ராஜினமா ஏன் – உருட்டி மிரட்டிய ராஜாவும், மிரட்டிப் பணிந்த கருணாநியும்

ராஜினமா ஏன் – உருட்டி மிரட்டிய ராஜாவும், மிரட்டிப் பணிந்த கருணாநியும்

மிரட்டிப் பணிந்த கருணாநிதியின் அறிக்கை-விளக்கம்[1]: மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவை பொறுப்பில் இருந்து விலக்கிக் கொள்ள தி.மு.க. முடிவு செய்தது தொடர்பாக முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்[2]. இதுதொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:  தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான ராசா, தி.மு.க.வுக்கும், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமை உணர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து, தலித் இனத்தின் கதிரவனாக விளங்குபவர்[3].

ஓராண்டு காலமாக திட்டமிட்டு நடந்த சந்தைக் கடை இரைச்சல்: அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று திட்டமிட்ட முயற்சி பல நாள்களாக நடைபெற்று வந்தது. ஜனநாயகக் கூடங்களில் சந்தைக் கடை இரைச்சல் மேலிட்டது. நாட்டு மக்களுடைய பிரச்னைகளை விவாதிக்க முடியாத அளவுக்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டு காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது? மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய 1999 முதல் எந்த முறை பின்பற்றப்பட்டதோ, அதே முறையைத்தான் ராசா பின்பற்றினார்[4].  இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல், அவர் ராஜிநாமா செய்தே தீர வேண்டும் என்று பிடிவாதம் செய்து, நாடாளுமன்ற அவைகளை நடக்க விடாமல் செய்து வருகிறார்கள்.  எல்லோராலும் நடத்தப்படுகிற குழப்பம் அல்ல; குழப்பத்தை உருவாக்கப் பலர் தேவையில்லை; சிலரே போதும்; நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடைப்படுத்துவதன் மூலம் மத்திய அரசு நிர்வாகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்க திட்டமிட்டிருந்தார்கள்.

அண்ணா அந்த நெறிக்கு விபத்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு, ராஜினாமா: நாடாளுமன்ற ஜனநாயகத்தை, அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அண்ணா அந்த நெறியில்தான் நம்மை எல்லாம் வளர்த்தார்[5]. அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலிருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது[6].  அதனை நிலைநாட்டும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள ஆ. ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொள்வது என்று முடிவு எடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கிடுவார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது இல்லத்தில் சந்தித்த மத்திய அமைச்சர் ராசா, தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார். 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.

கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், அரசுக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் வகையில் ராஜிநாமா: பிரதமர் இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது ராசா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காவும் அவை நடவடிக்கைகள் சுமுகமாகவும் அமைதியாகவும் நடைபெற உதவிடும் நோக்கிலும் எனது தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அரசுக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் வகையில் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகவும், அதற்காக தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்வதாக அர்த்தம் இல்லை என்றும்[7], தன் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிரூபிக்கப் போவதாகவும் கூறினார்[8].

கோடி-கோடி ஊழல்கள், நாறும் காங்கிரஸ்: அமைச்சர் ஆ.ராசா பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை முடக்கி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.  ஏற்கெனவே ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவற்றால் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டன. அப்போது அலைக்கற்றை ஊழலும் எழுப்பப்பட்டது. ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் பதவி விலகினார். காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, போட்டி அமைப்புக் குழு தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு செயலர் பதவியிலிருந்து விலகினார். இதில் ஓரளவு சமாதானமடைந்த எதிர்க்கட்சிகள், அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பாக திமுக அமைச்சர் ராசா பதவி விலக வலியுறுத்தி வந்தன.

சிங்கிக்குத் தெரியாமல் எதுவும் செய்யவில்லை: சிங்கிக்குத் தெரியாமல் எதுவும் செய்யவில்லை, அதாவது சிங்கிக்கிற்குத் தெரிந்துதான் செய்தேன் என்று ராஜா பாட்டுப் பாட ஆரம்பித்ததும், காங்கிரஸ் அதன் விஷமத்தனத்தைப் புரிந்து கொண்டது[9]. மேலும், சிங்கே ஒருமுறை ராஜாவை ஆதரித்து பேசியிருந்தார்[10]. ஆனால், எதிர்கட்சிகள் இதை வேறுவிதமாக அணுகப்பாவதை அறிந்தும், ராஜினாமா முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் ராஜிநாமா செய்வதில்லை என்பதில் ராசா உறுதியாக இருந்தார். ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று அவர் பலமுறை கூறிவந்தார். திமுக தலைவர் முதல்வர் கருணாநிதியும் ராசா குற்றமற்றவர், அவர் ராஜிநாமா செய்யத் தேவையில்லை என்று கூறிவந்தார். இந்த நிலையில் ராசா ராஜிநாமா செய்யும்வரை நாடாளுமன்றத்தை முடக்குவது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்தன. அதோடு அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. மேலும் அலைக்கற்றை ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும்போது ராசா அமைச்சர் பதவியில் நீடிப்பது குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்பட்டது.  ஏற்கெனவே ராசா பதவியில் நீடிப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புரிந்து கொண்ட காங்கிரஸ் கழட்டிவிட தீர்மானித்தது: இந்த இக்கட்டான சூழலை அடுத்து  பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டுமானால் ராசா பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த முடிவு திமுக தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது. ராசா பதவி பறிக்கப்படுவதை திமுக தலைமை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நிலைமை கையை மீறிப் போய்விட்டதால் வேறு வழியில்லை என்பதை காங்கிரஸ் மேலிடம்திமுக தலைமைக்கு உணர்த்தியதாகக் கூறப்படுகிறது[11]. காங்கிரஸ் மேலிடத் தகவலை அடுத்து முதல்வர் கருணாநிதி ராசாவை அழைத்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமரைச் சந்தித்து ராஜிநாமா கடிதம் கொடுத்தார்.

துரைமுருகன் பறந்தார், கனிமொழி மறுப்பு தெரிவித்தார்: ராசாவுக்குப் பதில் கனிமொழி தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்கப்படுவார் என்று வெளியான செய்தியை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மறுத்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவே தொடர்வேன் என்று அவர் கூறினார். அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ்-திமுக உறவில் விரிசல் ஏதுமில்லை. எனக்கு தெரிந்து இதுவரை காங்கிரஸ்- திமுக இடையே உறவு சிறப்பாக உள்ளது என்றார் வேறு திமுக எம்.பிக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கேட்டுள்ளதாகத் தெரிகிறது[12]. துரைமுருகன் இதற்காகத்தான் டில்லி சென்றுள்ளதாக தெரிகிறது.. மேலும் பாஜக தமிழகத்தில் 17ம்தேதி முதல் ஆர்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளது[13]. இதனால், தமிழகத்தில் ஒருவேளை பாதிப்பு வருமோ என்றும் திமுக அஞ்சுகிறது. பாஜகவைக் கண்டு அல்ல, அதிமுகவும் அதில் இணையும்போது. இந்நிலையில் தொலைதொடர்பு துறையை  மன்மோஹன்சிங்கே இனி கவனிப்பார்[14] என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

© 15-11-2010


[1] தினமணி, . ராசா விலகல் ஏன்?: முதல்வர் விளக்கம், நவம்பர் 14, 2010, http://www.dinamani.com/edition/story.aspx?Title=………SectionName=Tamilnadu

[3] இப்படியெல்லாம் புகழ் பாட திமுகவினருக்கு ஒன்றும் சொல்லிக்கொடுக்க வேண்டாம். கீழே விழுந்தாலும், மண் ஒட்டவில்லை என்று பாட்டுப்பாடி, ஆடும் கருப்புப்பரிவார் கூட்டத்தினர்.

[4] நேற்று வரை, சன் டிவி செனல்களில், ஏதோ கோப்புகளைக் காட்டி, அதில் எல்லோருமே ஒப்புதல் அளித்ததாகக் காட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், இது சட்டத்திற்கு புறம்பானது. இந்த உண்மை தெரிந்ததும், காங்கிரஸ் கடுப்பாகிவிட்டது.

[5] இப்படி கோடிக்கணக்கில் ஊழல் செய்யுமாறு பணித்தாரா என்று தெரியவில்லை. இருப்பினும், கருணாநிதி, எப்படியும் மாற்றி-மாற்றி பேசுவதில் வல்லவர்.

[6] இவர்கள் தாம் ஜனநாயகத்தை பாதுக்காக்கப் போகின்றனர் என்றெல்லாம் பேசுவது, எப்படிபட்ட பொய்மாலங்கள் என்று மக்கள் உணரவேண்டும்.

[9] கருணாநிதியை விஞ்சும் வகையில் உள்ளவர் சோனியா மெய்னோவாதான், கௌணாநிதியின் விஷமத்தனத்தைப் புரிந்து கொண்டுதான், பொறுப்பை, சிங்கிடம் தக்க வைத்ததுடன், கேபினட்டை விரிவாக்கவும் ஆணையிட்டுள்ளார்.

[11] தினமணி, அமைச்சர் பதவியில் இருந்து . ராசா ராஜிநாமா, First Published : 15 Nov 2010 03:11:23 AM IST; Last Updated : 15 Nov 2010 04:15:28 AM IST;

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=…………..BE

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “ராஜினமா ஏன் – உருட்டி மிரட்டிய ராஜாவும், மிரட்டிப் பணிந்த கருணாநியும்”

  1. vedaprakash Says:

    அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியதால் பெரம்பலூரில் தி.மு.க.,வினர் கல்வீச்சு
    பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010,22:07 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126219

    பெரம்பலூர் : மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவை ராஜினாமா செய்யக்கோரி, அ.தி.மு.க.,வினர், பெரம்பலூரில் நேற்று போஸ்டர் ஒட்டியதால், ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், அ.தி.மு.க.,வினர் மீது கல்வீசி தாக்கியதுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாழ்த்தப்பட்டோர் நல இயக்கம் சார்பில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை கண்டித்து, பெரம்பலூர் நகரில் நேற்று முன்தினம் இரவு போஸ்டர் ஒட்டப்பட்டது.

    தொடர்ந்து பெரம்பலூர் அ.தி.மு.க., மாவட்ட செயலர் இளவழகன், நகர செயலர் ராமச்சந்திரன் தலைமையில், 200 பேர், பெரம்பலூர் நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ராஜாவை ராஜினாமா செய்யக்கோரி நேற்று மதியம் 2.30 மணியளவில் போஸ்டர் ஒட்டினர். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தி.மு.க., நகராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ், மாரிக்கண்ணன், அப்துல்பாரூக், மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், பெரம்பலூர் ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, தலைமை பேச்சாளர் விஜயரத்தினம் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் 200 பேர், அ.தி.மு.க.,வினர் மீது கல்வீசினர். தொடர்ந்து அ.தி.மு.க.,வினரும் தி.மு.க.,வினர் மீது கல்வீசினர். இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

    அ.தி.மு.க.,வினரை கைது செய்யக்கோரி, தி.மு.க., நகராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ், மாரிக்கண்ணன், அப்துல்பாரூக், மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், பெரம்பலூர் ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, தலைமை பேச்சாளர் விஜயரத்தினம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர், திருச்சி – பெரம்பலூர் சாலையில் பாலக்கரை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் டவுன் டி.எஸ்.பி., காஜாமொய்தீன், இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், ஆர்.டி.ஓ., பாலுசாமி, தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, மறியலை கைவிட செய்தனர். தி.மு.க.,வினரின் சாலை மறியலால் பெரம்பலூரிலிருந்து திருச்சி, துறையூர், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேப்பந்தட்டை, குரும்பலூர், லாடபுரம், களரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

  2. vedaprakash Says:

    பெரம்பலூரில் திமுகவினர் சாலை மறியல்
    பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010,15:46 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126188

    பெரம்பலூர்: மத்திய அமைச்சர் ராசாபதவி விலக கோரி அதிமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினர். அதிமுகவின் இத்தகைய செயலை கண்டித்து நகர திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போராட்டத்தின் போது இச்செயலுக்கு காரணமானவர் களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள்எழுப்பினர்.இதனைதொடர்ந்து மேலும் அம்பாவதம் ஏற்படாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  3. vedaprakash Says:

    பெரம்பலூரில் அரசு பேருந்துக்கு தீவைப்பு : 2 பேர் கைது
    நவம்பர் 15,2010,
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126503

    பெரம்பலூர் : மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்ததையடுத்து தி.மு.க.,வினர் அரசு பேருந்துக்கு தீவைத்தனர். மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்தார். இதனையடுத்து பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்வதற்காக பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்டில் பேருந்து டி.என் 45 2125 என்ற எண்ணுடைய நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தி.மு.க.,வினர் சிலர் அரசு பேருந்துக்கு தீவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்தனர். இது தொடர்பாக திருநாவுகரசு, ஜான் கென்னடி என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட எஸ்.பி., தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  4. ராஜினமா ஏன் – உருட்டி மிரட்டிய ராஜாவும், மிரட்டிப் பணிந்த கருணாநியும் (2) « ஊழல் Says:

    […] […]

  5. K. Venkatraman Says:

    If K wins the 2011 elections, Sonia may give very big award!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: