“கருணாநிதி பிராண்ட்” சாமான்கள் விற்க்கப் படுகின்றன!

தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கருணாநிதி, மக்கள் பணத்தை தனது சுயவிளம்பரத்திற்காக சாமர்த்தியமாகவே செலவு செய்து வருகிறார். இதற்கு, ஆலோசனைக் கொடுக்க, பெரிய-பெரிய கம்பெனிகளினின்று ஆலாசனையாலர்கள் வேறு! எந்த பொட்டலத்தில், எத்தகைய படத்தை போடவேண்டும், எப்படி ஓட்டவேண்டும் என்று ஆராய்ச்சி வேறு! “கலைஞர் ஆட்சியில் மான்ய விலையில் மளிகைப்பொருள்“, என்று அச்சிட்டு, தனிநபர் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது
ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 50 ரூபாய் மதிப் புள்ள மளிகை பொருட்களை, இம்மாத இறுதிக்குள் விற்று காலி செய்ய விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் 25 ரூபாய் மதிப்புக்கு, மளிகை பொருள் பாக்கெட் வர இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
வெளிமார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விலை அதிகரித்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தடுக்க தமிழக அரசு கடந்த 2008ல் ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி மிளகாய் தூள் 250 கி., மல்லி 250 கி., கடலைப்பருப்பு 75 கி., மஞ்சள் 50 கி., சீரகம் 50 கி., வெந்தயம், கடுகு, சோம்பு, மிளகு தலா 25 கி., பட்டை, லவங்கம் 10 கி.,என 10 வித மளிகை பொருட்கள், தனித் தனி பாக்கெட்களில் அடைக்கப் பட்டு ரேஷன்கடைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. மொத்தம் 71.30 ரூபாய் அடக்கவிலை கொண்ட பத்து மளிகை பொருட்களை, மக்கள் நலன் கருதி அரசு 21.30 ரூபாய் தள்ளுபடி செய்து, 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆரம்பத்தில் ரேஷன்கடையில் விற்பனை செய்யப்பட்ட மளிகை பொருட் கள் தரமானதாக இருந்ததால், கார்டுதாரர்கள் போட்டி, போட்டு வாங்கினர்.
ஆரம்பத்தில், பிரபலமான சமையல் பொருள் உற்பத்தி நிறுவனம் தயார் செய்த மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வந்தது. கார்டுதாரர்களும் ஆர்வத்தோடு வாங்கினர். அதன் பின்னர், மளிகை பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி பலர் 50 ரூபாய் மளிகை பொருள் வாங்குவதை தவிர்த்தனர். எனினும், ரேஷன் கடைகளில் மூன்றாண்டுகளாக 50 ரூபாய் மளிகை பொருள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட கார்டுதாரர்கள் தொடர்ந்து மளிகை பொருட்கள் வாங்கினர். இந்நிலையில், ரேஷனுக்கு சப்ளை செய்த மளிகை பொருள் பாக்கெட்டுகளை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இருப்பு வைக்காமல் விற்று தீர்க்க வேண் டும் என, விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், விற்பனையாளர்கள் மளிகை பொருள் பாக்கெட்டுகளை விரைவாக விற்று வருகின்றனர்.
பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை சப்ளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கலெக்டர்கள் மாநாடு முடிந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அடுத் தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை, ரேஷனில் இந்த மலிவு விலை மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
குறிச்சொற்கள்: கருணாநிதி, கருணாநிதி படம், மளிகை சாமான்கள், மளிகை பொருட்கள்
11:09 முப இல் நவம்பர் 11, 2010 |
இலவச சர்க்கரை பொங்கல் பை : முதல்வர் அறிவிப்பு
பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2010,13:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124384
சென்னை: இலவச சர்க்கரை பொங்கல் பை : முதல்வர் கருணாநிதி இன்று விதி 110 ன்கீழ் முதல்வர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் இலவச பொங்கல்பொருட்கள் அடங்கிய பை ஒன்று வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்படி அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும். பச்சரிசி, வெல்லம் மற்றும் சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவையான பொருட்கள் இருக்கும். கடந்த ஆண்டும் இது போல் இவலச பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
————————————————————-
இனி பையின் மீது போடப்படும் படம் தான் பாக்கி! அது முன்னதைப் போன்றே இருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை!