ஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்!

ஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்!

ஒரு பொதுநல வழக்கு மனு மீது, நடவடிக்கை எடுத்த, உச்சநீதி மன்றம், ரூ 70,000 கோடிகள் அரசிற்கு 2G ஸ்பெக்ட்ரம் தொலைபேசி கம்மெனிகளுக்கு விநியோகித்ததில் நஷ்டம் ஏற்பட்டது என்பதனால், பத்து நாட்களில் விளக்கம் ராஜாவிற்கக கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது மத்திய அமைச்சர் ஆ. இராசா

புதுடில்லி, செப். 15- 2-ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டு ஊழல் தொடர்பாக தமக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச் சர் ஆ.இராசா தெரிவித் தார்.

தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் நிலவும் கடும் போட்டியே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

2008 இல் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்பட்டது. பொது நலவழக்குகள் மய்யம் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன.

திங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதி பதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அமைச் சர் ஆ.இராசாவுக்கு தாக்கீது அளித்து உத்தரவிட் டது. சிபிஅய், அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகியவற்றுக்கும் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த தாக்கீதிற்கு 10 நாள்களுக்குள் பதில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் ஆ.ராசா, புதுடில்லியில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆ.ராசா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது நூறு சதவிகிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை என்றார்.

அலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற ஆப்பரேட்டர்களில் பலர் சேவையை அளிக்க முடியாத நிலையில் உள்ள தாகவும், இதனால் அவர்கள் உரிமத்தை அரசிடமே திருப்பித்தர விரும்புவதாகவும் கூறப்படு கிறதே என்று கேட்ட தற்கு, ஆப்ரேட்டர்களின் கடந்த கூட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப் பட்டது. அலைக்கற்றை உரிமத்தை பெற்றவர்களில் பலர் உரிமத்தைத் திருப் பித்தர விரும்புவது உண்மைதான். ஏனென்றால் சேவை வழங்குவதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. அந்தளவுக்கு முதலீடு செய்ய அவர்களிடம் நிதி இல்லை. ஆப்ரேட்டர் களின் விருப்பம் குறித்து தொலைத்தொடர்பு ஆணையத்தில் விவாதிக் கப்படும் என்றார் மத்திய அமைச்சர் ஆ.இராசா.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “ஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்!”

 1. vedaprakash Says:

  Supreme Court issues notice to A Raja over alleged 2G scam

  A Vaidyanathan, Updated: September 13, 2010 18:12 IST

  New Delhi: The Supreme Court has issued a notice to Telecom Minister A Raja giving him ten days to respond to allegations that he cost the government 70,000 by mishandling the allocation of 2G spectrum to telecom operators.

  The court’s action is based on a Public Interest Litigation (PIL). Raja is the only individual named in the petition – the singularity will further embarrass the government which has been attacked repeatedly by the Opposition over the 2G scam and Raja’s alleged role in it. Raja’s part, the DMK, is a crucial ally of the UPA government.

  In 2008, 2G or second-generation mobile technology was awarded to 122 operators for 1,600 crores – an amount that has been described by experts and the Opposition as laughable. Raja’s decision to skip an auction process has been questioned. Some of those who were awarded licenses resold them for 5-6 times the amount.

  While the notice to the minister on the PIL is a technicality, what tinges today’s developments with a new shade of gravity is the court’s fury with the CBI, which is investigating the case. The court asked why the CBI’s FIR is against “unkown people.”

  “CBI doesn’t know that DoT officials are involved?” asked the court.

  In the past, the government, including the PM, have stressed that both the Telecom Regulatory Authority of India (TRAI) and the Telecom Commission had approved the policy on 2G auctions. While the court’s stand will give the Opposition in Delhi new ammunition against Raja, it’s also likely to cause trouble for the DMK in Tamil Nadu, which votes early next year.

  Read more at: http://www.ndtv.com/article/india/supreme-court-issues-notice-to-a-raja-over-alleged-2g-scam-51599?cp

 2. vedaprakash Says:

  SC issues notices to telecom minister, CBI on 2G spectrum scam news
  13 September 2010
  http://www.domain-b.com/industry/telecom/20100913_2g_spectrum_oneView.html

  telecom minister A Raja,The Supreme Court today issued notices to telecom minister A Raja, the telecomm ministry and the Central Bureau of Investigation (CBI) on a plea seeking court monitoring of a CBI investigation into the 2008 allocation of 2G spectrum licences.

  The two-judge bench comprising Justices G S Singhvi and A K Ganguly also sent notices to the Enforcement Directorate and the Income Tax Department.

  The Centre for Public Interest Litigation, an NGO, and some others, have moved the SC challenging a Delhi High Court decision of 25 May to dismiss its plea to monitor the CBI probe into the alleged role of the communications minister in the 2008 sale of 2G spectrum licences by the DoT.

  The court has sought replies to the notices within 10 days.

  Appearing for the petitioners, advocate Prashant Bhushan, said the CBI refused to go ahead with the probe into the allegations despite documentary proof of a nexus between Raja and others.

  DoT’s arbitrary sale of 2G spectrum at a throwaway price of Rs1,658 crore per pan-India licence, on a first-come-first-served basis, had caused losses to the tune of Rs60,000 crore to the exchequer, the petitioners alleged.

  The Supreme Court also sought explanation from the CBI over its filing of a case against some officials without naming them.

  The case should be viewed in the background of the opposition Bhartiya Janata Party slamming the government over the appointment of former telecom secretary PJ Thomas as the Central Vigilance Commissioner (CVC). The BJP sees it as a deliberate move by the government to cover up the multi-crore 2G spectrum scam.

  Thomas’s appointment as the new CVC was done to derail the entire investigation into the 2G spectrum scam – a “maha-Bofors” – BJP spokesperson Prakash Javadekar had alleged.

  The DoT, then headed by Thomas, had, in its note prepared on 12 August 2010, opposed the comptroller and auditor general and the CVC looking into the 2G spectrum allocation and had argued before the law ministry that the spectrum allocation was a matter of policy.

  “Now, the same person, who earlier objected to the CVC probing the scam, is heading the organisation (CVC) and no one is expecting a fair inquiry into the entire matter,” Javadekar had said.

  Javedekar had smelt an inter-ministerial collusion in the cover-up game as both the DoT and the law ministry favoured the note prepared against the role of the CVC and the CAG.

  “The Congress-led UPA government has undermined institutions like the CAG and CVC on account of the compulsions of coalition politics, the UPA government is under pressure to derail the investigation,” alleged Javadekar.

  Javedekar also alleged that by insisting that he was working under the guidance of the prime minister, Raja was also trying to involve Manmohan Singh in the scam.

 3. M. Nachiappan Says:

  ராசா விவகாரம் மூலம் திமுகவை களங்கப்படுத்த முயற்சி: கி. வீரமணி

  First Published : 11 Nov 2010 02:26:58 PM IST
  Last Updated : 11 Nov 2010 02:31:34 PM IST

  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=330905&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  சென்னை, நவ.11- மத்திய அமைச்சர் ஆ. ராசா மீதான புகாரை பயன்படுத்தி திமுகவை களங்கப்படுத்த முயற்சி நடைபெறுவதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
  இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  மத்திய அமைச்சர் ராசாவை பதவி விலக வைத்து, அதன் மூலம் திமுவுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது.
  2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா சொந்தமாக முடிவு எடுக்கவில்லை. பிரதமர் ஒப்புதலுடன் “டிராய்” என்கிற அமைப்பு தான் முடிவு செய்தது.
  செய்யாத குற்றத்திற்காக ராசா ஏன் பதவி விலக வேண்டும்? உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இவர் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை.
  மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
  இதே ராசா தான் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் அரசு கருவூலத்திற்கு 66,980 கோடி ரூபாய் வருவாய் பெற்று தந்துள்ளார். அதற்காக யாராவது அவரை பாராட்டினார்களா?
  இவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 4. M. Nachiappan Says:

  தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் மேலிடம் திடீர் நெருக்கடி
  பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010,23:12 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=123940

  காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கையால், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்பெக்ட்ரம்’ முறைகேடு புகாரில் சிக்கித் தவிக்கும் மத்திய அமைச்சர் ராஜா, அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  மும்பை கொலாபா பகுதியில், கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் அரசியல்வாதிகள், முதல்வர் அசோக் சவானின் மாமியார் உட்பட பலருக்கு வீடுகள் ஒதுக்கிய விவகாரத்தில், மாநில முதல்வர் அசோக் சவான் மீது புகார்கள் எழுந்தன. அதேபோல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதில் காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் செயலர் சுரேஷ் கல்மாடி, முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து, அசோக் சவான் டில்லிக்கு வரவழைக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவிடம் விளக்கம் அளித்தார். அப்போது, அவரிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பை வந்து சென்ற பின், அவர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், சோனியா அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். முதலில் அசோக் சவான் ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர கவர்னர் சங்கரநாராயணன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். தொடர்ந்து சுரேஷ் கல்மாடி, காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி மேலிடம் இதுபோன்று ஒரே நாளில் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. லோக்சபா கூட்டம் துவங்கியுள்ள நிலையில் காங்., எடுத்த நிலைப்பாடுகள், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கித் தவிக்கும் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு அளிக்கப்பட்ட நெருக்கடியாகவே கருதப்படுகிறது. மேலும், காங்., எடுத்த அதிரடி நடவடிக்கை, தி.மு.க.வுக்கு விடப்பட்ட அபாய சிக்னலாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அமைச்சர் பதவியில் இருந்து ராஜாவை தி.மு.க.வே வாபஸ் பெற வேண்டும் என்பது தான் காங்கிரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  லோக்சபாவில் ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கிய விவகாரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கண்டன குரல்களை எழுப்ப, எதிர்க்கட்சிகள் அனைத்தும் தயாராக இருந்தன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி அவற்றை தடுத்து நிறுத்தி, அசோக் சவானை முதல்வர் பதவியில் இருந்தும், கல்மாடியை செயலர் பதவியில் இருந்தும் விரட்டியுள்ளது. இதற்கு சோனியா எடுத்த உறுதியான நிலைப்பாடு தான் காரணமாகக் கூறப்படுகிறது. காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க.,வும் அதே போன்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜாவை காப்பாற்ற, புது வழிகளை தி.மு.க., தலைமை இனிமேல் ஆராயக்கூடும். இந்த நிலையில், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் “ராஜா விவகாரம்’ குறித்து நோட்டீஸ் தந்து விவாதிக்க முடிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: