ராஜாவால் ரூ. 26,685 கோடி நஷ்டம், மத்திய தணிக்கைத்துறை குற்றாச்சாட்டு!

 1. கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, மத்திய தணிக்கைத்துறை அறிக்கை மூலம் குற்றச்சாட்டியுள்ளது! அதற்கு தகுந்த முறையில் பதில் அளிக்கப் படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
 2. ராஜா நிபுணர்கள் சொல்லிய அறிவுரைகள் எதுவும் கேட்காமல், 2001ம் வருடத்தில் கூறப்பட்டுள்ள வரைமுறைப்படி 2008ல் ரூ 1651 கோடிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதால் அத்தகைய நஷடம் ஏற்பட்டுள்ளது.
 3. அப்பொழுது கைப்பேசி உபயோக விகிதம் ஆதாரம் 45 மில்லியன் என்ற கணக்கீட்டில் இருந்தது. ஆனால், அது 2008ல் 300 மில்லியனாகி விட்டது.
 4. ஆக இதன்படி பார்த்தாலே ரூ.11,012 கோடிகளுக்கு கொடுக்க வேண்டியது ரூ.1651 கோடிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது, அதாவது ரூ.9361 கோடிகள் நஷ்டம்! முதல் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில், சி.பி.ஐ சில DoT அதிகாரிகள் மற்றும் தனியார் டெலிகாம் கம்பெனிகள் சேர்ந்து லைசென்ஸ் விதிகள் முதலியவற்றை மீறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

ஒரு பதில் to “ராஜாவால் ரூ. 26,685 கோடி நஷ்டம், மத்திய தணிக்கைத்துறை குற்றாச்சாட்டு!”

 1. vedaprakash Says:

  அமைச்சர் இராசாவால் இழப்பா?
  பொய்ப் பிரச்சாரத்துக்குப் பதிலடி!
  http://www.viduthalai.com/20100409/news10.html

  புதுடில்லி, ஏப். 9_ அமைச்சர் இராசாவால் தொலைத் தொடர்புத் துறை ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு என்று சில செய்தித் தாள்களில் வெளியிடப்பட்ட செய்-திக்கு தொலைத் தொடர்-புத் துறை விளக்கம் அளித்துள்ளது.

  செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட இந்-தச் செய்தி தவறானது என்றும் மக்களை திசை திருப்பும் வகையில் உள்-ளது என்றும் தொலைத்-தொடர்புத் துறை விளக்கமளித்துள்ளது. மேலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலக அஞ்சல் மற்றும் தந்தி தணிக்கை பிரிவு கொடுத்த நினை-வூட்டு அறிக்கையாகும். இது தலைமைக் கணக்-குத் தணிக்கை அலுவ-லரின் அறிக்கையல்ல. தணிக்கைப் பிரிவு மேற்கொண்ட ஆய்வு-கள் குறித்து விளக்கும்-படி தொலைத் தொடர்-புத் துறைக்கு இது அனுப்பி வைக்கப்பட்-டுள்ளது. இது தலை-மைக் கணக்குத் தணிக்கை அலுவலகத்-தின் ஆரம்ப கால விளக்கம் கோரும் அறிக்-கையாகும்.

  தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவல-கத்தின் அஞ்சல் மற்றும் தந்தி துறைக்கான கணக்குத் தணிக்கைப் பிரிவு நிருவாக முடிவு-கள் மற்றும் மூலதன வாய்ப்பு வளங்களில் ஏற்-பட்ட இழப்புகளுக்-கான காரணங்களை சுட்டிக்காட்டி இந்த விளக்கம் கோரும் அறிக்கை வழங்கப்பட்-டது.

  சட்டப்படியான, உண்மையான நில-வ-ரத்தை அடிப்-படை-யாகக் கொண்டு இந்தத் துறை யூஏஎஸ் உரிமங்-கள் மற்றும் ஸ்பெக்ட்-ரம் ஒதுக்கீடு-கள் செய்-தது. இந்த ஒதுக்கீடுகள் குறித்து எடுக்கப்பட்ட முடிவு-களை தெளிவாக-வும், விவ-ரமாகவும் தணிக்-கைப் பிரிவுக்கு எழுத்து மூலம் இத்-துறை இன்று பதில் அளித்துள்ளது. மேலும் தணிக்கைப் பிரிவு எழுப்பி உள்ள பல்-வேறு கேள்வி-களுக்-கும் இதே போன்று விளக்க-மளிக்கப்பட்-டுள்ளது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்-திக் குறிப்பு தெரி-விக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: