டெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது
உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்டது: சி.ஏ.ஜியின் அறிக்கையில் அவர்களுடைய பங்கு குறிப்பிடப்பட்டிருந்தும், டெலிகாம் அமைச்சர் ராஜா மற்றும் காரியசி முதலியோரை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்டது[1]. “சி.பி.ஐ அறிக்கை மிகவும் அதிகமாக மதிக்கப்படுகிறது. அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் அது நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே எந்த சாதாரண மனிதனும் அதைப் படிக்கும்போது அவர்களுடைய தொடர்பை அறிவான், கேள்வி கேட்பான். 8,000 ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும் என்கிறீர்கள். முதல் பார்வையிலேயே சட்டமீறலுக்கான ஆதாரம் இருக்கும் போது, சுற்றிவளைத்து பேசுகிறீர்கள். சி.பி.ஐயிடம் குறைந்த பட்சம் எதிர்பார்ப்பது இதுதான். அத்தகைய சட்டமீறல் வெளிப்படையாக வந்துள்ளபோது, ஏதாவது செய்திருக்கவேண்டும்”.
சி.பி.ஐ வக்கீல் வேணுகோபாலனின் வாதம்: ஆனால், வேணுகோபால் சி.ஏ.ஜியின் அறிக்கையை நீதிமன்றம் ஆழமாக ஆராய்ச்சி செய்வதை எதிர்த்தார், ஏனென்றால், அது நீதிமன்ற வழக்கிற்கு அதாரம் இல்லை என்றும் வாதித்தார். அப்பொழுது, “எங்களுடைய கேள்வி குறிப்பானது, நேரிடையானது. அந்த மனிதருடைய சம்பந்தம் அதிகமாகவே இருக்கும்போது, அவர் ஏன் விசாரிக்கப்படவில்லை என்பது தான் கேள்வி”, என்று கேட்டார் நீதிபதி[2].
“ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கபடவில்லை: “ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் நேரிடையாக ஈடுபட்டு கோடிகள் இழப்பை ஏற்படுத்தியிருக்கும்போது, ஏன் அவர்றின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கபடவில்லை. ரூ 1,500 மற்றும் ரூ 1600 கோடிகளுக்கு உரிமத்தை வாங்கி தங்களது பங்கிகளை ரூ. 12,000 கோடிகளுக்கு விற்றது என்பது புரியாமலா உள்ளது?”, என்றும் கேட்கப்பட்டது[3].
வேதபிரகாஷ்
© 26-11-2010
[2] Justice Ganguly told him: “Our question is specific. We want to know whether the gentleman [Mr. Raja] whose involvement is replete with repeated action, has that gentleman been examined.”
குறிச்சொற்கள்: அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, குற்றப்பத்திரிக்கை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், டோகோமோ, தயாநிதி மாறன், பாலு, யுனிடெக், ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், வேணுகோபால்
1:03 முப இல் நவம்பர் 26, 2010 |
ராஜா விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2010,23:17 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=133683
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பிற்கு உட்படுத்தக் கோரி, பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில் மூத்த வக்கீல் வேணுகோபால் வாதிட்டார். அவரிடம் சி.பி.ஐ., தாக்கல் செய்த, முதல் தகவல் அறிக்கை தொடர்பாக நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி சில கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக, ஊழல் கண்காணிப்பு ஆணையர் அளித்த கடிதத்தின் அடிப்படையில், சி.பி.ஐ., கடந்தாண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், அடையாளம் தெரியாதவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்றதாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்த இரண்டு நிறுவனங்களின் பெயர்களை சேர்க்காதது ஏன். இந்த நிறுவனங்கள் 1,500 கோடி மற்றும் 1,600 கோடி ரூபாய்க்கு லைசென்ஸ் வாங்கிவிட்டு, சில நாட்களில் தங்களது பங்குகளை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்துள்ளன. இவர்களை விசாரணைக்கு உட்படுத்தாதது ஏன்? மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தாதது ஏன்? இவர்கள் இருவர் பற்றி, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையிலும், ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையிலும் குற்றம் சுமத்தப்பட்டும், அவர்களிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்த தவறிவிட்டது. ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் என்பது அரசியல் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உயரிய அமைப்பு. எட்டாயிரம் ஆவணங்களை ஆய்வு செய்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவரிடமோ அல்லது தொலைத்தொடர்புத் துறை செயலரிடமோ விசாரணை நடத்தவில்லை. இது பற்றி கேட்டால், சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் வாதிடுகையில் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி என்று முதலில் நிர்ணயித்து இருந்தனர். கடைசியில் அதை, செப்டம்பர் 25ம் தேதி என திடீரென்று மாற்றி முன் தேதியிட்டனர். இதனால், விண்ணப்பித்த 575 விண்ணப்பங்களில் 343 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ரிலையன்ஸ் அனில் அம்பானிக்கு சொந்தமான டைகர் டிரஸ்டி என்ற கம்பெனி, 50 லட்சம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு 2007ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி மாற்றியுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்திற்கு வங்கிக் கணக்கில் ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் இருந்துள்ளது. இந்த பங்குகள் யாருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க, சி.பி.ஐ., எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான வழிமுறையை முடிவு செய்ய, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவை அமைக்கலாம் என்ற சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை, தகவல் தொடர்புத்துறை நிராகரித்துள்ளது. இப்படி செய்தால் வழக்குகள் போடுவர் என கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து நீதிபதி கங்குலி கூறுகையில், “கோர்ட்டுக்கு போவார்கள் என்பதற்காக, மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல விஷயத்தைச் செய்யாமல் இருப்பீர்களா? வழக்கு போடுவது ஒன்றும் குற்றச் செயல் அல்லவே’ என்றார். தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், “முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வழங்கிய லைசென்சுகளை ரத்து செய்வது தொடர்பாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைக்காக காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
10:24 முப இல் நவம்பர் 26, 2010 |
அரசாகங்கப் பணம், மக்கள் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்ர உணர்வு கூட இல்லாமல், சி.பி.ஐக்கு ஆதரவாக வாதிடுகிறேன் என்று, அறிக்கையே ஆதாரம் இல்லை என்ரு பேசுவது கேவலமாக இருக்கிறது.
பிறகு, அக்கோடிகளை எப்படி திரும்பப் பெறுவது?
ஆண்டிப்பட்டி ராஜா உத்தார் என்றால், அக்கோடிகளை அள்ளிய திருட்டுக் கம்பெனிகளை, பணத்தை திரும்பத் தரச் சொல்வாரா?
இந்நிலையில்தான் சோனியா சொல்கிறார், ஊழல் விஷயத்தில் எங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று!
10:20 முப இல் நவம்பர் 26, 2010 |
வீரமணி கூட்டத்தினர் வக்காலத்து வாங்கி, “தமிழக ஊடகப் பேரவை சார்பில் ஆ.இராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்?”, என்ற தலைப்பில் 24.11.2010 அன்று சென்னை தியாகராயர் நகரில் ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் அரங்கில் ஒரு கூட்டத்தை நடத்தினர்
ஆ.இராசா மீது எங்கும், எந்த இடத்திலும் குற்றம் சாற்றப்படவில்லை. அதற்குரிய ஆதாரம் எங்குமே இல்லை. கலைஞர் ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று திட்டமிட்டு, பார்ப்பனர்களும், ஊடகத்தினரும் செய்து வருகின்றனர். மக்களே அத்தகைய ஊடகத்தை, பத்திரிகைகளைப் புறக்கணியுங்கள். மீண்டும் கலைஞர் ஆட்சி மலர விழிப்புணர்வோடு செயல்படுங்கள் என்று கி. வீரமணி பேசினார்.
ரமேஷ் பிரபா இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற பிரச்சினையே இல்லாத ஒன்று இருப்பதாக புரளியைக் கிளப்பி விடுவது. ஆங்கில தொலைக் காட்சி சேனல்கள் ஒரு தனி ஜாதியாக இருந்து கொண்டு செயல்படு கின்றார்கள் என்று பேசியது வேடுஇக்கையாக இருந்தது.
ஒன்று, இந்த ஆடிட்டருக்கு உண்மையிலேயே ஆடிட்டிங் தெரியாது. இரண்டாவது அந்த தணிக்கை அதிகாரி இதை உள்நோக்கத்தோடு எழுதியிருக்கின்றார் என்பதைத் தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது………. செந்நாய் கூட்டம் எப்படி ஒரு மனிதனை கடித்துக் குதறுமோ அது போல இராசாவைக் குதறி விட்டனர்…………. இராசா ஒரு போராளி. இராசாவை ஒழித்துக் கட்ட ஒரு கூட்டு – கொள்ளை கும்பல் ஒன்றாக இணைந்து செயல்பட்டிருக்கிறது என்றெல்லாம் ஜெகத் கஸ்பார் பேசியது படு ஜோக்காக இருந்தது.
இப்படி தமிழர்களை பொய்மாலங்களில் ஆழ்த்தி, நடிகைகளைக் காட்டி முளையை மழுக்கடித்தி வைத்திருந்தால், எங்கிருந்து அறிவு வரும்?
1:54 முப இல் நவம்பர் 27, 2010 |
[…] ஊழல் Just another WordPress.com weblog « டெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை… […]
2:02 பிப இல் திசெம்பர் 6, 2010 |
Definitely, Karunanidhi, Rajathi, Kanimozhi, Maran brothers and all others figuring in the tapes can be interrogated.
They have to answer to the nation as to how they manipulated the democratic processes by paying crores to loot crores.