக்காக ஆஜராவார்; ஆணை போடுவார்கள்; மேல் முறையீடு செய்வார்கள்………………..கேட்டால், சட்டபடி நடவடிக்கை எடுத்தாகி விட்டது. பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும், ஏனெனில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது……………….இப்படியெல்லாம் பதில் சொல்வார்கள்……………………சரி, கொடுத்து இரண்டு வருடங்கள் மேலாக கோடிகளை அள்ளியபிறகு, ரர்த்து செய்தால் பணம் கிடைத்துவிடுமா?

வேதபிரகாஷ்

© 01-12-2010


[1] போஃபோர்ஸ் ஊழல் 1980களில் ஆரம்பித்து சமீபத்தில் தான் சமாதி கட்டப்பட்டது. அதாவது, “காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வஸ்டிகேஷன்” என்ற நிலைக்கு அடிமையான சி.பி.ஐ. அறவே குட்ரோச்சியை விட்டுவிட்டது.

[2] வேதபிரகாஷ், கபில் சிபலை பரிந்துரைத்தது கருணநிதியா, கனிமொழியா, சோனியாவா?,

[3] கபில் சிபல் சாதாரணமான ஆள் அல்ல, சட்டம் நன்கு தெரிந்த அனுசரித்துப் போகக் கூடியவர். நெளிவு-சுளிவுகளுக்கும் அரசியல் எஜமானிக்கு ஏற்றமுறையில் நடந்துகொண்டு, தனது தொழிலை அமைச்சராக இருந்து கொண்டு செய்துவரும் சோனியாவின் அபிமானிகளில் ஒருவர்.

[4] தினமணி, புதிய அமைச்சரை கருணாநிதி முடிவுசெய்வார்: கனிமொழி, First Published : 15 Nov 2010 02:08:43 PM IST; Last Updated : 15 Nov 2010 09:18:26 PM IST; http://www.dinamani.com/edition/story.aspx?Title=…….ID=164&SEO=&SectionName=Latest

[5] The Hindu, Karunanidhi will decide new cabinet nominee: Kanimozhi, Nov.15, 2010, http://www.thehindu.com/news/national/article887769.ece

The DMK MP said it was for the party leadership to decide on Raja’s successor. “That is for the party leaders to decide. They will make a decision,” she said when asked whether the next Telecom Minister would be from the DMK. “I do not know about it,” was her reply to a query on whether she would be the next Telecom Minister.

[6] தினமணி, ராசாவுக்கு பதில் யார்?: எனக்குத் தெரியாதுகனிமொழி, First Published : 16 Nov 2010 01:51:10 AM IST

Last Updated :

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName……….B4%E0%AE%BF

[7] ராசாவுக்கு பதில் யார்?: எனக்குத் தெரியாது – கனிமொழி, First Published : 16 Nov 2010 01:51:10 AM IST

Last Updated :

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName……….B4%E0%AE%BF

[8] தினமலர், 2 ஜி ஸ்பெக்டரம் முறைகேடு: நடவடிக்கை தொடக்கம்கபில் சிபல், நவம்பர் 30, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=136918

[9] Show-cause notices have been issued to 85 licence-holders, Swan Telecom has been referenced to the ministry of corporate affairs to investigate if it is a front, notices have been sent to 119 licence-holders who have not rolled out any services yet, and an attempt has been made to calculate the exact amount of money which has been lost in these spectrum allocations.

[10] The extent of the corruption and the reach of corporate lobbyists into the system demand a clean-up which goes beyond show-cause notices and investigations.

http://www.dnaindia.com/opinion/editorial_kapil-sibal-gets-going-but-he-has-miles-to-go_1474688

[11] தினமலர், புரட்சியை ஏற்படுத்தியுள்ளேன் : மாஜி அமைச்சர் ராஜா, பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010,23:17 IST; மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 01,2010,00:39 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=136372

[12] அதனால்தான், அமெரிக்கப்பத்திரிக்கைகள் கேட்டன, எப்படி அத்துறையைப் பற்ரி ஒன்றுமே தெரியாத ஆள், மந்திரியாக இருந்தார்? என்ன செய்தார், 50 பில்லியன் $ ஊழலைத்தானே செய்தார், என்றெல்லாம் கேட்டன.

குறிச்சொற்கள்: , , ,

2 பதில்கள் to “கபில் சிபல், கனிமொழி, கருணாநிதி: உழலை மறைக்கும் சதி ஆரம்பித்துவிட்டதா?”

 1. ரிஸ்வான் அஹமத் Says:

  Kapil Sibal has been a sophisticated advocate knowing the nuances of scams and frauds.

  Now, he has been made minister of the portfolio held by Maran and Raja.

  Within given time, he would clear off the scam and make Mr Clean still clean with surf, RIN etc,

 2. P. Ganesa Gurunathan Says:

  Exactly,
  now only the CBI has started raiding the premises, after giving enough time to the involved.

ரிஸ்வான் அஹமத் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: