300 கோடி செம்மொழி மாநாடு: பணியில் ஊழல்?

300 கோடி செம்மொழி மாநாடு: பணியில் ஊழல்?

செம்மொழி மாநாட்டுப்பணியில் ஊழல்?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7714

செம்மொழி ஊழல் செம்மையாக நடக்கிறதோ? கோவை மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 76 ஆயிரம் ரூபாய் கமிஷன் பணம் மற்றும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் குறித்த விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், கமிஷன் வழங்கிய கான்ட்ராக்டர்கள், வாங்கிய அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தரத்தைப் பற்றி கவலைப் படாத அதிகாரிகள்: உலகத்தமிழ்ச் செம் மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளா கத்தில் நடக்கிறது. இதையொட்டி, மாநகராட்சி எல்லைக்குள் இணைப்புச் சாலைகள், பூங்கா, சாலையோர பூங்கா, நடைபாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள், பல கோடி ரூபாய் மதிப்பில் அசுர வேகத்தில் நடக்கின்றன. இப்பணியில், தனியார் கான்ட் ராக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வேலைகள், மிகக் குறுகிய கால அவகாசத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகளின் தரத் தைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு போதிய நேரமில்லை; மாநாடு ஏற்பாடு பணிகளிலேயே முழு கவனமும் செலுத்தி வருகின்றனர்.

மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார்: இந்நிலையில், வளர்ச்சிப் பணி கான்ட்ராக் டர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் கமிஷன் தொகை வசூலித்து வருவதாக, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரை நடந்த சோதனையின் போது, கணக்கில் வராத 76 ஆயிரம் ரூபாய் மற்றும் கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “அலுவலக ஆவணங்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது?’ என, மாநகராட்சி முதன்மை கணக்கு அலுவலர் கோமதிநாயகம் மற்றும் அவரது அலுவலக உதவியாளரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கான்ட்ராக்டர்கள் கமிஷன்-இதெல்லாம் சகஜமில்லாயா: மாநகராட்சி எல்லைக்குள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடை முன்னிட்டு சாலை, சாக்கடை, பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகளை கான்ட்ராக்டர்கள் மேற்கொண்டுள்ளனர். கான்ட்ராக்டர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்க அனுமதிக்கும் அதிகாரம் மாநகராட்சி துணைக் கமிஷனருக்கும், அதற்கும் மேற்பட்ட தொகையை அனுமதிக்கும் அதிகாரம் கமிஷனருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணி முடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் இருந்தே “செக்’ வழங்கப்படுகிறது. இவ்வாறான “செக்’ வழங் கும் போது குறிப்பிட்ட கமிஷன் தொகையை, அதிகாரிகள் நிர்பந்தம் காரணமாக கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கான்ட்ராக்டர்கள் கொடுத்துள்ளனர். அவ்வாறாக, ஒரே ஒரு நாளில் வசூலான தொகை தான், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 76 ஆயிரம் ரூபாய். இதை, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ரைடில் ஆவணங்கள் பறிமுதல்: மாநகராட்சி கணக்குப் பிரிவில் இருந்த கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். கணக்குப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு யாரும் உரிமை கோர முன்வராததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.,) 102 பிரிவில் (உரிமை கோரப்படாத சொத்து), லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

கான்ட்ராக்டர்கள் கலக்கம்: லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களில், கான்ட் ராக்டர்கள் தொடர் பான விவரங்கள் உள்ளன. எவ்வளவு லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன, அப்பணிகளைச் செய்த கான்ட் ராக்டர்கள் யார், எந்த தேதியில் பணிகள் துவக்கப் பட்டன, அதற்காக மாநகராட்சியால் அனுமதித்து வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற தகவல்கள் ஆவணங்களில் உள்ளன. இந்த ஆவணங்களில் இடம் பெற்றிருக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, “சம்மன்’ அனுப்பி விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், சம்பந்தப் பட்ட கான்ட் ராக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக