திராவிட ஆட்சியில் காதல், திருமணம், ரேஷன்கார்ட், விவஸ்தைக் கெட்ட வேலு!

திராவிட ஆட்சியில் காதல், திருமணம், ரேஷன்கார்ட், விவஸ்தைக் கெட்ட வேலு!

ஊழலின் சிகரம் கார்ப்பரேஷனுக்குப் பிறகு ரேஷன்கார்ட் தான்: காதல் திருமணம் செய்தவர்களுக்கு ரேஷன் கார்டுகளை, அலை கழிக்காமல் உடனே வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு உத்தரவிட்டார். உணவு பொருள் வழங்கல் துறையின் சென்னை மண்டல உதவி ஆணையர்களுடனான ஆய்வுக் கூட்டம், உணவு துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்குதல், போலி அட்டைகளை நீக்குதல், காஸ் அடுப்புகள் வழங்குதல், 1,600 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரித்தல் போன்றவை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தபோது, இந்த ஞானோதயம் ஏன் வரவில்லை? கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசியதாவது: “புதிய ரேஷன் கார்டுகளை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும். குடும்ப அட்டை தயாரானதும் விண்ணப்பத்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இனிமேல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களை குறிப்பிட்ட நாளில் நடத்த வேண்டும்.கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.

திராவிட ஆட்சியில் காதல், திருமணம், ரேஷன்கார்ட்: “காதல் திருமணம் செய்தவர்களின் பெற்றோருக்கு குடும்ப அட்டை இருந்தால், அவர்களது பெயர்களை பெற்றோரின் குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கி, புதிய குடும்ப அட்டை வழங்க உத்தரவிட்டிருந்தும், பெரும்பாலான உதவி கமிஷனர்கள் அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்காமல் அலை கழிப்பதாகவும், மண்டல அலுவலகங்களில் இருந்து தகவல்கள் பெறப்படவில்லை என்று கூறுவதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டைகளை உடனே வழங்க வேண்டும்.

ஆட்சியில் உள்ளவர்கள் எத்தனைபேர் ரேஷன் பொருட்களை சாப்ப்டுகின்றனர்?மேலும், குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஏதாவது ஒரு ஆதாரத்தின் அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும்.உதவி ஆணையர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட ரேஷன் கடையில் ஆய்வு நடத்த வேண்டும். அவ்வாறு ஆய்வுக்கு போகும் போது, கடையில் உள்ள பொருட்கள் விற்பனைக்கு தகுதியானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மனுநீதி சோழனையே வெல்லும் ஊழல் மகாராசாக்கள்: “ரேஷன் கடைகளில் ஓராண்டுக்கு மேல் விற்பனையாளர்கள் பணிபுரிந்தால், அவர்களின் விவரங்களை உயரதிகாரிகளுக்கு தெரிவித்து, அவர்களை பணிமாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் வெளியாட்கள் பணிபுரிந்தால், சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்“, இவ்வாறு வேலு தெரிவித்தார். இத்தனையும் தெரிந்து வைத்துக் கொண்டு, இப்பொழுது ஒழுங்குப் பிள்ளை மாதிரி பேசுவது என்ன நாடகம்?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “திராவிட ஆட்சியில் காதல், திருமணம், ரேஷன்கார்ட், விவஸ்தைக் கெட்ட வேலு!”

 1. M. Nachiappan Says:

  இந்த ரேஷன் கார்டுகளில் என்னத்தான் இருக்கிறது என்று தெரியவிலையே?

  இடை வைத்துக் கொண்டுதான், பெரிய அளவில் ஊழல் நடக்கிறது போலும்!

  அரிசி கடத்தலைப் பற்றி சொல்லவே வேண்டாம்!

  கலர் டிவி அதற்கு மேலே!

  கேஸ் ஸ்டவ், வாங்கியவர்களுக்குத்தான் தெரியும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: