லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது!

லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது
நவம்பர் 03,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13743

Important incidents and happenings in and around the world

பொதுவாக பெண்கள் லஞ்சம் / கையூட்டு வாங்கமாட்டார்கள் என்று எண்ணத் தோன்றும். ஆனால், சமீபகாலங்களில் அவர்கள் அந்த விஷயத்தில் ஆண்களையும் மிஞ்சுகிறது ஆச்சரியமாக இருக்கிறது!

சென்னை : குடும்பத் தகராறில் சமாதானம் செய்து வைத்த மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., கணவன் மீது எப்.ஐ.ஆர்., போடாமல் இருக்க, லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 39வது தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ்(52). இவரது மனைவி வெரோனியாவுக்கும், இவருக்கும் இடையே கடந்த 28ம் தேதி இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது கணவர் தன்னை அடிப்பதாக வெரோனியா, 30ம் தேதி எம்.கே.பி., நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, 31ம் தேதி ஜோசப் ராஜை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.ஜோசப் ராஜ், வெரோனியா இருவரிடமும் விசாரணை நடத்திய எம்.கே.பி., நகர் எஸ்.ஐ., குணவதி, இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளார்.

போலீஸ் நிலையத்திலிருந்து ஜோசப் ராஜ் வெளியே செல்லும் போது, அவரை அழைத்த எஸ்.ஐ., குணவதி, “உன் மேல் எப்.ஐ.ஆர்., போடாமல் இருந்ததற்காக, 1,500 ரூபாய் தர வேண்டும்’ என கூறியுள்ளார்.தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் ஜோசப் ராஜ், “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை’ என கூறியுள்ளார். உடனே எஸ்.ஐ., குணவதி ஜோசப் ராஜிடம், “நீ பணம் தராவிட்டால், எழுதிக் கொடுத்த கடிதத்தை கிழித்து போட்டு விட்டு, உன் மீது எப்.ஐ.ஆர்., போட்டு விடுவேன். உன் வீட்டு ரேஷன் கார்டை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து விட்டு போ. 1,500 ரூபாய் பணத்தை கொண்டு வந்து கொடுத்து விட்டு ரேஷன் கார்டை வாங்கிப் போ’ என கூறியுள்ளார்.ஜோசப் ராஜ் இதனை தன் மனைவியிடம் சொல்லியுள்ளார்.

மனைவி வீட்டிற்கு சென்று ரேஷன் கார்டை எடுத்து வந்து போலீசில் கொடுத்துள்ளார். இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு ஜோசப் ராஜ் விடுவிக்கப்பட்டார். அவரிடம் எஸ்.ஐ., குணவதி, “நாளை எனக்கு இரவுப் பணி. நாளை மறுநாள் திங்கள் கிழமை மதியம் 2 முதல் இரவு 9 மணிக்குள் வந்து பணத்தை கொடுத்து விட்டு ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு போ’ என கூறினார்.உடனே ஜோசப் ராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று மாலை 5 மணிக்கு எம்.கே.பி., நகர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஓட்டலில் ஜோசப் ராஜ், எஸ்.ஐ., குணவதிக்காக காத்திருந்தார். ஜோசப் ராஜை ஆட்டோவில் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, பணத்தை வாங்கிக் கொண்டு ரேஷன் கார்டை கொடுத்துள்ளார்.

அப்போது மறைவிடத்தில் நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., சரஸ்வதி தலைமையிலான போலீசார், எஸ்.ஐ., குணவதியை கையும் களவுமாக கைது செய்தனர்.அவரிடமிருந்த 1,500 ரூபாய் பணம், ரேஷன் கார்டு, சி.எஸ்.ஆர்., ரெக்கார்டு புத்தகம் ஆகியவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்.ஐ., குணவதியின் வீட்டிலும் போலீசார் சோதனையிட்டனர்.

ஒரு பதில் to “லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது!”

  1. vedaprakash Says:

    டிராபிக் போலீசுக்கு ‘பளார்’ போதை போலீஸ் கைது
    நவம்பர் 03,2009,00:00 IST
    http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13757

    ராமநாதபுரம் : குடிபோதையில் டிராபிக் போலீசை அடித்த மற்றொரு போலீஸ்காரரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர். கமுதி அருகே வில்லனேந்தலை சேர்ந்த முத்திருளாண்டி. இவர் 14வது பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார். விடுப்பில் இருந்த இவர் நேற்று மாலை குடிபோதையில் ராமேஸ்வரம் திட்டக்குடி பகுதியில் ரகளையில் ஈடுபட்டார். அங்கு வந்த டிராபிக் போலீஸ் திருமூர்த்தியிடம், முத்திருளாண்டி தகராறில் ஈடுபட்டு அவரை அடித்தார். காயம் அடைந்த திருமூர்த்தி ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமேஸ்வரம் டவுன் போலீசார், முத்திருளாண்டியை கைது செய்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: