தேவாரம் – ஐயோ பெயரே இப்படியா! :கேரளா -தமிழக எல்லையில் உள்ள செக் போஸ்ட்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் வனப்பகுதி வழி யாக தமிழக அரசின் இலவச ‘டிவி’கள் கடத்துவது தொடர்கிறது.தேவாரம்,சாக்குலூத்து வனப்பாதை,உத்தமபாளை யம் ஏகலூத்து மற்றும் கோம்பை ராமக்கல் மெட்டு வழியாக அரசின் இலவச ‘டிவி’ கடத்துவது தொடர்கிறது.
கழுதை மூலம் கடத்தல் – சீனாவின் முறையை பின்பற்றுதல்: மாவட்டத்தில் பல வீடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதனால் ஒரே வீட்டிற்கு ஒன் றிற்கு மேற்பட்ட இலவச டிவி’ கள் கிடைத்தன.இந்த ‘டிவி’களை 900 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விலை வைத்து கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றை வனப்பாதை வழியாக ஆட்கள் மற்றும் கழுதைகளில் வைத்து கடத்துகின்றனர்.
வனத்துறை மற்றும் போலீசாரை கவனிக்கப்படுதல்: ஒரு டிவி’ யை கேரளாவிற்கு கொண்டு செல்ல 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.கேரளா – தமிழக எல்லையில் தயாராக இருக்கும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி ஜீப்பில் வைத்து அருகில் உள்ள நகரங் களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். தமிழகத்திலிருந்து கடத்தப்படும் ஒரு ‘டிவி’ க்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் லாபம் கிடைப்பதால் இந்த கடத்தலில் பலரும் ஆவலாக ஈடுபடுகின்றனர். வனத்துறை மற்றும் போலீசாரை கவனித்துவிடுவதால் ‘டிவி’ கடத்தல் தங்குதடையின்றி நடந்து வருகிறது.
குறிச்சொற்கள்: இலவச டிவி ஊழல், கழுதைகளில் வைத்து கடத்துதல், போலீசாரை கவனி, ரேஷன் கார்டுதாரர்கள், வனத்துறை, வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி
மறுமொழியொன்றை இடுங்கள்