மூன்று கோடி பாம் ஆயில் ஊழலில் சம்பந்தப்பட்ட தாமஸ் ஊழல் ஒழிப்பு கமிஷனுக்குத் தலைவராம்! சோனியா மெய்னோவின் பாசம்!

மூன்று கோடி பாம் ஆயில் ஊழலில் சம்பந்தப்பட்ட தாமஸ் ஊழல் ஒழிப்பு கமிஷனுக்குத் தலைவராம்! சோனியா மெய்னோவின் பாசம்!

ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரி தேர்வு: மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவர் ஆளும், எதிர் கட்சிகளின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி கலந்தாசிக்கும்போது, காங்கிரசின் தரப்பில் பி.ஜே. தாமஸ் என்ற கேரள அதிகாரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது பின்னணியை ஆராய்ந்தபோது, 1991-92 வருடத்தில் அனுமதியின்று ரூ. மூன்று கோடி பாம் ஆயில் இறக்குமதி செய்த வழக்கில் சம்பந்தப் பட்டது தெரிய வந்துள்ளது[1]. ஆகவே பீஜேபி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், சோனியாவின் சாய்ஸ் என்பதனால், மன்மோஹன், எதிர்பார்த்தபடியே தாமஸை நியமனம் செய்துவிட்டார்[2].

ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது பி.ஜே. தாமஸ் தொலைதொடர்பு அமைச்சகத்தின் செயலர்: இதே பி.ஜே. தாமஸ் முன்பு தொலைதொடர்பு அமைச்சகத்தில் செயலராக இருந்துள்ளார். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது, இவரது பங்கும் அதில் இருந்ததாக, தொலைதொடர்பு ஊழியர்கள் குற்றாஞ்சாட்டியுள்ளனர். ஆனால், அப்படிப்பட்ட ஆளையே, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவராக்குவது, படு அசிங்கமாக – திகைப்பாக, வேதனையாக இருக்கிறது[3].

சிதம்பரம் ஆதரிக்கும் தாமஸ்: “முன்பு ஊழல் குற்றத்தில் சம்பந்தப் பட்டிருக்கலாம், ஆனால், இப்பொழுது அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார்[4]. ஆகவே அவரது திறமைதான் நமக்கு இப்பொழுது வேண்டும், அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்”, இப்படி வக்காலத்து வாங்குவது உள்துறை சிங்கம் சிதம்பரம் தான்! நிச்சயமாக கருணாநிதி சிதம்பரத்தின் உதவியுடன் இந்த ஊழலை மறைக்க பார்க்கிறர் என்பது நன்றகவே தெரிகிறது. அதற்கு காங்கிரஸ், இவ்வாறு செயல்படுகிறது.

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா? உதாரணத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ராஜாவை இவர் எப்படி நியாயம்-தர்மம் படி விசாரிப்பார், புலன் ஆய்வு செய்வார்? ஏனெனில், அப்பொழுது, ராஜா இவரது “பாஸ்”, அலுவலக எஜமானன். ஆகவே, இது நிச்சயமாக ஊழலை மறைக்க, ஒரு ஊழல் அழுக்குப் பட்ட ஆசாமியை வைத்துக் கொண்டு மறைக்கும் நாடகமே என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன[5]. ஆகவே, விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?, என்று கேட்டால், முடியும் என்கிறது காங்கிரஸ்!


[1]The BJP’s objections are over Thomas’ alleged involvement in the palm oil import scam worth almost Rs. 3 crore in 1991-92. Thomas, Kerala’s Food and Civil Supplies secretary, had struck an import deal with a Malaysia-based private firm without mandatory clearance

 

http://www.ndtv.com/article/india/decision-to-appoint-thomas-is-to-cover-up-2g-scam-bjp-49799

[2] இப்பொழுதுகூட, இது “மேஜாரிட்டி டிஸிஷன்” என்றுதான் சொல்கிறார்களேத் தவிர, ஊழல் பேர்வழி எப்படி பதவிக்கு வரலாம் என்று சிந்திப்பதாக இல்லை.

[3] http://www.thehindu.com/news/national/article615916.ece

[4] Mohan Singh of Samajwadi Party said, “This will negate the very purpose for which CVC was instituted. Thomas may have been exonerated but we all know how acquittals happen. He has been tainted once and he will not be able to put pressure on tainted officials he is supposed to watch.”
Read more: Row over govt pick for CVC post – India – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Row-over-govt-pick-for-CVC-post/articleshow/6503526.cms#ixzz0yi5neQG3

[5] Vijay wondered as to how Thomas could be expected to make a fair inquiry into the spectrum case — which he insisted could one day land before the CVC — since the main accused, Telecom Minister A Raja, happened to be his one-time boss.

http://www.indianexpress.com/news/new-cvc-bjp-says-attempt-to-cover-up-spectrum-cwg-row/677718/2

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “மூன்று கோடி பாம் ஆயில் ஊழலில் சம்பந்தப்பட்ட தாமஸ் ஊழல் ஒழிப்பு கமிஷனுக்குத் தலைவராம்! சோனியா மெய்னோவின் பாசம்!”

  1. M. Nachiappan Says:

    தாமஸை நியமனம் செய்யப்பட்ட சம்பந்தமான ஆவணங்கள் கொண்ட கோப்புகளை உச்சநீதி மன்றம் கேட்டுள்ளது.

    ஊழலுக்கே ஊழல் துணை போவது போல, இவர் ஊழல் ஒழிப்பு / கண்கானிப்புத் துறைக்கு நியமித்திருப்பது கேடுகெட்ட செயலாகும்.

    வேலியே பயிரை மேய்ந்த ஆடுகளை வைத்டுக் கொண்டனர். இப்பொழுது எல்லலமே கருப்பு ஆடுகளாக மாறிவிட்டன. மேய்க்கும் மெய்னோவிற்கோ ஒன்றும் புரியாமல் இருக்கிறார்.

    எந்திரன் பாஷையில் சொல்வதானால், “வூ ஈஸ் தி பிளாக் ஷீப்? மே………மே…………….மே………..”., தான்!

  2. தாமஸை விஜிலென்ஸ் கமிஷனராக நியமிக்கப் பாட்டது செல்லாது: உச்சநீதி மன்றம் தீர்ப்பு! « ஊழல் Says:

    […] [5] https://corruptioninindia.wordpress.com/2010/09/06/three-crore-corruption-charged-became-cvg-commissi… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: