ஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்!

ஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்!

டாட்டாவைப் பின்பற்றி ராஜாவும் தனது கருத்தை வெளியிடுவாரா? சம்பந்தப்பட்ட ரத்தன் டாட்டா முதன்முதலாக ராடியா டேப்புகளைப் பற்றி தனது கருத்துகளை வெளியிடுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசாங்கம், இத்தகைய டேப்புகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உபயோகிக்கக்கூடாது, என்றும் கூறியுள்ளார்[1]. அந்த டேப்புகளில், நீரா ராடியா, பர்கா தத் மற்றும் வீர் சிங்வி என்ற மூவர்[2], ரத்தன் டாடா, ராஜா, அஹ்மது படேல்[3], ராகுல், என பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முதலியோருடன் நடந்துள்ள உரையாடல்கள்[4], எப்படி திமுக இவர்களைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளை வாங்கியது மற்றும் அதனால், பதிலுக்கு எப்படி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட நிறுவனங்கள் கோடிகளில் பலன் பெற்றது, அதனால் ரூ 1,78,000 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அவை உலகம் முழுவதும் பரவி, பலராலும் விமர்சனிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் உச்சநீதி மன்றமும், ராஜாவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது[5].

உலகம் முழுவதும் விமர்சனிக்கப்படுகிறது, விவாததக்கப்படுகிறது: வாஷிங்டன் போஸ்ட்[6], நியூயார்க் டைம்ஸ், வல் ஸ்ட்ரீட் ஜேர்னல்[7] போன்ற அமெரிக்க நாளிதழ்களும் இதைப் பற்றிய செய்திகளை வெளியிடுள்ளது. இதனால், சமந்தப்பட்டவர்கள் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஊடகக்காரர்கள் ஏற்கெனெவே, தங்களுடைய உரையாடல்கள் திரித்துக் கூறப்படுகின்றன என்றனரே தவிர, ஆனால், அவர்கள் அந்த உரையாடல்கள் பொய் என்றோ, குறிப்பிட்ட நபர்களுடன் பேசவில்லை என்றோ மறுக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்களது குரல்கள் அடிக்கடி டிவிக்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் அவர்களது குரல்களை எளிமையாக அடையாளங்கண்டு விட்டனர், உண்மையை அறிந்து கொண்டு விட்டனர். இதனால் வாட்டர்கேட்[8] போல மாறுதல் ஏற்படுமோ என்றும் சமந்தப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.

ராஜா, கனிமொழி முதலியோர் நீராவிடம் அதுமாதிரி ஏன்பேசினர் என்று விளக்கல் அளிப்பாரா? டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா? கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில்! வீரமணி கூட்டமோ, பொதுகூட்டம் போட்டு கிண்டல் அடித்துள்ளது போல பேசியயள்ளனரே தவிர, நேரிடையாக மறுக்கவில்லை. குறிப்பாக, அன்று ராஜாவையே அங்கு வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் இந்த டேப்புகளை கருணாநிதி கேட்டிருந்தாலே, மிகவும் வருத்தப்பட்டிருப்பார். என்னை மீறி இவர்கள் எப்படி, இப்படி பேரத்தில் இறங்கினார்கள் என்ரு கொதித்திருப்பார்.

ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை  சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது அச்சரியமாக உள்ளது. நீரா ராடியா டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களின் மக்கள் தொடர்பு பிரிவை கண்காணித்து வருகின்ற ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறார். அவரை அமலாஅக்கப் பிரிவினர் வரவழைத்து வாக்குமூலத்தைப் பெற்றனர். அந்நிலையில், ரத்தன் டாடா, “நீரா ராடியா டேப்புகள் ஒரு புகைப்படிந்த கண்ணாடிதான், அதனைத் துடைத்துவிட்டு, உண்மையினை அறியவேண்டும். அதைவிடுத்து, தனிநபரின் மீது சேற்றை வாரியிரைப்பது, அவரைக் களங்கப்படுத்துவது,….முதலியவை கவனத்தைத் திசைத் திருப்பும் போக்காக உள்ளது”, என்று என்.டி.டிவிகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்[10].

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நனிநபர் விமர்சனிக்கப் படக்கூடாது[11]: “இப்பொழுது நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்…..அனுமதிக்கப்படாத வகையில் ஒலிநாடாக்களை வெளியிடுகிறார்கள்……..உடனே ஊடகங்கள், குற்றஞ்சாட்டுவது, தண்டனை கொடுப்பது, தூக்கிலிடுவது………………போன்ற காரியங்களில் இறங்கியுள்ளன…..இதெல்லாம், தனிநபரின் மனிதத்தன்மைய கொல்வது போலாகும்…..அரசாங்கம் ஒன்றை செய்யவேண்டும். உடனடியாக, ஒரு தனிக்கையாளரை நியமிக்க வேண்டும், புலம் விசாரணை நடத்தவேண்டும், குற்றாவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படவேண்டும், ….அதைவிடுத்து,……………….ஜனநாயகமற்ற முறையில், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டலாம் என்ற நிலை மாறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நிரபராதி என்று வாதிட உரிமை உள்ளது, ஆக நீதிமன்றத்தில் குற்றம் மெய்ப்பிக்கப்படும்வரையில், அத்தகைய நிலை இருக்கக்கூடாது”

நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார நலன்கள் பாதிக்கப்படாது[12]: நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார விருப்பங்கள், நலன்கள் பாதிக்கப்படாது. முகேஷ் அம்பானியும் டெலிகாம் துறையில் நுழைந்தால், ஒருவேளை அத்தகையநிலை ஏற்படலாம். ஆனால், இருவருக்கும் இடையேயுள்ள சண்டை / போட்டி தீர்ந்து, இருவருமே சேர்ந்து வரக்கூடிய நிலையில் பிரச்சினை இல்லை. ஆகையால், வியாபார ரீதியில் நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால் எந்தவித முரண்பாடும் இல்லை[13].

வேதபிரகாஷ்

© 27-11-2010


[2] வேதபிரகாஷ், பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்?, https://corruptioninindia.wordpress.com/2010/11/23/karunanidhi-became-old-we-will-only-rule-tamilnadu/

[3] இந்த அஹ்மது படேல், ஏற்கெனவே பாராளுமன்ற கோடிகள் கொடுத்த பிரச்சினையில் சிக்கி, விடுவிக்கப்பட்டவர். அமர்சிங் மற்றும் சோனியா தயவால் தப்பித்துக் கொண்டார். குறிவைக்கப்பட்டது பா.ஜ.க என்றாலும், இதனால், முலாயம் சிங் கட்சி உடைக்கப்பட்டது.

[4] வேதபிரகாஷ், பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றைஊழலில் வலம் வருகிறார்கள்!, https://corruptioninindia.wordpress.com/2010/11/22/barqadutt-niraradia-kanimozhi-nexus/

[5] வேதபிரகாஷ், டெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது, https://corruptioninindia.wordpress.com/2010/11/26/why-raja-was-not-questioned-sc-asked/

[6] At the heart of the controversy is Andimuthu Raja, a little-known regional politician who became the powerful telecommunications minister in the world’s fastest growing mobile-phone market. During his first stint as minister, he was accused of selling lucrative mobile telephone licenses at dirt-cheap prices, costing the Indian treasury as much as $40 billion, according to a government investigative report released last week.

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/22/AR2010112203831.html

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/22/AR2010112203831_2.html

[8] வேதபிரகாஷ், வாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா?, https://corruptioninindia.wordpress.com/2010/11/25/like-watergate-would-radiatape-change-india/

[9] வேதபிரகாஷ், ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா?, https://corruptioninindia.wordpress.com/2010/11/23/barkha-nira-viirsinghvi-congress-dmk-nexus/

[11] “We have somewhat slipped into a morass of a series of allegations… unauthorised tapes flooding… the media going crazy on alleging, convicting, executing… literally character assassination…. I wish the government would take a stand, bring an auditor… have an investigation and book people who are guilty of something, but stop this sort of Banana Republic kind of attack on whoever one chooses to attack on a basis unsubstantiated even before the person has a very Indian right, namely to be considered innocent until found guilty in a court of law.”

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “ஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்!”

 1. M. Nachiappan Says:

  ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை தேவை: ஜெயலலிதா

  First Published : 27 Nov 2010 05:27:54 AM IST
  Last Updated :
  http://www.dinamani.com/edition/story.aspx?Title=………..BE&artid=337820&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

  சென்னை, நவ. 26: மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் உள்ள உரையாடல் பதிவுகளை வைத்துக் கொண்டு 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

  இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியவர்களுக்கும், அதிகார மையத்திடம் செல்வாக்கு பெற்ற நீரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற தொடர் உரையாடல் பதிவுகள் தமிழக மக்களால் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை.

  நீரா ராடியாவின் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் உரையாடல்களை குறிப்பிட்ட சில நாள்களுக்கு வருமான வரித் துறை பதிவு செய்தது.

  500 மணி நேரங்களுக்கும் மேலான தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் 15 நிமிடங்களுக்கும் குறைவான உரையாடல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.

  இதன் மூலம், மத்திய அமைச்சரவையில் வளம் கொழிக்கும் துறைகளைப் பெறுவதற்காக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய பேரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  சுற்றுச்சூழல், சுகாதாரம், விமானப் போக்குவரத்து அல்லது சுற்றுலா மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறை தனக்கு வேண்டும் என்றும், ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்பு துறை வேண்டும் என்றும் கனிமொழி வாதிடுகிறார். அதே நேரத்தில், தொலைத் தொடர்புத் துறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள தயாநிதி மாறனை இழிவுபடுத்தியும் பேசுகிறார்.

  தி.மு.க.வின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தையும், நிர்பந்தத்தையும் ஏற்படுத்தும் விதமாக பதவியேற்பு விழாவை புறக்கணிக்கத் திட்டமிட்டு இருப்பதாக டி.ஆர்.பாலு பேட்டி அளித்தது காங்கிரஸ் தலைமையை எரிச்சல் அடையச் செய்தது என்ற தகவல் பத்திரிகையாளர் பர்கா தத்தின் உரையாடலில் பதிவாகி உள்ளது.

  படிப்பறிவில்லாதவர், 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று மு.க.அழகிரி குறித்து தயாநிதி மாறன் அவதூறு பிரசாரம் செய்ததாக மற்றொரு உரையாடல் வெளிப்படுத்துகிறது.

  கருணாநிதியின் விருப்பத்துக்கு எதிராக, வளம் கொழிக்கும் துறை வேண்டும் என்று தயாநிதி மாறன் தனக்குத் தானே வேண்டுகோள் விடுத்ததாக மற்றொரு உரையாடல் தெரிவிக்கிறது.

  கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்களை அதிகார மையமாக காட்டிக் கொள்வதால், இலாகா ஒதுக்கீடு தொடர்பாக யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தெரியாமல் காங்கிரஸ் தலைமை குழம்பியதையும் அந்த உரையாடல் தெளிவுபடுத்துகிறது.

  தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி அளிக்க கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து இருந்தபோதிலும், அவருக்கு அதரவாக மு.க.ஸ்டாலினும், மகள் செல்வியும் தீவிரமாக ஈடுபட்டது நீரா ராடியா – பத்திரிகையாளர் வீர் சங்வி இடையேயான உரையாடல் மூலம் வெளிவந்துள்ளது.

  15 நிமிட உரையாடல் பதிவுகளிலேயே இவ்வளவு விஷயங்கள் வெளிவந்துள்ளன என்றால், 500 மணி நேர உரையாடல் பதிவுகளில் இன்னும் என்னென்ன வெளிப்படும் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். மத்திய அமைச்சர் பதவிக்கு தகுதி ஓர் அளவுகோலே அல்ல என்பதை இந்தப் பதிவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

  தி.மு.க. என்பது கருணாநிதியின் குடும்பம் மட்டும்தான் என்பதையும், குடும்பத்திலுள்ளவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும், அதிகாரமும், பணமும் அவர்களை இன்னமும் ஒன்றாக இணைத்து வைத்துள்ளது என்பதையும் இந்தப் பதிவுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

  இந்த உரையாடல்கள் அனைத்தும் ஊடகங்கள் வசம் இருக்கின்றன.

  இவை தேசிய தொலைகாட்சிகளிலும், ஜெயா டிவியிலும் ஒளிபரப்பப்பட்டன. தேசிய பத்திரிகைகளிலும், “தினமணி’ நாளிதழிலும் வெளியிடப்பட்டன.

  இவை வெளிவந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், இதில் தொடர்புடைய நபர் எவரும் இதற்கு ஆட்சேபமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. எனவே, இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.

  வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்க இயக்குநரகத்திடமும் இந்த உரையாடல் பதிவுகள் உள்ளன. இந்த அமைப்புகள் சுதந்திரமானவை என்றால், இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நடத்தை எந்த வகையில் உள்ளது என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

  இவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வகையில் தமிழக மக்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

 2. M. Nachiappan Says:

  ராடியா பேச்சுப்பதிவுகள் ஊழலில் இருந்து திசை திருப்புகின்றன: ரத்தன் டாடா குற்றச்சாற்று
  சனி, 27 நவம்பர் 2010( 13:14 IST )
  http://tamil.webdunia.com/newsworld/news/national/1011/27/1101127021_1.htm

  FILE2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சில நிறுவனங்கள் மட்டும் பல அலைக்கற்றைகளை சுருட்டிக் கொண்ட ஊழலை திசை திருப்பவே நீரா ராடியா பேச்சுப்பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன என்று டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

  என்.டி.டி.வி. தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள ரத்தன் டாடா, தொழில் நிறுவனங்களுடனும், அரசியல்வாதிகளுடனும், பத்திரிக்கையாளர்கள் சிலருடனும் ராடியா நடத்திய செல்பேசி உரையாடல்களை ஊடங்கங்கள் வெளியிட்டு ஒரு புகைத் திரையை உருவாக்குகின்றன. இதனால் உண்மையான ஊழலில் திருந்து கவனம் திசைதிருப்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.

  “ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது என்ன? அது சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 2 ஜி அலைக்கற்றைகளை முறைகேடாக சுருட்டிக்கொண்ட மிகப் பெரிய ஊழல். ஆனால் ராடியா நடத்திய உரையாடல்களைக் கொண்டு ஒரு புகைத் திரையை ஊடகங்களைக் கொண்டு உருவாக்குகிறார்கள். ஆனால் உண்மையான ஊழல் இத்திரைக்குப் பின்னால் உள்ளது” என்று கூறியுள்ளார்.

  இப்பிரச்சனையில் அரசு ஒரு நிலையெடுத்த சரியாக புலனாய்வு செய்து, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள ரத்தன் டாடா, “அதிகாரப்பூர்வமற்ற உரையாடல் பதிவுகள் வெள்ளமென ஓடுகின்றன. ஊடகங்கள் பயித்தியம் பிடித்து அதன் பின் ஓடுகின்றன. அதை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாற்றுகின்றன, தண்டிக்கின்றன, பண்புக் கொலையில் ஈடுபடுகின்றன. அரசு ஒரு நிலை எடுத்து செயல்பட வேண்டும். தணிக்கையாளரை நியமித்து, தெளிவான புலனாய்வு செய்ய வேண்டும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு யார் மீது வேண்டுமானாலும் யாரும் குற்றம் சாற்றலாம் என்ற நிலை மோசமானது. ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை அவர் இந்தியாவின் சட்டங்களின் படி நிரபராதியே” என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.

  இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரால் அளிக்கப்பட்ட அறிக்கையின் படி, தொலைத் தொடர்புத் துறைக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ.1.76 இலட்சம் கோடி இழப்பு தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணையின் ஒரு அங்கமாக, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் உட்பட 9 பெரும் நிறுவனங்களுக்கு விளக்கமளிக்குமாறு கோரி மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தாக்கீது அனுப்பியுள்ளது.

 3. ரிஸ்வான் அஹமத் Says:

  Both the leakers and the leaked cannot be punished.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: